ஜப்பானிய வாகன உற்பத்தியாளரான ஹோண்டா நிறுவனம் இந்த நிதியாண்டில் சில புதிய சலுகை திட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. மேலும் இதன் மூலம் அதிக லாபத்தையும் ஈட்ட முடியும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது. இந்த நிதி ஆண்டின் விற்பனை இலக்கை அடைய இந்த ஏப்ரல் மாதத்தில், ஹோண்டா கார்களுக்கு ரூ.33,158 வரை அதிரடி சலுகைகளை தரவுள்ளது. இந்த சலுகைகள் டீலர்ஷிப்பின் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பற்றிய விரிவான தகவல்களை இனி தெரிந்து கொள்வோம்.
ஹோண்டா ஜாஸ் : ஹோண்டா ஜாஸ் கார் பலரின் விருப்பமான வண்டிகளில் ஒன்றாகும், இதற்கு அதிகபட்சமாக ரூ.33,158 வரை தள்ளுபடியை தருகின்றனர். இதில் ரூ. 10,000 ரொக்கத் தள்ளுபடியாகவும் அல்லது ரூ. 12,158 வரையிலான விலையில்லா (எஃப்ஓசி) ஆக்சஸரீஸ்களை தருகின்றனர். கூடுதலாக, எக்ஸ்சேஞ்ச் சலுகையில் வாடிக்கையாளர்கள் ரூ.5,000 வரை சிறப்பு சலுகைகளை பெறலாம். மேலும் இதற்கு ரூ.7,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,000 லாயல்டி போனஸும் வழங்கப்படுகிறது. இத்துடன் கார்ப்பரேட் தள்ளுபடியாக வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,000 தரப்படுகிறது.
ஹோண்டா சிட்டி (5th gen) :இந்த ஹோண்டா சிட்டி மாடல் கார்களுக்கு இந்த நிதி ஆண்டில் பல சலுகைகள் உள்ளது. அதன்படி இந்த காருக்கு ரூ.30,396 சலுகைகள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 5,000 வரை பணத் தள்ளுபடியும், ரூ. 5,396 வரை மதிப்புள்ள எஃப்ஓசி ஆக்சஸரீஸ்களும் கிடைக்கும். மேலும் கார் எக்ஸ்சேஞ்ச் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.5,000 தள்ளுபடியையும் பெறலாம். ஹோண்டா வாடிக்கையாளர்கள் 5,000 ரூபாய் லாயல்டி போனஸ் மற்றும் 7,000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெறலாம். இத்துடன் ரூ.8,000 கார்ப்பரேட் தள்ளுபடியும் கிடைக்கிறது.
ஹோண்டா WR-V :ஏப்ரல் 2022'இல், ஹோண்டா WR-V மாடல் காரை வாங்கினால் ரூ. 26,000 வரை சலுகைகளை பெறலாம். இதில் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும் ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடியும் அடங்கும். தற்போதுள்ள ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு 5,000 ரூபாய் லாயல்டி போனஸ் கிடைக்கிறது. இத்துடன் 7,000 ரூபாய் ஹோண்டா ஆட்டோமொபைல் எக்ஸ்சேஞ்ச் போனஸையும் நீங்கள் பெறலாம்.
ஹோண்டா சிட்டி (4th gen) : ஹோண்டா சிட்டி கார் வகையின் பழைய 4th gen மாடலுக்கு ரூ.20,000 சலுகைகள் வழங்கப்படுகிறது. இதனுடன் சேர்த்து, ரூ. 5,000 லாயல்டி போனஸ் மற்றும் ரூ. 7,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ்களையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். மேலும் சிறப்பு சலுகையாக ரூ.8,000 கார்ப்பரேட் தள்ளுபடியையும் வழங்குகிறது.
ஹோண்டா அமேஸ் : இந்த மாதம், ஹோண்டா அமேஸ் காரை வாங்குவோருக்கு ரூ.15,000 வரை தள்ளுபடியை பெற முடியும். இதில் அதன்படி, முதலாவதாக ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடி கிடைக்கிறது. அடுத்து தற்போதுள்ள ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 லாயல்டி போனஸாக வழங்கப்படுகிறது. மேலும் 6,000 ரூபாய் ஹோண்டா ஆட்டோமொபைல் எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெறலாம்.