MG Comet EV வெள்ளை, கருப்பு மற்றும் வெள்ளி என மூன்று விருப்பமான வண்ணங்களில் கிடைக்கும். எம்ஜி மோட்டார்ஸின் இந்த எலக்ட்ரிக் கார், நாட்டின் மிகச்சிறிய அனைத்து எலக்ட்ரிக் வாகனங்களில் ஒன்று மட்டுமல்ல, மூன்று மீட்டருக்கும் குறைவான நீளம், 1,640 மிமீ உயரம் மற்றும் 1,505 மிமீ அகலம் கொண்ட சிறிய கார்களில் ஒன்றாகும். மேலும் புதிய எம்ஜி கொமெட் EV வெளிப்புறத்தில் இலுமினேட் செய்யப்பட்ட MG லோகோ உள்ளது. இத்துடன் எல்.இ.டி ஹெட்லேம்ப்கள், முன்புறம் மற்றும் பின்புறத்தில் எல்.இ.டி லைட் பார்கள், எல்.இ.டி டெயில் லைட்கள், க்ரோம் டோர் ஹேண்டில்கள், 12 இன்ச் ஸ்டீல் வீல் மற்றும் வீல் கவர்கள் வழங்கப்படுகின்றன.
இந்த மாடல் கார், டாடா டியாகோ EV மற்றும் Citroen eC3 போன்ற போட்டியாளர்களுடன் நுழைவு-நிலை EV பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. MG Comet EV இரண்டு கதவு, நான்கு இருக்கை அமைப்பு மற்றும் தினசரி நகரப் பயணங்களுக்கு உகந்ததாக இருக்கும். காரின் உள்புறம் ஸ்பேஸ் கிரே இண்டீரியர் தீம், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ORVM-கள், டில்ட் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ஸ்டீரிங், பவர் விண்டோ, லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன.
இந்த வாகனம் ஈகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மூன்று டிரைவ் மோடுகளை வழங்குகிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 41 ஹெச்பி பவர், 110 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய MG comet EV மாடலில் உள்ள 17.3 கிலோவாட் ஹவர் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 230 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பு மூலம், வாகனம் மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்ல முடியும். இந்த பேட்டரியை 3.3 கிலோ வாட் யூனிட் மூலம் சார்ஜ் செய்யும் போது 7 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துகொள்ள முடியும்.