ஹோம் » போடோகல்லெரி » ஆட்டோமொபைல் » மாஸாக களம் இறங்கும் சிட்ரியோன் இசி3! டாடா டியாகோவுக்கு டஃப் கொடுக்குமா..?

மாஸாக களம் இறங்கும் சிட்ரியோன் இசி3! டாடா டியாகோவுக்கு டஃப் கொடுக்குமா..?

உயர்தர தொழில்நுட்பங்களுடன் தயாராகி வரும் சிட்ரியோன் இசி3 எலக்ட்ரிக் கார் அடுத்த மாதம் ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கும். இந்தக் கார் டாடா டியாகோவிற்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 • 17

  மாஸாக களம் இறங்கும் சிட்ரியோன் இசி3! டாடா டியாகோவுக்கு டஃப் கொடுக்குமா..?

  இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று சிட்ரோன் இசி3. பிரென்ச் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரியோன் தனது தயாரிப்புகளை ஏற்கனவே இந்தியாவில் அறிமுகப்படுத்தி ஓரளவு பிரபலமாகியிருக்கிறது. ஏற்கனவே விற்பனையாகி வரும் சிட்ரியோன் சி3 காரின் எலக்ட்ரிக் வெர்ஷனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது சிட்ரியோன்  நிறுவனம்.

  MORE
  GALLERIES

 • 27

  மாஸாக களம் இறங்கும் சிட்ரியோன் இசி3! டாடா டியாகோவுக்கு டஃப் கொடுக்குமா..?

  சிட்ரோன் இசி3 என்ற பெயரில் தயாராகி வரும் எலெக்ட்ரிக் கார் தற்போது அதிகாரப்பூர்வமாக பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிட்ரியோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் விலைகள் இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு வரும் ஜனவரி 22ம் தேதி தொடங்கவுள்ளது. அதை தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து, சிட்ரோன் ஷோரூம்களில் இசி3 எலெக்ட்ரிக் கார் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 37

  மாஸாக களம் இறங்கும் சிட்ரியோன் இசி3! டாடா டியாகோவுக்கு டஃப் கொடுக்குமா..?

  உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய 2 அம்சங்களிலும் ஏற்கனவே விற்பனையில் உள்ள சிட்ரியோன் சி3 காரை போலவேதான், சிட்ரியோன் இசி3 எலெக்ட்ரிக் காரும் கிட்டத்தட்ட உள்ளது. எனினும் எலெக்ட்ரிக் கார் என்பதால், டிசைனில் ஒரு சில மாற்றங்கள் இருக்கின்றன. முன் பக்க ஃபெண்டரில் சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டிருப்பது மற்றும் டெயில் பைப் இல்லாமல் இருப்பது ஆகியவற்றை இதற்கு உதாரணங்களாக கூறலாம். அதேபோல் உட்புறத்திலும் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 47

  மாஸாக களம் இறங்கும் சிட்ரியோன் இசி3! டாடா டியாகோவுக்கு டஃப் கொடுக்குமா..?

  சிட்ரியோன் இசி3 எலெக்ட்ரிக் காரில் 29.2  kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால்  320 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம்.
  ஈக்கோ மற்றும் ஸ்டாண்டர்டு என சிட்ரோன் இசி3  எலெக்ட்ரிக் காரில், 2 டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. சிடரியோன் இசி3 பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 6.8  வினாடிகளில் எட்டி விடும். சிட்ரியோன் இசி3-ன் டாப் ஸ்பீடு மணிக்கு 107 கிலோ மீட்டர்கள் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 57

  மாஸாக களம் இறங்கும் சிட்ரியோன் இசி3! டாடா டியாகோவுக்கு டஃப் கொடுக்குமா..?

  ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் இந்த காரின் பேட்டரியை சார்ஜ் செய்தால், வெறும் 57 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகி விடும். ஆனால் ஹோம் சார்ஜர் பயன்படுத்தினால், 10 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் ஏறுவதற்கு பேட்டரி 10.5 மணி நேரத்தை எடுத்து கொள்ளும். இந்திய சந்தையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருடன் சிட்ரியோன் இசி3 எலெக்ட்ரிக் கார் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 67

  மாஸாக களம் இறங்கும் சிட்ரியோன் இசி3! டாடா டியாகோவுக்கு டஃப் கொடுக்குமா..?

  இசி3 எலெக்ட்ரிக் கார் லைவ் மற்றும் ஃபீல் என 2 வேரியண்ட்களில் தயராகி வருகிறது. 10.2 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட அசத்தலான அம்சங்களும் இந்தக் காரில் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பை பொறுத்தவரையில், முன்பக்கம் 2 ஏர்பேக்குகள் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 77

  மாஸாக களம் இறங்கும் சிட்ரியோன் இசி3! டாடா டியாகோவுக்கு டஃப் கொடுக்குமா..?

  டாடா டியாகோ எலக்ட்ரிக் காரின் விலை ரூ.8.49 லட்சமாக இருக்கும் நிலையில், சிட்ரியோன் இசி3 காரின் விலை ஏறக்குறைய பத்து லட்சம் முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால்  விற்பனை சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது

  MORE
  GALLERIES