முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » குறிப்பிட்ட கார்களுக்கு ரூ. 1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் ஹூண்டாய் இந்தியா!

குறிப்பிட்ட கார்களுக்கு ரூ. 1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் ஹூண்டாய் இந்தியா!

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது வாகனங்களுக்கு இந்த நவம்பர் மாதத்தில் ரூ.15,000 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் மதிப்பிலான சலுகைகளை வழங்குகிறது.

 • 16

  குறிப்பிட்ட கார்களுக்கு ரூ. 1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் ஹூண்டாய் இந்தியா!

  தீபாவளி பண்டிகை கடந்த வாரத்தோடு முடிந்து விட்டாலும் கூட , தீபாவளி சீசனையொட்டி அறிவிக்கப்பட்ட சலுகை நன்மைகள் குறிப்பாக ஆட்டோமொபைல் சந்தையில் இன்னும் வழங்கப்பட்டு வருகின்றன. நாட்டில் இருக்கும் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் நடப்பு மாதமான நவம்பர் 2021-ல் வாடிகையாளர்களுக்கு பல லாபகரமான சலுகைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது வாகனங்களுக்கு இந்த நவம்பர் மாதத்தில் ரூ.15,000 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் மதிப்பிலான சலுகைகள் மற்றும் நன்மைகளை வழங்குகிறது. வழக்கம் போல் ஹூண்டாய் ஐ20 என் லைன், ஹூண்டாய் வென்யூ, ஹூண்டாய் வெர்னா, ஹூண்டாய் க்ரெட்டா, ஹூண்டாய் எலன்ட்ரா மற்றும் ஹூண்டாய் டக்சன் ஆகியவற்றில் எந்தவிதமான தள்ளுபடிகள் அல்லது நன்மைகளை வழங்கவில்லை.நவம்பர் 2021-ல் ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களில் கிடைக்கும் தள்ளுபடிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம். ஹூண்டாய் நிறுவனத்தின் பிற கார்களில் கிடைக்கும் தள்ளுபடிகளை தற்போது பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 26

  குறிப்பிட்ட கார்களுக்கு ரூ. 1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் ஹூண்டாய் இந்தியா!

  ஹூண்டாய் சான்ட்ரோ (Hyundai Santro): ஹூண்டாய் சான்ட்ரோ பேசிக் எரா ட்ரிமிற்கு ரூ.10,000 ரொக்க தள்ளுபடியும் மற்ற அனைத்து டிரிம்களிலும் ரூ.25,000 ரொக்க தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது. எனினும் இந்த ரொக்க தள்ளுபடிகள் பெட்ரோல் வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும், சிஎன்ஜி வகைகளில் அல்ல. இது தவிர சான்ட்ரோவின் அனைத்து வேரியன்ட்களுக்கும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.10,000 மற்றும் கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ரூ.5000 வழங்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 36

  குறிப்பிட்ட கார்களுக்கு ரூ. 1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் ஹூண்டாய் இந்தியா!

  ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios): கிராண்ட் ஐ10 நியோஸ் 1.0 லிட்டர் பெட்ரோல் வேரியன்ட்களுக்கு Rs.35,000 கேஷ் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. 1.2-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2-லிட்டர் டீசல் வேரியன்ட்களுக்கு ரூ.20,000 மகேஷ் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இதன் அனைத்து வேரியன்ட்களுக்கும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.10,000 மற்றும் கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ரூ.5,000. வழங்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 46

  குறிப்பிட்ட கார்களுக்கு ரூ. 1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் ஹூண்டாய் இந்தியா!

  ஹூண்டாய் ஆரா (Hyundai Aura): இந்த மாடலின் CNG வேரியன்ட்ஸ்களின் மீது கேஷ் டிஸ்கவுண்ட் இல்லை. 1.0 லிட்டர் பெட்ரோல் வேரியன்ட்கள் மீது ரூ.35,000 கேஷ் டிஸ்கவுண்ட் உள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டீசல் வேரியன்ட்களுக்கு ரூ.10,000 கேஷ் டிஸ்கவுண்ட்அளிக்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 56

  குறிப்பிட்ட கார்களுக்கு ரூ. 1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் ஹூண்டாய் இந்தியா!

  ஹூண்டாய் ஐ20 (Hyundai i20): ஹூண்டாய் i20 வாங்குபவர்களுக்கு ரூ.25,000 கேஷ் டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்றாலும் இந்த சலுகை 1.0 லிட்டர் பெட்ரோல் iMT வேரியன்ட்களுக்கு மட்டுமே. ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் iMT மற்றும் டீசல் MT வேரியன்ட்களில், எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.10,000 மற்றும் கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ரூ.5,000 வழங்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 66

  குறிப்பிட்ட கார்களுக்கு ரூ. 1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் ஹூண்டாய் இந்தியா!

  ஹூண்டாய் கோனா (Hyundai Kona): ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியில் ரூ.1.5 லட்சம் வரை கேஷ் டிஸ்கவுண்ட்டை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES