citroen India நிறுவனம் நாட்டில் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த புதிய எலெக்ட்ரிக் காரான E-C3 புதுடெல்லி, குர்கான், மும்பை, புனே, அகமதாபாத், கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, சென்னை, சண்டிகர், ஜெய்ப்பூர், லக்னோ, புவனேஸ்வர், சூரத், நாக்பூர், விசாகப்பட்டினம், கோழிக்கோடு, குவஹாத்தி, போபால், கர்னால், டேராடூன், ராஜ்கோட், மங்களூரு மற்றும் கோவை உள்ளிட்ட 25 நகரங்களில்உள்ள பிராண்டின் La Maison Citroen பைஜிட்டல் ஷோரூம்களில் விரைவில் விற்பனைக்கு வரும் என நிறுவனம் அறிவித்து உள்ளது.
Citroen eC3 காரை நிறுவனத்தின் அதிகாரபூர்வ வெப்சைட்டிற்கு சென்று BUY ONLINE ஆப்ஷனை தேர்வு செய்து ஆன்லைன் மூலமாகவும் வாங்கலாம். பெரும்பாலான இந்திய நகரங்களில் இந்த நேரடி ஆன்லைன் பர்ச்சேஸ் ஆப்ஷன் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷனை பயன்படுத்துபவர்களுக்கு E-C3 எலெக்ட்ரிக் கார் தொழிற்சாலையிலிருந்து நேரடியாக வீட்டு வாசலுக்கே டெலிவரி செய்யப்படுகிறது.
ஒரு ஃபுல் சார்ஜ்-க்கு 320 கிமீ மைலேஜ் தரும் என கூறப்படும் இந்த எலெக்ட்ரிக் காரின் விலை ரூ.11.5 லட்சம் முதல் 12.43 லட்சம் வரையில் இருக்கிறது. E-C3 கார் Citroen's C-Cubed ஃபேமிலி வாகனங்களின் பேட்டரி EV B- செக்மென்ட் ஹேட்ச் ஆகும். மேலும் நம் தமிழகத்தின் திருவள்ளூரில் உள்ள உற்பத்தி ஆலையில் கட்டமைக்கப்பட்டது. நிறுவனம் iOS மற்றும் Android இரண்டிலும் E-C3-ல் கனெக்டிவிட்டி ஆப்ஸ் அம்சங்களை அறிமுகப்படுத்தும் என தெரிகிறது.
இந்த அம்சங்களில் வெஹிகிள் ட்ராகிங், எமெர்ஜென்சி சர்விஸ் கால், ஆட்டோ கிராஷ் நோட்டிபிகேஷன், ஓவர்-தி-ஏர் சாஃப்ட்வேர் அப்டேட்ஸ், யூசேஜ் பேஸ்டு இன்ஷுரன்ஸ் மற்றும் 7 ஆண்டுக்கான சப்கிரிப்ஷன் உள்ளிட்டவை அடக்கம். E-C3 காரானது 13 எக்ஸ்டீரியர் கலர் காம்பினேஷன் , 3 பேக்ஸ் & 47 கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.
Stellantis India-வின் சிஇஓ & எம்டி-யுமான ரோலன்ட் பௌச்சாரா கூறுகையில், இந்த புதிய அறிமுகத்தின் மூலம், Citroen ICE பயணிகள் வாகன பிரிவில் ஒரு புதிய நிறுவனமாக இருந்து எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் முக்கிய பங்கு வகிக்கிறது. C3 இன் ICE வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்ட 6 மாதங்களுக்குள் இந்த பேட்டரி மின்சார வாகனத்தை நாங்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
இந்திய வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களை மனதில் கொண்டு இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. சிறந்த இ-பவர்டிரெய்ன் கொண்டிருப்பதன் மூலம் புதிய E-C3 கார் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என கூறி இருக்கிறார்.