இந்திய டூவீலர் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் இன்னும் இரண்டிலிருந்து மூன்று மாதத்திற்குள் புதிதாக ஐந்து டூவீலர் மாடல்களை சந்தையில் களமிறக்குவதற்கு தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் புதிய மாடல்களும், ஏற்கனவே இருக்கும் மாடல்களின் அப்டேட்டட் வெர்ஷன் மற்றும் ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
தற்போது வரை இவற்றைப் பற்றிய சிறப்பு விவரங்கள் ஏதும் அந்நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை என்றாலும் 210cc ஹீரோ கரிஷ்மா, எக்ஸ்ட்ரீம் 160r பைக்கின் அப்டேட் வெர்ஷன் மற்றும் பேஷன் பிளஸ் மற்றும் கிளாமர் மாடல் ஆகியவற்றின் ரிப்ரெஷ்ட் வெர்ஷன் ஆகியவை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.. கூடுதலாக புதிய 125சிசி ஸ்கூட்டர் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.
ஹீரோ கரிஷ்மா XMR : ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் சமீபத்தில் ஹீரோ கரிஷ்மா XMR மற்றும் கரிஷ்மா XMR 210 ஆகிய பைக்குகளின் பெயர்களுக்கு ட்ரேட்மார்க்கை ஃபைல் செய்துள்ளது. கரிஷ்மா XMR பைக் செமி ஃபேர்ட் வெர்ஷனாகவும், கரிஷ்மா XMR 210 பைக் ஆனது XMR பைக்கை விட அதிக சக்தியை கொண்டதாகவும் இருக்கும் என தெரிகிறது. 210 சிசி திறனுடன், லிக்விட் கூலிங் என்ஜின் மற்றும் 3Nm டார்க் ஆகியவை இதில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கிடைத்துள்ள தகவல்களின்படி 6-ஸ்பீடு கியர் பாக்ஸ் இதில் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. வடிவமைப்பு பற்றி பார்க்கையில் கரிஷ்மா எக்ஸ் எம் ஆர் 210 மாடல் ஆனது, எக்ஸ்ட்ரீம் 200S மாடலின் சில அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160r : ஏற்கெனவே இருக்கும் ஹீரோ 160R - ன் அப்டேட்டட் வெர்ஷன் ஆனது சோதனைப்படுத்தப்பட்டு விரைவில் சந்தையில் விற்பனைக்கு வருவதற்கு தயாராக உள்ளது. பழைய மாடலுடன் ஒப்பிடுகையில் புதிய மாடலில் தலைகீழாக பொருத்தப்பட்ட முன்பக்க ஃபோர்க் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதன் விலை சற்று கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றை தவிர்த்து ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனமானது தன்னுடைய பழைய மாடலான ஹீரோ பேஷன் பிளஸ்-ஐ புதிய 100cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் உடன் சந்தையில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஹீரோ கிளாமரும் இந்த நிறுவனத்தின் விரிவுபடுத்துவதற்கு ஒரு பகுதியாக இருக்கும் என்று வதந்தியும் நிலவி வருகிறது. இவற்றுடன் புதிய 125சிசி ஸ்கூட்டர் ஹீரோ நிறுவனத்தால் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.