முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » குறைந்த செலவில் எரிபொருள்... கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம் - அமைச்சர் நிதின் கட்கரி

குறைந்த செலவில் எரிபொருள்... கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம் - அமைச்சர் நிதின் கட்கரி

பயோ-சிஎன்ஜி என்பது டீசலுக்குப் பதிலாக மலிவானது மற்றும் குறைவான மாசுபடுத்தும் மாற்றுப் பொருள் என்பதை எடுத்துக்காட்டி, உபரி அரிசியான ‘பரளி’யை பயோ-சிஎன்ஜியாக மாற்றுவதற்கு முயற்சி எடுப்பதாக நிதின் கட்கரி கூறியுள்ளார்.

 • 15

  குறைந்த செலவில் எரிபொருள்... கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம் - அமைச்சர் நிதின் கட்கரி

  இன்றைக்கு எரிபொருள்களின் விலை என்பது விண்ணை முட்டும் அளவிற்கு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் தான் குறைந்த உள்நாட்டு எரிபொருள்களை ஏற்றுக்கொள்வதற்கான கொள்கையில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், அதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாகவும் சமீபத்தில் நடைபெற்ற மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 25

  குறைந்த செலவில் எரிபொருள்... கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம் - அமைச்சர் நிதின் கட்கரி

  இதோடு எத்தனால், மெத்தனால், பயோ சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான அரசின் முன்முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி , குறைந்த செலவில் இறக்குமதி மாற்றுக் கொள்கையில் அரசு முன்னேறி வருவதாகத் தெரிவித்துள்ளார். இதனால் போக்குவரத்து துறைக்கு மாசு இல்லாத மற்றும் உள்நாட்டு எரிபொருள்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் என்றும் பயோமாஸைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் உற்பத்தியை வெற்றிகரமாக நிரூபித்த ஐஐஎஸ்சி திட்டத்தை மேற்கோள் காட்டிய அமைச்சர், "இந்த தொழில்நுட்பம் நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்தை முழுமையாக மாற்றும் திறனைக் கொண்டுள்ளது" எனவும் கூறியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 35

  குறைந்த செலவில் எரிபொருள்... கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம் - அமைச்சர் நிதின் கட்கரி

  குறிப்பாக பயோ-சிஎன்ஜி என்பது டீசலுக்குப் பதிலாக மலிவானது மற்றும் குறைவான மாசுபடுத்தும் மாற்றுப் பொருள் என்பதை எடுத்துக்காட்டியதுடன், உபரி அரிசியான ‘பரளி’யை பயோ-சிஎன்ஜியாக மாற்றுவதற்கு முயற்சி எடுப்பதாகவும் கூறிய இவர், ஐந்து டன் அரிசி வைக்கோல் ஒரு டன் பயோ சிஎன்ஜியைத் தருகிறது என்றும் அவர் கூறினார். மேலும் இதுகுறித்து பிரதமரின் அறிவியல் ஆலோசகருடன் நாங்கள் ஒரு சந்திப்பை மேற்கொண்டுள்ளோம் என்றும் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் வரையிலான இ-நெடுஞ்சாலையைத் தனியார் முன்னோடி திட்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதில் மின்சார பேருந்துகள், லாரிகள், தள்ளுவண்டிகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம் எனவும் இதனால் தளவாடச் செலவுகளைக் குறைக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 45

  குறைந்த செலவில் எரிபொருள்... கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம் - அமைச்சர் நிதின் கட்கரி

  "இந்தியாவின் முதல் BS-VI இணக்கமான ஃப்ளெக்ஸ் எஞ்சினை உருவாக்கி, அதை நாட்டில் அறிமுகப்படுத்த வாகனத் தொழிலுக்கு நான் இலக்கைக் கொடுத்துள்ளேன்," என்றும் எத்தனாலின் சராசரியை பெட்ரோலுக்கு சமமாக மாற்றிய ரஷ்ய தொழில்நுட்பத்தைக் கட்கரி அடிக்கோடிட்டுக் காட்டினார். எனவே இதுப்போன்ற போக்குவரத்துத் துறையை டிகார்பனைஸ் செய்வதற்கான பரந்த அளவிலான தீர்வுகளை இணைத்து கொள்வதையும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 55

  குறைந்த செலவில் எரிபொருள்... கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம் - அமைச்சர் நிதின் கட்கரி

  இந்த திட்டத்தை இந்தியாவில் வெற்றிக்கரமாக நடைமுறைப்படுத்துவதற்காக, குறைந்த செலவில் உள்நாட்டு எரிபொருட்களை ஏற்றுக்கொள்வதற்கான கொள்கைகளில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் விரைவில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் படி மேற்கொள்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இதுக்குறித்து FICCI இன் தலைவர் சுப்ரகாந்த் பாண்டா பேசுகையில், சுத்தமான மற்றும் பசுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் எரிபொருளுக்கு இந்தியா மாறுவது அவசியம் என தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES