முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திய ஹூண்டாய் க்ரேட்டா.. புதிய வசதிகள் இதுதான்!

பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திய ஹூண்டாய் க்ரேட்டா.. புதிய வசதிகள் இதுதான்!

கிரேட்டாவின் அனைத்து வகை கார்களுக்கும் த்ரீ பாயின்ட் சீட்பெல்ட் வசதியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அட்ஜஸ்ட் செய்து கொள்ளக் கூடிய வகையில் அமைந்த ஹெட் ரெஸ்ட் மற்றும் பின்பக்க சீட்டுகளுக்கு டூ ஸ்டேப் ரேக்லைன் பங்க்ஷன் ஆகியவை தரப்பட்டுள்ளன.

  • 17

    பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திய ஹூண்டாய் க்ரேட்டா.. புதிய வசதிகள் இதுதான்!

    வாடிக்கையாளர்களின் மிகவும் விருப்பமான ஹூண்டாய் க்ரேட்டா தன்னுடைய பாதுகாப்பு வசதிகளை தற்போது மேம்படுத்தியுள்ளது. தன்னுடைய அனைத்து எஸ்யூவி வகை கார்களுக்கும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி E, EX, S, S+, SX, மற்றும் SX(O) ஆகியவை இரண்டு பவர்ட்ரைன் விருப்பங்களுடன் கிடைக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 27

    பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திய ஹூண்டாய் க்ரேட்டா.. புதிய வசதிகள் இதுதான்!

    அதன்படி தற்போது கிரேட்டாவின் அனைத்து வகை கார்களுக்கும் த்ரீ பாயின்ட் சீட்பெல்ட் வசதியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அட்ஜஸ்ட் செய்து கொள்ளக் கூடிய வகையில் அமைந்த ஹெட் ரெஸ்ட் மற்றும் பின்பக்க சீட்டுகளுக்கு டூ ஸ்டேப் ரேக்லைன் பங்க்ஷன் ஆகியவை தரப்பட்டுள்ளன.. இவற்றை தவிர எஸ்யூவி ரக கார்களின் முன்பக்க சீட்டுகளுக்கு 60:40 ஸ்ப்ளிட் பங்க்ஷன் அளிக்கப்பட்டுள்ளது. இவை கிரேட்டாவின் அனைத்து வகை ஸ்டாண்டர்ட் கார்களுக்கும் பொதுவானதாக அமல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES

  • 37

    பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திய ஹூண்டாய் க்ரேட்டா.. புதிய வசதிகள் இதுதான்!

    15 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 15 லிட்டர் டீசல் இன்ஜின் என்ற இரண்டு வகை தேர்வுகளுடன் கூடிய, BS6 பேஸ் 2 RDE விதிமுறைகளுக்கு உட்பட்டு அளிக்கிறது. முன்பக்கத்தில் 113 பிஎச்டி மற்றும் 143.8Nm பொருந்தக்கூடிய 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஐ வி டி யூனிட் பொருத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக 113 BHP மற்றும் 250 Nm டார்க் ஆகியவற்றுடன் பொருந்தக்கூடிய 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 47

    பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திய ஹூண்டாய் க்ரேட்டா.. புதிய வசதிகள் இதுதான்!

    சமீபத்தில் கிடைத்துள்ள செய்திகளின்படி ஹூண்டாய் நிறுவனமானது தன்னுடைய அனைத்து வகை கார்களுக்கும் 12,600 வரை விலையை உயர்த்தி உள்ளதாக தெரிகிறது.மேலும் கடந்த மார்ச் மாதம் தான் ஹூண்டாய் நிறுவனமானது தன்னுடைய க்ரேட்டா என் லைன் லைட் எடிஷனை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES

  • 57

    பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திய ஹூண்டாய் க்ரேட்டா.. புதிய வசதிகள் இதுதான்!

    எஸ்யூவி மாடலின் ஸ்போர்ட் வெர்ஷனாக ஆக கருதப்படும் இது குறிப்பாக பிரேசில் சந்தையை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது. காஸ்மெட்டிக் மேம்பாடுகளுடன் முழுவதும் கருப்பு நிறத்தில் இது தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் புதிய கிரில் ஆனது தற்போது சந்தையில் இருக்கும் ஸ்டாண்டர்ட் மாடலிளிருந்து இதனை வித்தியாசப்படுத்தி காண்பிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 67

    பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திய ஹூண்டாய் க்ரேட்டா.. புதிய வசதிகள் இதுதான்!

    புதிய கிரில், அளவுரு வடிவமைப்பு மற்றும் ஏர்வென்டிலேஷன் வசதி ஆகியவை தான் இதன் சிறப்புகளாக கூறப்படுகின்றன. முன் பக்க பம்பரில் செங்குத்தாக அடுக்கப்பட்ட மூன்று விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிரில்லுக்களுக்கிடையே உள்ள எல் இ டி முகப்பு விளக்குகள் முன் பக்கத்திற்கு பரந்த ஒரு தோற்றத்தை அளிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 77

    பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திய ஹூண்டாய் க்ரேட்டா.. புதிய வசதிகள் இதுதான்!

    புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 17 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் க்ளாஸ் பிளாக் ஃபினிஷ், விண்டோ சில்ஸ் ஆகியவற்றைத் தவிர இதில் புதிதாக வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.க்ரேட்டா என் லைன் நைட் எடிஷனில் வெளிவரும் அனைத்து கார்களும் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் நான் வெளிவரவிருக்கின்றன. உட்புறம் மற்றும் வெளிப்புற வடிவம் என அனைத்திலும் முழுக்க முழுக்க கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES