தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான Hyundai, புதிய 2023 வெர்னாவிற்கான புக்கிங்ஸ்களை கடந்த மாதம் ஏற்க தொடங்கியது. இந்த அடுத்த தலைமுறை வெர்னா EX, S, SX மற்றும் SX (O) என மொத்தம் நான்கு வேரியன்ட்ஸ்களில் வழங்கப்படுகிறது. இந்த செடானின் பேஸ் மாடல் அறிமுக விலை ரூ.10.90 லட்சத்தில் தொடங்கி, டாப்-ஸ்பெக் மாடலின் அறிமுக விலை ரூ.17.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. இந்த விலைகள் ட்ரிம் வேரியன்ட்டிற்கு ஏற்ப மாறுகின்றன.
ஆல்-நியூ ஹூண்டாய் வெர்னா அதன் போட்டியாளர்களை விட சற்றே பெரியது மற்றும் வோக்ஸ்வாகன் விர்டஸ், ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஹோண்டா சிட்டி ஆகியவற்றிலிருந்து விலகி 2,670 மிமீ பிரிவில் லீடிங் வீல்பேஸைக் கொண்டுள்ளது. இந்த புதிய வெர்னாவின் பெரிய வீல்பேஸ் செக்மென்ட்டில் மிகப்பெரிய பூட் ஸ்பேஸ் (528 லிட்டர்) கொண்டுள்ளதையும் உறுதி செய்கிறது. புதிய ஹூண்டாய் வெர்னா 4,535 மிமீ நீளம் 1,475 மிமீ உயரம் கொண்டது
புதிய வெர்னாவின் முன்பக்கத்தில் LED செட்-அப் உள்ளது. இது காரின் முழு அகலத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் டூயல்-டோன் பீஜ்-பிளாக் இன்டீரியர்ஸ்மற்றும் டாஷ்போர்டு மற்றும் டோர் ட்ரிம்களில் கொடுக்கப்பட்டுள்ள சாஃப்ட் - டச் மெட்டீரியல்ஸ் காரணமாக மிகவும் ஆடம்பரமாக உணர வைக்கிறது. இந்த 2023 வெர்னாவில் 2 எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஒன்று 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின், மற்றொருன்று 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் ஆகும்.
இதில் டர்போ-பெட்ரோல் எஞ்சின் 160hp மற்றும் 253Nm பீக் டார்க்-ஐ உருவாக்குகிறது மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு DCT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மறுபுறம்,நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் 115hp பவர் மற்றும் 144Nm பீக் டார்க்-ஐ உருவாக்குகிறது. மேலும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஒரு IVT ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அம்சங்களை பொறுத்தவரை இந்த காரில் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் டூயல்-ஸ்கிரீன் செட்டப்பை பெறுகிறது.
மேலும் இதில் இது ப்ளூடூத் கனெக்டிவிட்டி , ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உள்ளிட்ட அம்சங்களும் இருக்கின்றன. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை இயக்குவதில் கார் ஆர்வலர்கள் உற்சாகமடைவார்கள் என நிறுவனம் கூறுகிறது. இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கும் பிற அம்சங்களில் 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், காற்றோட்டமான முன் இருக்கைகள், 64-கலர் ஆம்பியன்ட் லைட்டிங், ஒரு Bose ஆடியோ சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ஸ்மார்ட் ட்ரங்க் உள்ளிட்டவை அடங்கும்.