இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது புதிய நிதியாண்டிற்கான விற்பனையை தள்ளுபடியுடன் ஆரம்பித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களுக்கு ஏப்ரல் மாத சலுகையாக 65 ஆயிரம் வரை வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது. டாடா சமீபத்தில் 500 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய மிகப்பெரிய பேட்டரி பேக் அப் கொண்ட மின்சார கார் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மிகவும் மகிழ்ச்சிக்கரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ, டிகோர், ஹாரியர், சஃபாரி ஆகிய கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் மாத சலுகையாக எக்ஸ்சேஞ்ச் போனஸ், கேஸ் ஆஃப் மற்றும் கார்ப்பரேட் ஊக்கத்தொகையினை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு 2021 மற்றும் 2022 வெளியான கார்களுக்கு மட்டுமே பொருத்தும்.
1. டாடா டிகோர்: டாடாவின் காம்பாக்ட் 5-சீட்டர் செடான் மாடல் டிகோர் காருக்கு ரூ.21,500 வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. மாடலின் XZ டிரிம் மற்றும் ஹையர் வெர்ஷன்களுக்கு கூடுதலாக ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கும். அனைத்து டாடா டிகோர் வகைகளிலும் ரூ.11,500 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படும். இருப்பினும் CNG வேரியண்டிற்கு தள்ளுபடி இல்லை என டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
3. டாடா டியாகோ: டியாகோ ஹேட்ச்பேக் என்பது டிகோரின் மறு உருவாக்கம் ஆகும். அதே எஞ்சின், டிரான்ஸ்மிஷன் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. டாடா டியாகாவின் அனைத்து மாடல்களுக்கும் 11,500 ரூபாய் வரையிலான கார்ப்பரேட் சலுகை உட்பட ரூ.31,500 வரை தள்ளுபடிகள் கிடைக்கும். ஆனால் காம்பாக்ட் செடானின் சிஎன்ஜி வகைகளை (CNG variants) தவிர்த்து, மற்றவைகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
4. டாடா சஃபாரி: சஃபாரி ஹாரியரில் உள்ள அதே 2.0 லிட்டர் டீசல் பவர்டிரெய்ன் மூலம் இயக்கப்படுகிறது. சஃபாரி ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் கொண்ட பிரிவில் மிகவும் விசாலமான மூன்றாவது வரிசையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து சஃபாரி வகைகள் மீது வாடிக்கையாளர்களுக்கு 45 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது.
5. டாடா ஹாரியர்: டாடா ஹாரியரின் லேட்டஸ்ட் மாடலான காசிரங்கா சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த புதிய காருக்கு எவ்வித சலுகை மற்றும் தள்ளுபடியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிக்கவில்லை. ஹாரியரின் பிற மாடல்கள் அனைத்திற்கும் ரூ. 40,000 எக்ஸ்சேஞ்ச் ஊக்கத்தொகை உட்பட அதிகபட்சமாக ரூ.65,000 வரை சேமிப்பு கிடைக்க உள்ளது. கார்ப்பரேட் சலுகையாக டாடா மோட்டார்ஸ் ரூ.5,000 தள்ளுபடியையும் வழங்குகிறது.