இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஸ்பிளண்டர் பைக்கிற்கு என்று எப்போதுமே மவுசு இருக்கிறது. ஸ்பிளெண்டர் பைக் அறிமுகம் ஆனதில் இருந்து இப்போது வரை டாப் சேல் பைக்காகவே தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது ஸ்பிளெண்டர் பைக். அதன் அப்டேட்டட் வெர்சனாக அறிமுகமானது சூப்பர் ஸ்பிளண்டர். அதுவும் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. அந்த சூப்பர் ஸ்பிளெண்டரை மேலும் பல தொழில்நுட்பங்களுடன் அப்டேட் செய்திருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்.
டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என இரண்டு விதங்களில் புதிய சூப்பர் ஸ்பிளண்டர் எக்ஸ்டெக் பைக் விற்பனைக்கு வந்துள்ளது. டிரம் பிரேக் தேர்விற்கு ரூ. 83,368ம், டிஸ்க் பிரேக் தேர்விற்கு ரூ. 87,268ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை டெல்லி ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டைலான தோற்றத்தில் Gloss Black, Blazing Red மற்றும் Mat Axis Grey என அசத்தலான மூன்று வண்ணங்களில் இந்த பைக்குகள் கிடைக்கின்றன.
முன்பு பயன்படுத்தப்பட்டு இருந்ததைக் காட்டிலும் ஹை-இன்டென்சிட்டி இடத்தில் எல்இடி லைட் உள்ளது. முழுமையான டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீட் குறித்த விபரம் மட்டுமன்றி பெட்ரோல் நிலவரம், சர்வீஸ் பற்றிய அறிவுறுத்தல்கள் என பல்வேறு தகவல்களை டிஜிட்டல் டிஸ்பிளேவில் தெரிந்து கொள்ளலாம். இது தவிர செல்போனையும் இந்த டிஸ்பிளேவில் இணைத்துக் கொள்ள முடியும்.
இத்துடன், கூடுதல் சிறப்பு அம்சமாக யுஎஸ்பி சார்ஜர் வசதியும் பைக்கில் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன், சைடு ஸ்டாண்டு போட்டு இருந்தால் தானாக வாகனம் ஆஃப் ஆகிவிடும் வசதியும் சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்-டெக் பைக்கில் உள்ளது.இதுதவிர, கூடுதல் பாதுகாப்பான ரைடு அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 125 சிசி பிஎஸ்6 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 10.7 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 10.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன் மோட்டார்சைக்கிளில் மிக சிறந்த எக்கனாமி சிஸ்டமாக ஐ3எஸ் ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. எரிபொருள் சிக்கனத்திற்கு பேருதவியாக இருக்கும். இது போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக்.