ஏப்ரல் 27-ஆம் தேதி அறிமுகமாக உள்ள புதிய எஸ்யூவி மாடலை பற்றி பெரிய அளவிலான விவரங்கள் எதுவும் தற்போது வரை அந்த கார் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் தற்போது கசிந்துள்ள தகவல்களின் அடிப்படையில் சந்தையில் அறிமுகமாகும் அந்த புதிய கார் ஆனது C3 Aircross என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. எஸ்யூவி வகை கார்களில் சி கியூப் ப்ராஜெக்ட் இன் இரண்டாவது மாடலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சிட்ரோயன் எஸ்யூவி காரானது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் தற்போது இந்தியாவில் எஸ் யூ வி ராக கார்களுக்கான சந்தை மிகவும் சூடு பிடித்துள்ளதால் அதில் போட்டியிடும் விதமாக இந்த புதிய காரை அது அறிமுகப்படுத்துகிறது. சிட்ரோயன் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனமானது ஏற்கனவே இந்தியாவில் கார்களை தயாரிப்பதற்காக மிகப் பெரும் அளவில் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய எஸ்யூவி காரில் இரண்டு செட்டிங் லேஅவுட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து மற்றும் ஏழு இருக்கைகள் எதிர்கொண்டிருக்கும். மேலும் லேட்டர் பெஞ்சு வகை இருக்கைகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசையில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. எதிர்காலத்தில் தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள சி3 ஏர்க்ராஸ் மாடலைவிட பெரிய காரை அந்த நிறுவனம் வெளியிடலாம் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கிடைத்துள்ள தகவல்களின்படி புதிய சிட்ரோயன் எஸ்யூவி காரானது மிகவும் நவீன வசதிகளை கொண்டுள்ளது. நல்ல விசாலமான கேபின் மற்றும் டிஜிட்டல் முறையில் நவீன வசதிகளுடன் கூடிய இன்போடைன்மென்ட் சிஸ்டம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் எஞ்சின் பெட்ரோலில் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மின்சாரத்தில் இயங்கும் படி இது அறிமுகப்படுத்தப்படலாம். ஹேட்ச் பேக் மாடலை ஒப்பிடும்போது ஏதும் இதன் வீல் பேஸ் மிகவும் நீண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே கூறிய வசதிகளை தவிர்த்து மேலும் பல புதிய வசதிகளை சிட்ரோயன் நிறுவனம் இந்த புது ரக காரில் சேர்த்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு. 10.2 அங்குலம் அளவிலான டச் ஸ்கிரீன் இன்போடைன்மெண்ட் யூனிட் ஆனது இதில் பொருத்தப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தவிர ஒயர்லெஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் எர்ப்ளே கனெக்டிவிட்டி, டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கண்ட்ரோல், பவர் விண்டோஸ், 4 ஸ்பீக்கர்கள், தானியங்கி குளிர்சாதன வசதி ஆகியவையும் இது அமைக்கப்பட்டுள்ளன.
எஸ்யூவி கார்களை விரும்பி வாங்குபவருக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குறிப்பாக இந்திய சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காகவே சிட்ரோயன் நிறுவனம் இந்த புது ரக காரை அறிமுகப்படுத்த உள்ளது. சிட்ரோயன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலர்கள் மூலம் இந்த காரை வாடிக்கையாளர்கள் இந்தியாவில் வாங்கிக் கொள்ளலாம். ஏற்கனவே சிட்ரோயன் நிறுவனத்தின் c5 ஏர்கிராஸ் கார் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு மிகப்பெரும் அளவிலான நேர்மறை விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.