புதிய நிதியாண்டு துவங்கி உள்ள நிலையில் செமிகண்டக்டர் பற்றாக்குறை நீடித்து வருவதால் வாகனங்களின் விலை அதிகரித்து உள்ளது. விலை உயர்த்தப்பட்டாலும் நாட்டில் இன்னும் சில கார்கள் ரூ.5 லட்சம் பட்ஜெட்டிற்குள் கிடைகின்றன. இந்தியாவில் ரூ.5 லட்சத்திற்குள் கிடைக்கும் சில மலிவு விலை ஹேட்ச்பேக் கார்களை பற்றி இங்கே பார்க்கலாம்.
மாருதி சுசுகி ஆல்டோ: ரூ.3.85 லட்சம் முதல் ரூ.5.56 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் மாருதி சுசுகி ஆல்ட்டோ வாடிக்கையாளர்கள் மலிவு விலையில் வாங்க விரும்பும் கார்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த கார் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டியுடன் கூடிய ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பவர் விண்டோஸ், டூயல் ஏர்பேக்ஸ், EBD உடன் ABS மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்களுடன் வருகிறது. 0.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும் இது 48 PS பவர் 69 Nm பீக் டார்க்கை உருவாக்குகிறது. இந்த கார் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும்.
டட்சன் ரெடி-கோ: 2016-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜப்பானிய நிறுவனத்தின் இந்த கார் ரூ.3.83 லட்சம் முதல் ரூ. 4.95 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த காரில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனக்டிவிட்டியுடன் கூடிய 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் உடன் ஏபிடி, ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் பார்க்கிங் கேமரா, சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகியவை உள்ளன. இந்த கார் 2 இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. இதில் 0.8-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 54 PS பவரையும் 72 Nm பீக் டார்க்கை. 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 68 PS பவரையும் 91 Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது.
மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ: இந்த காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 3.85 லட்சம் முதல் ரூ. 5.56 லட்சமாக உள்ளது. இந்த கார் 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் ஆல்ரவுண்ட் பாடி கிளாடிங்ஸ் ஆகியவற்றால் SUV போன்ற விகிதங்களை கொண்டுள்ளது. இந்த காரில் ஸ்மார்ட்பிளே டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் 68 PS பவர் மற்றும் 90 Nm பீக் டார்க்கை உற்பத்தி செய்கிறது. 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் க்விட்: சமீபத்தில் ரெனால்ட் நிறுவனம் 2022 Kwid India-வை அறிமுகப்படுத்தியது. இந்த கார் ரூ 4.49 லட்சம் முதல் ரூ 5.83 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த 2022 Renault Kwid ஆனது புதிய கலர் ஆப்ஷன்கள் மற்றும் அலாய்கள் போன்ற தோற்றமளிக்கும் டூயல்-டோன் ஃப்ளெக்ஸ் வீல்களுடன் வருகிறது. மேலும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி மற்றும் எலெக்ட்ரிக்கலி அடஜஸ்டபிள் ஓவிஆர்எம், 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வருகிறது. 2 எஞ்சின் ஆப்ஷன்களுடன் வரும் இந்த காரின் 0.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வேரியன்ட் 54 PS பவரையும், 72 Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது, இதன் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 69 PS பவரையும், 99 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்குகிறது.
ஹூண்டாய் சான்ட்ரோ: ரூ.4.86 லட்சம் முதல் ரூ.6.44 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் ஹூண்டாய் சான்ட்ரோவில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் மவுண்டட் கண்ட்ரோல் பட்டன்ஸ, பவர்விண்டோஸ், டூயல் ஏர்பேக்ஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. ஹூண்டாய் சான்ட்ரோ 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் 69 PS பவரையும், 99 Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது.