முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » இந்தியாவில் அடுத்து விற்பனைக்கு வர உள்ள சூப்பரான எஸ்யூவி கார்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.!

இந்தியாவில் அடுத்து விற்பனைக்கு வர உள்ள சூப்பரான எஸ்யூவி கார்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.!

SUV Cars in India | டஸ்டர் எஸ்யூவி மாடல் காரை இந்திய சந்தையில் இருந்து ரெனால்ட் நிறுவனம் அண்மையில் விலக்கிக் கொண்டது. தற்போது அந்த நிறுவனம் 3ஆம் ஜெனரேஷன் டஸ்டர் காரை தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்தக் காரில் புத்தம் புதிய டிசைன், மாடர்ன் இன்டீரியர் மற்றும் புதிய என்ஜின் ஆகிய வசதிகள் இடம்பெற உள்ளன.

  • 15

    இந்தியாவில் அடுத்து விற்பனைக்கு வர உள்ள சூப்பரான எஸ்யூவி கார்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.!

    வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் மார்க்கெட்டில் உள்ள போட்டி ஆகியவற்றிற்கு ஏற்ப கார் மாடல்களை கார் தயாரிப்பு நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக, இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், சர்வதேச கார் உற்பத்தி நிறுவனங்களின் மாடல்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில், நடுத்தர சைஸ்களில் விற்பனைக்கு வர உள்ள 4 எஸ்யூவி கார்கள் குறித்து இந்தச் செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 25

    இந்தியாவில் அடுத்து விற்பனைக்கு வர உள்ள சூப்பரான எஸ்யூவி கார்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.!

    நெக்ஸ்ட் ஜெனரேஷன் ரெனால்ட் டஸ்டர் : டஸ்டர் எஸ்யூவி மாடல் காரை இந்திய சந்தையில் இருந்து ரெனால்ட் நிறுவனம் அண்மையில் விலக்கிக் கொண்டது. தற்போது அந்த நிறுவனம் 3ஆம் ஜெனரேஷன் டஸ்டர் காரை தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்தக் காரில் புத்தம் புதிய டிசைன், மாடர்ன் இன்டீரியர் மற்றும் புதிய என்ஜின் ஆகிய வசதிகள் இடம்பெற உள்ளன.
    இந்தப் புதிய காரை ரெனால்ட் நிறுவனம் 2023 - 2024 கால அளவுக்குள் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய டஸ்டர் கார்கள் சாலைகளில் குறைந்துள்ள நிலையில், அதை ஈடு செய்வதாக புதிய டஸ்டர் மாடல் அமையும் என்று கருதப்படுகிறது. புதிய டஸ்டர் காரில் ஹைபிரிட் பவர் டெரைன் இடம்பெறக் கூடும்.

    MORE
    GALLERIES

  • 35

    இந்தியாவில் அடுத்து விற்பனைக்கு வர உள்ள சூப்பரான எஸ்யூவி கார்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.!

    டாடா CURVV : புதிய CURVV எஸ்யூவி கான்செப்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கார் நடுத்தர சைஸில் வெளியாகலாம் என்பதை அதன் ப்ரிவியூ காட்சிகள் உறுதி செய்கின்றன. பெரிய எஸ்யூவியாக மாற்றம் பெற்று வரும் நெக்ஸான் எக்ஸ் 1 பிளாட்ஃபார்ம் அடிப்படையில் புதிய காரின் மாடல் அமைகிறது. CURVV காரில் எலெக்ட்ரிக் பவர்டெரைன் அமைய உள்ளது.
    இது பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களிலும் வெளியிடப்பட உள்ளது. அதே ஈவி மாடல் காரின் மூலமாக ஏறக்குறைய 500 கி.மீ. மைலேஜ் பெற முடியும். பெட்ரோல் வெர்சன் காரில் 1.5 லி டர்போ என்ஜின் இடம்பெறக் கூடும். அடுத்த 2 ஆண்டுகளில் இந்த மாடல் விற்பனைக்கு வரும்.

    MORE
    GALLERIES

  • 45

    இந்தியாவில் அடுத்து விற்பனைக்கு வர உள்ள சூப்பரான எஸ்யூவி கார்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.!

    நெக்ஸ்ட் ஜெனரேஷன் மஹிந்திரா எக்ஸ்யூவி500 : முன்னதாக வெளியிடப்பட்ட எக்யூவி500 மாடலை மஹிந்திரா நிறுவனம் நிறுத்திக் கொண்டது. அதற்குப் பதிலாக எக்ஸ்யூவி700 என்ற மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த 700 மாடல் காருக்கு சற்று குறைவான வசதிகளை கொண்டதாக எக்ஸ்யூவி500 நெக்ஸ்ட் ஜெனரேஷன் தயாராக உள்ளது. இந்தக் கார் முந்தைய மாடலை விட சிறியதாக இருக்கும். குறிப்பாக ஹூண்டாய் கிரேட்டா, கியா செல்டாஸ் போல காட்சியளிக்கும்.
    இதில் 1.5 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் இடம்பெறும். வெகுவிரைவில் இதன் எலெக்ட்ரிக் வேரியண்ட் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. 2024 - 2025 கால அளவில் இந்தக் கார் விற்பனைக்கு வரும்.

    MORE
    GALLERIES

  • 55

    இந்தியாவில் அடுத்து விற்பனைக்கு வர உள்ள சூப்பரான எஸ்யூவி கார்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.!

    ஹோண்டா எக்ஸ்யூவி : இந்திய சந்தையை மையமாக வைத்து நடுத்த சைஸில் எக்ஸ்யூவி கார் ஒன்றை ஹோண்டா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கு இசட்ஆர்-வி அல்லது எலிவேட் என பெயரிடப்படலாம். சிட்டி சேடான் காரில் உள்ளதைப் போன்ற என்ஜின் இந்தப் புதிய காரில் இடம்பெறும் என தெரிகிறது. புதிய காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் வேரியண்ட்கள் வெளியிடப்பட உள்ளன. இதில், ஹெச்இவி மைல்டு ஹைப்ரிடு டெக்னாலஜி இடம்பெற உள்ளது.

    MORE
    GALLERIES