

ஹூண்டாய் i20 கார் முற்றிலுமாக மேம்படுத்தப்பட்டு புத்தம்புது தொழில்நுட்ப அப்டேட்கள் உடன் Hyundai Elite i20 காராக இந்த ஆண்டு அறிமுகம் ஆகிறது. இந்தக் கார் ஹூண்டாயின் மிகவும் பிரபலமான ப்ளூ லிங் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. BS-VI ரகமாக விற்பனைக்கு வரும் இந்தக் கார் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்ட பெட்ரோல் என்ஜின் கொண்டதாக விற்பனைக்கு வரலாம்.


அறிமுகமாகி ஐந்தாண்டுகள் ஆன பின்னர் தற்போது மாருதி சுசூகி செலேரியோ ஃபேஸ்லிஃப்ட் காராக இந்தாண்டு விற்பனைக்கு வருகிறது. BS-VU ரகமாக 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் CNG ஆப்ஷன் உடன் இந்தக் கார் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


அறிமுகமாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் பெறுகிறது மாருதி சுசூகி இக்னிஸ். BS-VI ரக 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டதாக இந்தக் கார் விற்பனைக்கு வரலாம்.


ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் இந்தியாவில் டாடா அறிமுகம் செய்யும் முதல் காராக டாடா அல்ட்ராஸ் உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன் உடன் BS-VI ரகமாகவே இந்தக் காரும் வரும். 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே சிறப்பம்சமாக உள்ளது.