பிரபல மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமான Hero MotoCorp-ன் பல அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான Hero Vida V1 இப்போது நாட்டின் முன்னணி இ-காமர்ஸ் வெப்சைட்டான Flipkart-ல் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த Vida V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் இப்போது Flipkart மூலம் வாங்கலாம்.
டிஜிட்டல் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக Hero MotoCorp அறிவித்துள்ளது. தற்போது Vida V1 இ-ஸ்கூட்டர் பெங்களூர், ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி ஆகிய 3 நகரங்களில் மட்டுமே வாங்க கிடைக்கிறது. இந்த இ-ஸ்கூட்டர் விரைவில் மகாராஷ்டிரா, கொச்சி, சென்னை, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் போன்ற பிற முக்கிய நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை தற்போது பெங்களூரில் ரூ.1.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் கிடைக்கிறது.
இதற்கிடையே Flipkart-ல் இந்த ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இதை ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ஆர்டர் செய்து தங்கள் வீட்டு வாசலிலேயே டெலிவரியை பெற்று கொள்ளலாம். புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சில கூடுதல் தள்ளுபடிகளையும் வெப்சைட் வழங்குகிறது. சைட்டில் உள்ள விவரங்களின்படி Vida V1-ஐ வாங்க விரும்பும் யூஸர்கள் SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தினால் கூடுதல் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்டை பெறுவார்கள். இதனிடையே Vida V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது பிளஸ் மற்றும் ப்ரோ உள்ளிட்ட 2 மாடல்களில் கிடைக்கிறது. இந்த 2 வேரியன்ட்ஸ்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் பேட்டரி திறன் மற்றும் வரம்பு ஆகும்.
Hero MotoCorp நிறுவனம் அதன் V1 பிளஸ் வேரியன்ட்ஸ்களில் 3.44kWh பேட்டரியை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் 143 கிமீ ரேஞ்சை கொண்டுள்ளது. அதே நேரம் V1 ப்ரோ 3.94kWh பேட்டரியுடன் வருகிறது, இது165 கிமீ ரேஞ்சை வழங்குகிறது. பிளஸ் மற்றும் ப்ரோ முறையே 85 கிமீ மற்றும் 95 கிமீ Real-world ரேஞ்ச்களை கொண்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.