முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமா? மானியம் மற்றும் பிற விவரங்கள் இதோ!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமா? மானியம் மற்றும் பிற விவரங்கள் இதோ!

புதிய மின்சார வாகனங்கள் வாங்குவதில் மக்கள் கவனம் அதிகரித்துள்ளது. அரசின் சலுகைகளுடன் மின்சார வாகனத்தை வாங்க தகுதிகள் என்ன என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

 • 18

  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமா? மானியம் மற்றும் பிற விவரங்கள் இதோ!

  எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதில் மக்கள் கவனம் செலுத்திவருகின்றனர். புதிய டூவீலர் அல்லது கார்கள் வாங்க நினைக்கும் பல மக்கள் மின்சார வாகனங்கள் வாங்குவதைக் கருத்தில் கொள்கின்றனர். சுற்றுசூழலை மாசுபடுத்தாத எலெக்ட்ரிக் பைக்ஸ், ஸ்கூட்டர்ஸ், கார்ஸ் மற்றும் பஸ்கள் வாங்குவதை ஊக்குவிக்க வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு மானியங்களையும் வழங்கி வருகிறது. பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் மோட்டாரை அடிப்படையாக கொண்ட பல பைக்ஸ் மற்றும் கார்கள் சந்தையில் விற்பனைக்கு உள்ளன.

  MORE
  GALLERIES

 • 28

  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமா? மானியம் மற்றும் பிற விவரங்கள் இதோ!

  அப்படி என்றால் EV வாங்க அரசு வழங்கும் மானியத்திற்கு தகுதியானவர்கள் யார் மற்றும் விலைகளின் தோராயமான கணக்கீட்டை இங்கு தெரிந்துகொள்ளலாம். நாட்டில் Ola, Ather, TVS மற்றும் Revolt போன்ற பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்குகின்றன. இதில் Ola S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை சுமார் ரூ.1,33,000, Ather 450X -ன் விலை ரூ.1,37,000. TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1,61,000-ஆக இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 38

  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமா? மானியம் மற்றும் பிற விவரங்கள் இதோ!

  FAME திட்டத்தின் கீழ் EV மானியத்திற்கு யார் தகுதியானவர்?எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை பெருக்க மற்றும் மக்களிடையே EV பயன்பாட்டை அதிகரிக்க Faster Adoption and Manufacturing of Electric Vehicles (FAME) என்ற கொள்கையை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. எலெக்ட்ரிக் டூவீலர் வாங்குவோருக்கு, ஒரு KWh பேட்டரி திறனுக்கு ரூ.15,000 ஊக்கத் தொகை முன்பு இது ஒரு KWh-க்கு ரூ. 10,000-ஆக இருந்தது வழங்கப்படுகிறது. இருப்பினும் FAME India Phase II திட்டத்தின் படி, அரசு வழங்கும் ஒட்டுமொத்த மானியம் என்பது வாகனங்களின் விலையில் 40% வரை என வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.1.5 லட்சம் வரையிலான எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. FAME ஊக்கத்தொகை என்பது நாடு முழுவதும் பொருந்தும். மேலும் xEV-ஐ வாங்கும் போது, குறைக்கப்பட்ட விலையை செலுத்துவதன் மூலம் Demand incentive benefit-ஆனது நுகர்வோருக்கு முன்கூட்டியே வழங்கப்படும்.

  MORE
  GALLERIES

 • 48

  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமா? மானியம் மற்றும் பிற விவரங்கள் இதோ!

  அதாவது FAME-India திட்டத்தின் கீழ், மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு மின்சார வாகனங்களின் கொள்முதல் விலையில் முன்கூட்டியே குறைப்பு வடிவில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. எனவே FAME India Phase II கீழ் பதிவுசெய்துள்ள அனைத்து OEM-க்களும், திட்டத்தின் கீழ் மானியத்தை பெறுவதற்கு தகுதிபெற, அவ்வப்போது திருத்தப்பட்ட CMVR-ன் கீழ் AIS 156-ன் படி தங்களின் வாகன மாடல்களை சான்றளிக்க கனரக தொழில் துறை அமைச்சகம் (Heavy industries ministry) அறிவுறுத்தி இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 58

  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமா? மானியம் மற்றும் பிற விவரங்கள் இதோ!

  தனித்தனி பில்: Ola S1 Pro மற்றும் Ather 450X ஆகியவை தற்போது மிகவும் பிரபலமான 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களாகும். இதில் ஓலா ஸ்கூட்டர் சுமார் ரூ.1,33,000-க்கும், ஏத்தர் ஸ்கூட்டர் ரூ.1,37,000-க்கும் கிடைக்கிறது. இருப்பினும் OME-க்கள் தங்கள் தயாரிப்பிற்கு ரூ.1.5 லட்சத்திற்கும் குறைவான விலைகளை கொண்டுவர சார்ஜர்களை தனித்தனியாக பில்லிங் செய்கின்றன. உதாரணமாக Ather 450X Pro Pack-உடன் சார்ஜரை தனியாக பில் செய்தால் தான் இந்த ஸ்கூட்டர் ரூ.1,37,000-க்கு கிடைக்கும். ஏனென்றால் சார்ஜரின் விலை ரூ. 10,000 முதல் ரூ. 20,000 வரை இருக்கும். இதை ஸ்கூட்டரின் பில்லோடு சேர்த்தால் வாகனத்தின் விலை ரூ.1.5 லட்சத்தைத் தாண்டும். அப்படி தாண்டினால் எந்த மானியமும் கோர முடியாது என டெல்லி ஷோரூமில் உள்ள ஒரு விற்பனை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 68

  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமா? மானியம் மற்றும் பிற விவரங்கள் இதோ!

  இருப்பினும் சமீபத்தில் வெளியாகி இருக்கும் சில தகவல்களின்படி, இனி Ather Energy மற்றும் Ola Electric ஆகிய நிறுவனங்கள் ஸ்கூட்டருக்கு தனி பில், சார்ஜருக்கு தனி பில் என தனித்தனியாக பில்லிங் செய்யும் நடைமுறைக்கு மாறாக, தங்கள் எலெக்ட்ரிக்-ஸ்கூட்டர்களுக்கான சார்ஜர் விலைகளை Ex-factory Price-க்குள் சேர்க்கும் என தெரிகிறது.

  MORE
  GALLERIES

 • 78

  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமா? மானியம் மற்றும் பிற விவரங்கள் இதோ!

  தோராயமான EMI கால்குலேஷன்: ப்ரோ பேக்குடன் கூடிய ஏதர் 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை டெல்லியில் ரூ.1,55,567 ஆகும். ஒரு ஃபினான்ஸ் எக்ஸிக்யூட்டிவின் தோராயமான கணக்கீட்டின்படி, நீங்கள் ரூ.30,000 முன்பணம் செலுத்தினால், 7.5% வட்டி விகிதத்தில் (தற்போது Hero Fincorp வழங்குகிறது) 23 மாதங்களுக்கு மாதம் ரூ.6,525 EMI-யாகவும், 35 மாதங்களுக்கு மாதம் ரூ.4,580 EMI-யாகவும் இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 88

  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமா? மானியம் மற்றும் பிற விவரங்கள் இதோ!

  ஒருவேளை நீங்கள் ரூ.50,000 டவுன் பேமெண்ட்செலுத்தினால், மாதாந்திர EMI 23 மாதங்களுக்கு ரூ.5,495-ஆகவும், 35 மாதங்களுக்கு ரூ.3,859-ஆகவும் இருக்கும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதற்கு ஆதார், PAN கார்டு, பாஸ்புக், கேன்சல் செய்யப்பட்ட காசோலைகள் மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றின் நகல்கள் தேவைப்படும்.

  MORE
  GALLERIES