முகப்பு » புகைப்பட செய்தி » லைசன்ஸ் இல்லையா.. நோ டென்ஷன்.. இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டக்கூடிய டாப் 5 இ-ஸ்கூட்டர்கள் இதோ!

லைசன்ஸ் இல்லையா.. நோ டென்ஷன்.. இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டக்கூடிய டாப் 5 இ-ஸ்கூட்டர்கள் இதோ!

Electric Bike | சில மின்சார வாகனங்களை உரிமம் எதுவும் இல்லாமல் ஓட்ட அனுமதிக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகமும், அதிகபட்சமாக 250 வாட் சக்தியும் கொண்ட மின்சார வாகனங்களை நீங்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டலாம். இந்த வகையான வாகனங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

  • 16

    லைசன்ஸ் இல்லையா.. நோ டென்ஷன்.. இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டக்கூடிய டாப் 5 இ-ஸ்கூட்டர்கள் இதோ!

    இந்திய சாலைகளில் மிகப்பெரிய டிரக்குகள் முதல் சிறிய வகை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரை பல்வேறு வகையான வாகனங்கள் எப்போதும் சென்று கொண்டே இருக்கும். இந்தியாவின் சட்டங்களின் அடிப்படையில், நீங்கள் ஓட்ட விரும்பும் வாகனத்தின் வகையின் அடிப்படையில் அந்த வாகனங்களை ஓட்டுவதற்கு ஒரு நபருக்கு ஓட்டுநர் உரிமம் என்கிற டிரைவிங் டிசைன்ஸ் அவசியமான ஒன்றாக உள்ளது. உதாரணமாக, கனரக மோட்டார் வாகனம் (HMV) அல்லது இலகுரக மோட்டார் வாகனம் (LMV) ஓட்டுவதற்கு உரிமம் என்பது முக்கியமான தேவையாக இருக்கும். இருப்பினும், அதிகாரப்பூர்வ ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் சில வாகனங்களை நீங்கள் இந்தியாவில் ஓட்டலாம்.

    MORE
    GALLERIES

  • 26

    லைசன்ஸ் இல்லையா.. நோ டென்ஷன்.. இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டக்கூடிய டாப் 5 இ-ஸ்கூட்டர்கள் இதோ!

    ஹீரோ எலக்ட்ரிக் ஃப்ளாஷ் E2
    ஓட்டுநர் உரிமம் தேவையில்லாத மின்சார வாகனப் பிரிவில் இந்த ஹீரோ எலக்ட்ரிக் ஃப்ளாஷ் E2 வாகனமும் அடங்கும். இந்த ஸ்கூட்டர் 48-வோல்ட் 28 Ah லித்தியம்-அயன் பேட்டரியை கொண்டு, 250-வாட் மின்சார மோட்டார் வசதியை பெறுகிறது. இது அதிகபட்சமாக 25 kmph வேகத்தில் பயணம் செய்ய முடியும். இதில் மேலும் சிறப்பான விஷயம் என்னவென்றால், இந்த ஸ்கூட்டரின் எடை 69 கிலோ மட்டுமே. இதன் விலை ரூ.59,099 ஆக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    லைசன்ஸ் இல்லையா.. நோ டென்ஷன்.. இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டக்கூடிய டாப் 5 இ-ஸ்கூட்டர்கள் இதோ!

    ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா E5
    ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா இ5 ஸ்கூட்டர் 250-வாட் மின்சார ஹப் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இதில் லித்தியம்-அயன்/லெட்-அமில பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் 4-5 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகி விடும். மேலும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 55 கிலோமீட்டர் தூரம் செல்ல முடியும். மற்றும் மணிக்கு 42 கிலோமீட்டர் அதிகபட்ச வேகத்தை இது வழங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் வாகனத்திற்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை.

    MORE
    GALLERIES

  • 46

    லைசன்ஸ் இல்லையா.. நோ டென்ஷன்.. இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டக்கூடிய டாப் 5 இ-ஸ்கூட்டர்கள் இதோ!

    ஹாப் லியோ
    எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் பல வித அம்சங்கள் கொண்ட முதன்மையான வாகனம் இந்த ஹாப் லியோ. இதில் USB சார்ஜிங், ஆட்டோமேட்டிக் பார்க்கிங் உதவி, ரிமோட் கீ, சைட் ஸ்டாண்ட் சென்சார், ஆன்ட்டி-தெப்ட் அலாரம் மற்றும் ஜிபிஎஸ் போன்ற அம்சங்களுடன் வருகிறது. மேலும், இந்த ஸ்கூட்டர் முழுமையாக சார்ஜ் செய்தால் 70 முதல் 125 கிமீ வரை பயணிக்கலாம். மேலும் இதற்கும் ஓட்டுநர் உரிமம் அவசியமில்லை..

    MORE
    GALLERIES

  • 56

    லைசன்ஸ் இல்லையா.. நோ டென்ஷன்.. இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டக்கூடிய டாப் 5 இ-ஸ்கூட்டர்கள் இதோ!

    ஜான்டி ப்ரோ
    இந்த எலெக்ட்ரிக் வண்டியில் எலக்ட்ரானிக் உதவியுடனான பிரேக்கிங் சிஸ்டம், கவர்ச்சிகரமான ஹெட் லேம்ப்கள் மற்றும் அலாய் வீல்கள் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜான்டி ப்ரோ வண்டி 249 W மின்சாரம் கொண்டு இயக்கப்படுகிறது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும். மேலும் இது அதிகபட்ச வேகம் என்பது மணிக்கு 25 கிலோமீட்டர். வரை செல்லும். இதன் பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆவதற்கு 6 மணி நேரம் எடுத்து கொள்ளும்.

    MORE
    GALLERIES

  • 66

    லைசன்ஸ் இல்லையா.. நோ டென்ஷன்.. இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டக்கூடிய டாப் 5 இ-ஸ்கூட்டர்கள் இதோ!

    ஜாய் இ-பைக் மான்ஸ்டர்
    ஜாய் இ-பைக் மான்ஸ்டர் பெயரை கேட்டுக்போது இது எதோ மிருகம் போல் தோன்றலாம், ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட வண்டியாகும். இது 250 kW ஹப் மோட்டாரிலிருந்து அதன் ஆற்றலை பெறுகிறது. மேலும், இதில் லித்தியம்-அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது. இந்த மினி பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், அலாய் வீல் மற்றும் பின்புற மோனோ-ஷாக் போன்ற அம்சங்களை வழங்கியுள்ளனர். இதன் விலை ரூ.1,10,000 ஆக உள்ளது.

    MORE
    GALLERIES