இந்தியாவின் மிகப்பெரிய எஸ்யூவி உற்பத்தியாளர்களில் ஒன்றான மஹிந்திரா தனது மாடல்களில் 2 லட்சம் ரூபாய் வரை பெரும் தள்ளுபடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. பண்டிகை கால சிறப்பு விற்பனையை அதிகரிக்க முடிவெடுத்துள்ள மஹிந்திரா நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன் படி அல்டுராஸ் ஜி4, ஸ்கார்பியோ கிளாசிக், எஸ்யூவி 300, பொலிரோ பிஎஸ்6 ஆகிய மாடல்கள் மீது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் சலுகை என பல்வேறு சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம். கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ கிளாசிக் மீதும் அட்டகாசமான சலுகையை அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் எந்தெந்த கார்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன என்பதை பார்க்கலாம்.
1. மஹிந்திரா அல்டுராஸ் ஜி4:ப்ரீமியம் எஸ்வியூ மார்க்கெட்டில் முன்னிலை வகித்து வரும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 (Mahindra Alturas G4) இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகள் மற்றும் ஊக்கத்தொகைகளை அறிவித்துள்ளது. அல்டுராஸ் ஜி4-யை வாங்குவோருக்கு கார்ப்பரேட் சலுகையாக ரூ.11,500-ம், 2,20,000 ரூபாய் வரையிலான ரொக்கத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் போனஸாக 5000 ரூபாயும், ஆக்சஸரீஸ் மீது ரூ.20 ஆயிரம் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
2. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்:இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் பண்டிகைக் கால சிறப்பு தள்ளுபடியாக 1,75,000 ரூபாய் வரையிலான ரொக்க தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், ரூ.20,000 மதிப்புள்ள ஆக்சஸரீஸ் மற்றும் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ். மேலும் 10,000 ரூபாய் வரையிலான கார்ப்பரேட் சலுகையும் வழங்குகிறது.
3. மஹிந்திரா XUV300:டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா போன்ற பிரபல எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக மஹிந்திரா நிறுவனம் மஹிந்திரா எஸ்யூவி 300-யை அறிமுகப்படுத்தியது. இந்த எஸ்வியூவை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 29,000 ரூபாய் வரை ரொக்கத் தள்ளுபடி, 25,000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், 400 ரூபாய் கார்ப்பரேட் சலுகை, 10,000 மதிப்புள்ள ஆக்சஸரீஸ்களையும் பெறலாம்.