அக்டோபர் 2022-ல் Tiago, Tigor CNG, Tigor, Harrier மற்றும் Safari உள்ளிட்ட Tata Motors-ன் தயாரிப்புகளை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள், கேஷ் டிஸ்கவுன்ட்ஸ் மற்றும் கார்ப்பரேட் பெனிஃபிட்ஸ்களை பெறலாம். Tata-வின் வாகனங்களில் Harrier, Safari இந்த அக்டோபர் மாதத்தில் அதிக தள்ளுபடியைக் கொண்டுள்ளன. Tigor CNG-க்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ள அதே நேரம் Tiago CNG-க்கு தள்ளுபடிகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
டாடா ஹாரியர் (Tata Harrier): ஹாரியர் எஸ்யூவி-யின் அனைத்து வேரியன்ட்களிலும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வடிவில் ரூ.40,000 வரை டாடா நிறுவனம் தள்ளுபடி வழங்குகிறது. எஸ்யூவி வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.5,000 வரையில் கார்ப்பரேட் சலுகைகளை பெறலாம். டாடா ஹாரியர் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இதற்கு கிரையோடெக் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. டிராவர்ஸ் மவுண்டட் பவர்டிரெய்ன் 6-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது, மேலும் 140PS பவர் மற்றும் 350Nm டார்க்கை உருவாக்குகிறது. அதே போல சமீபத்தில் தான் நிறுவனம் புதிய XMS மற்றும் XMAS வேரியன்ட்களை அறிமுகப்படுத்தி ஹாரியர் ரேஞ்சை விரிவுபடுத்தியது.
டாடா டிகோர் சி.என்.ஜி (Tata Tigor CNG): டாடா நிறுவனம் Tigor CN-ல் இந்த மாதம் ரூ.10,000 கேஷ் டிஸ்கவுன்ட் மற்றும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்குகிறது. இந்த காம்பேக்ட் செடான் என்ட்ரி-லெவல் XM, மிட்-ரேஞ்ச் XZ மற்றும் டாப்-ஸ்பெக் XZ+ உள்ளிட்ட மூன்று டிரிம்களில் கிடைக்கிறது. மேலும் Tigor CNG ஆனது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது, CNG மோடில் 70hp பவர் மற்றும் 95Nm பீக் டார்க் மற்றும் பெட்ரோல்-ஒன்லி மோடில் 113Nm பீக் டார்க்குடன் 86hp பவரை வழங்கும்.
டாடா டிகோர் (Tata Tigor): பெட்ரோலில் இயங்கும் டிகோரின் அனைத்து வேரியன்ட்களும் மொத்தம் ரூ.20,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது, இதில் ரூ. 10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10,000 கேஷ் டிஸ்கவுன்ட் அடங்கும். தவிர அனைத்து வேரியன்ட்களிலும் வாடிக்கையாளர்கள் ரூ.3,000 மதிப்புள்ள கார்ப்பரேட் டிஸ்கவுன்ட்டை பெறலாம்.
டாடா சஃபாரி (Tata Safari): டாடாவின் முதன்மை மாடலான சஃபாரியின் அனைத்து வேரியன்ட்களும் ரூ.40,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் கிடைக்கின்றன. ஹாரியரைப் போலவேசஃபாரிக்கான புதிய XMS மற்றும் XMAS வேரியன்ட்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. டாடா சஃபாரியும் 2.0 லிட்டர் க்ரையோடெக் டர்போ-டீசல் எஞ்சினுடன் வருகிறது, இது 170 PS ஆற்றலையும் 350 Nm டார்க்கையும் வழங்குகிறது.