முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » கார் பேட்டரியை நீங்களே மாற்றுவது ஈஸிதான்.!  பணத்தை சேமிக்க சூப்பர் டிப்ஸ்..

கார் பேட்டரியை நீங்களே மாற்றுவது ஈஸிதான்.!  பணத்தை சேமிக்க சூப்பர் டிப்ஸ்..

ஒரு கார் அல்லது வாகனத்தின் சீரான செயல்பாட்டை உறுதி செய்ய அதன் பேட்டரி எப்போதுமே நல்ல கண்டிஷனில் இருப்பது அவசியம்.

 • 16

  கார் பேட்டரியை நீங்களே மாற்றுவது ஈஸிதான்.!  பணத்தை சேமிக்க சூப்பர் டிப்ஸ்..

  ஒரு கார் என்று எடுத்து கொண்டால் அதிலிருக்கும் லைட்ஸ்களை எரிய வைக்க, இக்னிஷன் (எஞ்சினை ஸடார்ட் செய்ய எரிபொருளை எரிக்கத் தொடங்கும் வாகனத்தின் எலெக்ட்ரிக்கல் சிஸ்டம்) மற்றும் காரில் இருக்கும் பிற எலெக்ட்ரிக்கல் டிவைஸ்களை இயக்குவது போன்ற பல செயல்பாடுகளுக்கு காரின் பேட்டரியை பொறுப்பாகும். காரின் பேட்டரியை மாற்ற நீங்கள் வழக்கமாக எடுத்து செல்லும் மெக்கானிக்கிடம் எடுத்து செல்லலாம் என்றாலும் செலவை குறைக்க, கொஞ்சம் நீங்கள் முயற்சி செய்தால் வீட்டிலேயே கூட நீங்களே உங்களது காரின் பேட்டரியை மாற்றி விடலாம். ஏனென்றால் கார் பேட்டரியை மாற்றுவது ராக்கெட் சயின்ஸ் அல்ல, சில டூல்ஸ்களை பயன்படுத்தி எளிதாக செய்யலாம், பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

  MORE
  GALLERIES

 • 26

  கார் பேட்டரியை நீங்களே மாற்றுவது ஈஸிதான்.!  பணத்தை சேமிக்க சூப்பர் டிப்ஸ்..

  இதை செய்வதற்கான எளிதான வழிமுறைகள் இங்கே: கார் பேட்டரியை கண்டறியவும் : முதலில் காரை உங்களுக்கு வசதியான இடத்தில பார்க் செய்து விட்டு பின் காரின் எஞ்சினை ஆஃப் செய்து விடுங்கள். அதன் பின் கீ ஸ்லாட்டில் இருந்து சாவியை அகற்றவும். பேட்டரியை நீங்கள் சரியாக கண்டறிந்து அதை தொடும் முன், இன்ஜின் சூடு ஆறி கூலாக இருப்பதை உறுதி செய்யவும். பெரும்பாலான காரில் பேட்டரிகள் வாகனத்தின் முன்புறத்தில், பானட்டின் கீழ், பிளாஸ்டிக் அல்லது மெட்டல் ட்ரேவில் பொருத்தப்பட்டிருக்கும். இருப்பினும் சில கார்களில் அவற்றின் பேட்டரிகல் வாகனத்தின் பின்புறத்தில் உள்ள Trunk-ல் இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 36

  கார் பேட்டரியை நீங்களே மாற்றுவது ஈஸிதான்.!  பணத்தை சேமிக்க சூப்பர் டிப்ஸ்..

  பேட்டரி டெர்மினல்ஸ்களை டிஸ்கனெக்ட் செய்யவும் : கேபிள்களால் கனெக்ட் செய்யப்பட்ட 2 டெர்மினல்களுடன் பேட்டரிகள் வருகின்றன. அவை பிளாஸ்டிக் கவர்களால் மூடப்பட்டிருக்கலாம். இதில் பிளாக் கலர் நெகட்டிவ் மற்றும் ரெட் கலர் பாசிட்டிவ் ஆகியவை அடங்கும். மேலும் இந்த டெர்மினல்ஸ்கள் பாசிட்டிவ் (+) மற்றும் நெகட்டிவ் (-) என்று குறிக்கப்படலாம். நீங்கள் work gloves மற்றும் ஐ ப்ரொட்டக்ஷன் அணிந்திருப்பதை உறுதி செய்து கொண்டு, முதலில் நெகட்டிவ் கேபிளை டிஸ்கனெக்ட் செய்யவும். பிறகு பேட்டரி டெர்மினலுடன் நெகட்டிவ் கனெக்டரை டைட் செய்திருக்கும் போல்ட்டை தளர்த்த wrench டூலை பயன்படுத்தவும். Bolt லூஸானதும் கேபிள் கனெக்டரை மெதுவாக முன்னும் பின்னுமாக ட்விஸ்ட் செய்து, பேட்டரி டெர்மினலில் இருந்து ரிமூவ் செய்ய அதை மேலே உயர்த்தவும். பின் இதே போல செய்து பாசிட்டிவ் கேபிளையும் அகற்றவும்.

  MORE
  GALLERIES

 • 46

  கார் பேட்டரியை நீங்களே மாற்றுவது ஈஸிதான்.!  பணத்தை சேமிக்க சூப்பர் டிப்ஸ்..

  பழைய பேட்டரியை அகற்றுங்கள் : பொதுவாக கார் பேட்டரிகள் அவற்றின் மீது ஒரு மெட்டல் பார் அல்லது அடியில் ஒரு மெட்டல் கிளாம்ப் பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பாக காரில் வைக்கப்படுகின்றன. எனவே ஹோல்டிங் பார் அல்லது கிளாம்பை பாதுகாக்கும் Bolt-ஐ லூஸ் செய்யவும். Bolt-ஐ அகற்றி அதன் கன்சோலில் இருந்து பேட்டரியை வெளியே எடுக்கவும். கார் பேட்டரியினுள் Caustic liquid இருக்கும். எனவே, பேட்டரியை அகற்றும் போது அதை நிமிர்த்தி நேராக (upright position) எடுக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 56

  கார் பேட்டரியை நீங்களே மாற்றுவது ஈஸிதான்.!  பணத்தை சேமிக்க சூப்பர் டிப்ஸ்..

  பேட்டரி ட்ரே மற்றும் டெர்மினல் கனெக்டர்களை க்ளீன் செய்யவும் : பேட்டரி டெர்மினல் கனெக்டர்களில் காலப்போக்கில் அரிப்பு ஏற்படுகிறது, இது சாதாரணமானது. எனவே பேட்டரியை அதன் கன்சோலில் இருந்து அகற்றிய பிறகு, கனெக்டர்களை முழுமையாக சுத்தம் செய்யவும். பேட்டரி கிளீனர் மற்றும் வயர் பிரஷ்-ஐ பயன்படுத்தி பேட்டரி ட்ரேயையும் சுத்தம் செய்யவும். பேக்கிங் சோடா பேஸ்ட்டையும் பயன்படுத்தலாம். சுத்தம் செய்த பிறகு அனைத்தையும் உலர வைக்கவும்.

  MORE
  GALLERIES

 • 66

  கார் பேட்டரியை நீங்களே மாற்றுவது ஈஸிதான்.!  பணத்தை சேமிக்க சூப்பர் டிப்ஸ்..

  புதிய பேட்டரியை இன்ஸ்டால் செய்யவும் : புதிய பேட்டரியை இன்ஸ்டால் செய்யும் போது ரெட் மற்றும் பிளாக் டெர்மினல்கள் சரியாக பொசிஷனில் அமைந்திருப்பதை உறுதி செய்யவும். பிறகு நீங்கள் வாங்கி வைத்திருக்கும் புதிய பேட்டரியை காரில் உள்ள ஸ்லாட்டில் மற்றும் மவுண்டிங் ஷெல்ஃப் மீது இறக்கி வைக்கவும். இப்போது கிளாம்ப் அல்லது ஹோல்ட்-டவுன் மெட்டல் பார்-ஐ இணைத்து பேட்டரி பாதுகாப்பாக இருக்க போல்ட்டை டைட் செய்யவும். பாசிட்டிவ் கேபிளை முதலில் பேட்டரியுடன் இணைக்கவும். பின் கேபிளை டெர்மினலில் தள்ளி போல்ட்டை டைட் செய்யவும். நெகட்டிவ் கேபிளை பேட்டரியுடன் இணைக்க இதே செயல்முறையை செய்யவும். பேட்டரியை இன்ஸ்டால் செய்த பின் காரை ஸ்டார்ட் செய்து பார்ப்பதன் மூலம் பேட்டரி நன்றாக வேலை செய்கிறதா என்பதை சரி பார்க்கவும்.

  MORE
  GALLERIES