முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » iPhone 14 மொபைலை வாங்குவதற்கு பதில் கிட்டத்தட்ட அதே விலையில் கிடைக்கும் 5 சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்.!

iPhone 14 மொபைலை வாங்குவதற்கு பதில் கிட்டத்தட்ட அதே விலையில் கிடைக்கும் 5 சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்.!

Top Premium Bikes | ஐபோன் 14-க்கு பதில் கிட்டத்தட்ட அதே விலையில் கிடைக்க கூடிய டாப் 5 மோட்டார் சைக்கிள்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

  • 17

    iPhone 14 மொபைலை வாங்குவதற்கு பதில் கிட்டத்தட்ட அதே விலையில் கிடைக்கும் 5 சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்.!

    ஒரு ஐபோன் வாங்கும் காசுக்கு சிறந்த டூவீலரை வாங்கி விடலாம் என்று பலரும் நகைச்சுவையாக சொல்வதுண்டு. ஒவ்வொரு ஆண்டும் அறிமுகப்படுத்தப்படும் புதிய ஐபோன்களின் விலை லட்சத்திற்கும் நெருக்கமான விலையில் துவங்கி லட்சத்தை தாண்டிய விலையில் விற்கப்படுவது தான் இப்படி சொல்லப்படுவதற்கு காரணம்.

    MORE
    GALLERIES

  • 27

    iPhone 14 மொபைலை வாங்குவதற்கு பதில் கிட்டத்தட்ட அதே விலையில் கிடைக்கும் 5 சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்.!

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஐபோன் 14 சீரிஸின் விலையும் வழக்கம் போல காஸ்ட்லியாக உள்ள நிலையில், ஐபோன் 14-க்கு பதில் கிட்டத்தட்ட அதே விலையில் கிடைக்க கூடிய டாப் 5 மோட்டார் சைக்கிள்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 37

    iPhone 14 மொபைலை வாங்குவதற்கு பதில் கிட்டத்தட்ட அதே விலையில் கிடைக்கும் 5 சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்.!

    டிவிஎஸ் ரோனின்: கடந்த ஜூலை மாதம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது முதல் நியோ-ரெட்ரோ ரோட்ஸ்டரான புதிய டிவிஎஸ் ரோனின் (TVS Ronin) பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கின் துவக்க விலை ரூ. 1.49 லட்சம் ஆகும். 3 வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த பைக்கின் Ronin SS மாடலின் விலை தான் மேலே நீங்கள் பார்த்தது. Ronin DS மற்றும் Ronin TD ஆகிய வேரியன்ட்களின் விலைகள் முறையே ரூ. 1.56 லட்சம் மற்றும் ரூ.1.69 லட்சமாக உள்ளது. இந்த பைக்கில் ரைடர்களுக்கான கனெக்டிவிட்டி, ரைடிங் மோட்ஸ் போன்ற பல அம்சங்கள் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 47

    iPhone 14 மொபைலை வாங்குவதற்கு பதில் கிட்டத்தட்ட அதே விலையில் கிடைக்கும் 5 சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்.!

    யமஹா எஃப்இசட்25: 2022-ஆம் ஆண்டிற்கான நேக்ட் குவாட்டர் லிட்டர் பைக்கான FZ-25 பைக்கை ஆண்டின் துவக்கத்தில் வெளியிட்டது யமஹா நிறுவனம். Yamaha FZ 25 மற்றும் FZS 25 ஆகியவை 249cc, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு, SOHC, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன. இந்த மோட்டார் அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 20.5 ஹெச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 20.1 என்எம் பீக் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் Yamaha FZ25 பைக்கின் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.47 லட்சம் ஆகும்.

    MORE
    GALLERIES

  • 57

    iPhone 14 மொபைலை வாங்குவதற்கு பதில் கிட்டத்தட்ட அதே விலையில் கிடைக்கும் 5 சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்.!

    ஹோண்டா ஹார்னெட் 2.0: LCD பொருத்தப்பட்ட, முற்றிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.34 லட்சமாக உள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 4-ஸ்ட்ரோக் இன்ஜின், 6000 ஆர்பிஎம்-ல், 12.7 கிலோவாட் பவர் மற்றும் 16.1 என்எம் பீக்டார்க்கை உருவாக்குகிறது.

    MORE
    GALLERIES

  • 67

    iPhone 14 மொபைலை வாங்குவதற்கு பதில் கிட்டத்தட்ட அதே விலையில் கிடைக்கும் 5 சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்.!

    பஜாஜ் பல்சர் 250 ட்வின்ஸ்: பஜாஜ் பல்சர் 250 ட்வின்ஸ் பைக்குகள் வழக்கம் போல அட்வென்ச்சர் மற்றும் நேக்ட் ஸ்போர்ட்ஸ் டிசைன்களுடன் பல்சர் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்கின்றன. இந்த சீரிஸில் Pulsar N250 மற்றும் Pulsar F250 பைக்குகள் அடக்கம். இவற்றின் ஆரம்ப விலை ரூ.1.44 லட்சமாக உள்ளது. Pulsar F250 ஒரு செமி-ஃபேர்டு பைக் ஆகும், அதேசமயம் Pulsar N250 ஒரு ஸ்ட்ரீட்ஃபைட்டர் ஆகும்.

    MORE
    GALLERIES

  • 77

    iPhone 14 மொபைலை வாங்குவதற்கு பதில் கிட்டத்தட்ட அதே விலையில் கிடைக்கும் 5 சிறந்த பிரீமியம் பைக்குகளின் பட்டியல்.!

    ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350: சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக்கானது, இதுவரை தயாரிக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளிலேயே மிகவும் எடை குறைவானது. கம்பீர மற்றும் மாடர்ன் லுக் கொண்ட இந்த ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக்கானது ரெபெல் ப்ளூ, ரெபெல் ரெட், ரெபெல் பிளாக், டாப்பர் ஆஷ், டாப்பர் ஒயிட் மற்றும் டாப்பர் கிரே ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் நீங்கள் வாங்க விரும்பும் வேரியன்ட்களை பொறுத்து இந்த பைக்கின் விலை ரூ.1.49 லட்சம் முதல் ரூ.1.68 லட்சமாக உள்ளது.

    MORE
    GALLERIES