கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி Greaves Electric Mobility Private Limited (GEMPL), நிறுவனம் ஆம்பியர் பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை இந்திய சந்தையில் ரூ. 1 ,09,900 எக்ஸ்-ஷோரூம் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. உள்ளூர் தயாரிப்புகளை மேம்படுத்தும் நோக்கில் ‘மேக்-இன்-இந்தியா’ கொள்கையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளதாக கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய ஆம்பியர் பிரைமஸ் மாடல் 4 kilo watt PMS மோட்டார் செயல்திறனை கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 77 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டதாகும். இந்த மோட்டார் வெறும் 5 செகண்டுகளில் 0-வில் இருந்து 40 கிமீ வேகத்தை எட்டுவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒட்டுமொத்தமாக நான்கு விதமான ரைடிங் மோட்கள் இ-ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது.
முழு ரேஞ்ஜ் திறனை ஈகோ மோடில் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். பிற மோட்கள் சற்று கூடுதல் திறனை வெளியேற்றக் கூடியவை என்பதால் அவற்றில் நிறுவனம் வாக்குறுதி அளித்திருக்கும் ரேஞ்ஜை எட்ட முடியாது. பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் வசதிக் கொண்ட 3 KWh LFP பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இதுவே ஓர் முழு சார்ஜில் 100 க்கும் அதிகமான ரேஞ்ஜை தரும். இந்த பேட்டரி பேக் வழக்கமான பேட்டரி பேக்குகளைக் காட்டிலும் அதிக ஆயுட்காலம் கொண்டதாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதுதவிர, சில நவீன கால சிறப்பு வசதிகளும் ஆம்பியர் பிரைமஸ் ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஆம்பியர் ப்ரைமஸ் ஏராளமான லெக்ரூம், அகலமான இருக்கைகள் மற்றும் சிறந்த டிரைவிபிலிட்டியுடன் வருகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக நான்கு விதமான நிற தேர்வுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்க இருப்பதாக ஆம்பியர் அறிவித்து இருக்கின்றது. ஹிமாலயன் ஒயிட் (Himalayan White), ராயல் ஆரஞ்சு (Royal Orange), ஹேவ்லாக் ப்ளூ (Havelock Blue) மற்றும் பக் பிளாக் (Buck Black) ஆகிய நிறங்களில் வருகின்றன. இதுபோன்ற பிரத்யேக அம்சங்களைத் தாங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே ஆம்பியர் பிரைமஸ் தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சஞ்சய் பெஹ்ல், “ப்ரைமஸ் என்பது ஆம்பியரின் முதன்மையான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எனவும் இது எந்தவொரு இந்திய குடும்பத்தின் பல பயன்பாட்டுத் தேவைகளுக்கும் மிகவும் பொருத்தமானது என்றும் பாதுகாப்பு, ஆயுள், செயல்திறன், மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங் அம்சங்களுடன் ஆம்பியர் பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கும் என தெரிவித்துள்ளார்.