முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » அட்டகாசமான வசதிகளுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் ஹோண்டா ஷைன்..!

அட்டகாசமான வசதிகளுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் ஹோண்டா ஷைன்..!

நடுத்தர மக்களின் டூ வீலர் கனவை நிறைவேற்றும் நோக்கத்தில் பட்ஜெட் விலையில் புதிய ஹோண்டா ஷைன் 100 சிசி பைக்கை அறிமுகம் செய்திருக்கிறது ஹோண்டா நிறுவனம்.

 • 16

  அட்டகாசமான வசதிகளுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் ஹோண்டா ஷைன்..!

  ஹோண்டா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அனைத்து வகையான மக்களுக்கும் ஏற்ற வகையில் இரு சக்கர வாகனங்களை தயாரித்து வெற்றிகரமாக சந்தைப் படுத்தி வருகிறது. சாமானியர்கள் முதல் பெரிய பணக்காரர்கள்  வரை தேர்வு செய்து வாங்கும் வகையில் பல வேரியண்ட்டுகளில் இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்து வருகிறது ஹோண்டா நிறுவனம். அந்த வகையில் புதிய வரவாக 65 ஆயிரம் ரூபாய்க்கு 100 சிசி ஷைன் பைக்கை அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா நிறுவனம்.

  MORE
  GALLERIES

 • 26

  அட்டகாசமான வசதிகளுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் ஹோண்டா ஷைன்..!

  குறைந்த விலை என்பதால் பிரீமியம் மற்றும் ஆடம்பரமான வசதிகள் இந்த பைக்கில் இல்லை. ஆனாலும், இரு சக்கர வாகனத்திற்கு தேவையான அத்தனை அடிப்படை அம்சங்களும் இந்த 100 சிசி ஷைனில் இருக்கிறது. என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 36

  அட்டகாசமான வசதிகளுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் ஹோண்டா ஷைன்..!

  கருப்பு நிற ஹெட்லேம்ப் கௌல் மற்றும் 5 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், மிகவும் எளிமையான ஐந்து விதமான வண்ணங்களில் இந்த புதிய ஷைன் கிடைக்கிறது. சிவப்பு நிற கிராஃபிக்குகள் கொண்ட கருப்பு, நீல நிற கிராஃப்பிக்குடன் கூடிய கருப்பு, தங்க நிற ஹைலைட்டுகள் கொண்ட கருப்பு, பச்சை நிற கோடுகள் கொண்ட கருப்பு மற்றும் சாம்பள் நிறத்துடன் கூடிய கருப்பு ஆகிய நிறங்களில் இந்த பைக்குகள் கிடைக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 46

  அட்டகாசமான வசதிகளுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் ஹோண்டா ஷைன்..!

  எஞ்சினை பொருத்தவரை இந்த பைக்கில் 100சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது இந்த பைக்கில். இந்த எஞ்சின் 7.61 பிஎச்பி பவரையும், 8.05 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இதில் இணைக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக இந்த மோட்டாரை ஹோண்டா ஓபிடி 2 விதிகளுக்கு இணங்க உருவாக்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த எஞ்சின் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 60 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என்று சொல்லப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 56

  அட்டகாசமான வசதிகளுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் ஹோண்டா ஷைன்..!

  ஹாலோஜன் ஹெட்லேம்ப், பல்ப் இன்டிகேட்டர்கள், ஸ்பீடோ மீட்டர் அடங்கிய ட்வின் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஓடோமீட்டர் மற்றும் ஃப்யூவல் கேஜ் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. இத்துடன், சைடு ஸ்டாண்டு சென்சார் மற்றும் சிபிஎஸ் ஆகியவையும் இந்த மலிவு விலை பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் முன் பக்கத்திலும், டூயல் ஷாக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. டிரம் பிரேக்குகள் இரு வீல்களிலும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 66

  அட்டகாசமான வசதிகளுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் ஹோண்டா ஷைன்..!

  ஐந்து ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து விதமான சாலைக்கும் ஏற்ற டயர்கள் ஷைன் 100இல் உள்ளது. இத்தனை சிறப்பு வசதிகளையும் தாங்கிய ஹோண்டா ஷைன் 100 பைக் 64,900 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது மும்பை எக்ஸ் ஷோ ரூம் விலை மட்டுமே. சாதாரண மக்களும் வாங்கி பயனடையும் வகையில் பட்ஜெட் விலையில் இந்த பைக்கை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஹோண்டா நிறுவனம்.

  MORE
  GALLERIES