முதல் உலகப் போர் நடைபெற்ற சமயம் 1913 ஆம் ஆண்ட தொடங்கப்பட்டது தான் இந்த பிஎம்டபிள்யூ நிறுவனம். ஜெர்மன் பிராண்டான BMW இன் பெயர் ஜெர்மனியின் பவேரியா பகுதியின் பெயருடன் தொடர்புடையது. முதலாம் உலகப் போர் நடைபெற்ற போது, ஜெர்மன் ராணுவத்திற்கு போர் விமானத்தின் எஞ்சினை தயாரித்து கொடுத்தது இந்த நிறுவனம். அப்போது அந்த நிறுவனம் பேயரிஸ் மோட்டோரன் வெர்க் என்று அழைக்கப்பட்டது.
முதல் உலகப் போர் முடிந்தவுடன் வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் படி ஜெர்மனியில் போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பது தடை செய்யப்பட்டது. அப்போது 1923 ஆம் ஆண்டு முதல் மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கத் தொடங்கியது பிஎம்டபிள்யூ நிறுவனம். அதன் பிறகு 1928 ஆம் ஆண்டு முதல் கார் தாயரிப்பில் இறங்கியது பிஎம்டபிள்யூ நிறுவனம்.
மூன்று ராணுவ வீரர்கள் ஒன்றாக அமர்ந்து எந்தப் பகுதிக்கும் எளிதாகச் சென்று தாக்கிவிட்டு பத்திரமாகத் திரும்பும் மோட்டார் சைக்கிள் இதுதான்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லோகோவை கவனித்திருக்கிறீர்களா? அது ஒரு விமானத்தின் புரபோல்லர் போல இருக்கும். பழைய பாசத்தில் தான் தனது லோகோவை இப்படி விமான எஞ்சினின் புரபொல்லர் போல வடிவமைத்திருக்கிறது பிஎம்டபிள்யூ நிறுவனம்.
1913 ஆம் ஆண்டு ராப் மோட்டார்ன் வெர்க் என்ற பெயரில் தொடங்கி கிட்டத்தட்ட ஐந்து முறை பெயர்கள் மாற்றப்பட்டு இப்போதைய பிஎம்டபிள்யூ பெயரை அடைந்திருக்கிறது. தற்போதைய பெயரின் முழுப் பெயர் பவேரியா மோட்டார் ஒர்க்ஸ்… அதன் சுருக்கம் தான் BMW. பாதுகாப்பு மற்றும் சொகுசான பயணத்திற்கு என்றுமே உறுதியளிக்கிறது பிஎம்டபிள்யூ. அதனால் தான் பலரும் இந்தக் கார்களை மிகவும் விரும்புகிறார்கள்.