முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » மார்க்கெட்டை கலக்கும் ஹீரோ ஜூம்… சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

மார்க்கெட்டை கலக்கும் ஹீரோ ஜூம்… சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

குறைந்த விலையில் நிறைய சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகியிருக்கும் ஹீரோ ஜூம் ஸ்கூட்டருக்கு கிராக்கி எகிறி வருகிறது. ஜூமின் வருகையால் மற்ற போட்டி நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன.

 • 16

  மார்க்கெட்டை கலக்கும் ஹீரோ ஜூம்… சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  இந்தியாவின் முன்னோடி இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டார் கார்ப்பரேசன் இரு சக்கர வாகன வாடிக்கையாளர்களின் விருப்பம் அறிந்து புதிய புதிய மாடல்களில் வாகனங்களை அறிமுகம் செய்து வருகிறது. இன்று டாப் சேல் பட்ஜெட் பைக் என்ற பெருமையை ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிணெ்டர் பைக் தக்கவைத்து வருகிறது. ஹீரோ நிறுவனம் ஸ்கூட்டர் தயாரிப்பிலும் விற்பனையிலும் கூட கொடி கட்டிப் பறக்கிறது.

  MORE
  GALLERIES

 • 26

  மார்க்கெட்டை கலக்கும் ஹீரோ ஜூம்… சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  ஹீரோ மோட்டோகார்ப் அண்மையில் ஜூம் எனும் புதிய மாடல் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இதன் வருகையால் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சில ஸ்கூட்டர்களின் விற்பனை பாதிப்படையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா மற்றும் டியோ உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியாகவே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஜூம் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

  MORE
  GALLERIES

 • 36

  மார்க்கெட்டை கலக்கும் ஹீரோ ஜூம்… சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  முன்னதாக டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா அல்லது டியோவை வாங்க திட்டம் போட்டிருந்தவர்களின் கவனம் கூட இப்போது ஹீரோ ஜூம்-இன் பக்கம் திரும்பி இருக்கிறது. மிகக் குறைவான விலையில் பல சிறப்பம்சங்களைத் கொண்டது  110 சிசி திறன் கொண்ட ஜூம். இதன் குறைந்தபட்ச விலை ரூ. 68.5 ஆயிரம் ஆகும். அதேவேளையில் இதன் உச்சபட்ச விலையே 76 ஆயிரத்து 6ஆயிரமாக உள்ளது. இந்த குறைந்த விலையால் ஹோண்டா டியோ மற்றும் ஜுபிடர் ஸ்கூட்டர்கள் கடுமையான போட்டியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 46

  மார்க்கெட்டை கலக்கும் ஹீரோ ஜூம்… சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  விலை மட்டுமல்ல, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்திலும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது ஜூம். முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக்கும், பின் பக்கத்தில் மோனோ சஷ்பென்ஷனும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மட்டும் அதன் போட்டியாளர்களுடன் ஜூம் ஒத்துப் போகிறது. பிரேக்கிங் சிஸ்டத்தைப் பொருத்தவரை முன்பக்க வீலில் டிரம் அல்லது டிஸ்க் ஆப்ஷனையும், பின் பக்க வீலில் டிரம் ஆப்ஷனை மட்டுமே ஹீரோ வழங்குகின்றது. பிரேக்கிங் சிஸ்டமாக ஐபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஹீரோ ஜூமில் 8.05 பிஎச்பி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 56

  மார்க்கெட்டை கலக்கும் ஹீரோ ஜூம்… சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  எல்இடி ஹெட்லைட், ஹாலோஜன் ரக டெயில்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. உயரம், நீளம் மற்றும் அகலம் உள்ளிட்ட அம்சங்களை பொருத்தவரை ஆக்டிவா மற்றும் டியோவை விட ஹீரோ ஜூம் அதிகம். வீல் பேசிலும் மற்ற இரண்டு ஸ்கூட்டர்களை விட ஜூமின் வீல் பேஸ் அதிகம். இதேபோல், எடை விஷயத்திலும் இந்த இரு ஸ்கூட்டர்களும் ஜூமை காட்டிலும் பின் தங்கியே இருக்கின்றது.

  MORE
  GALLERIES

 • 66

  மார்க்கெட்டை கலக்கும் ஹீரோ ஜூம்… சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  106 கிலோ மற்றும் 105 கிலோ எடை கொண்டதாக இவை இருக்கின்றன. இப்படி விலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட விசயங்களில் மற்ற நிறுவனங்களின் ஸ்கூட்டர்களை விட ஜூம் பெட்டராக இருப்பதால் பெரும்பாலான வாடிக்கையாளர்களின். விருப்ப தேர்வாக மாறி வருகிறது ஹீரோ ஜூம்.

  MORE
  GALLERIES