சென்னையில் எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்க அசோக் லேலண்ட் ஆர்வம்!
புதிய டெக்னாலஜி அறிமுகமாகும்போது, அதை நாம் முயன்று பார்க்க வேண்டும். அதனால் வாடிக்கையாளர்களுக்கு நன்மையும் விளைய வேண்டும்'' என்று அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் வெங்கடேசன் நடராஜன் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய அசோக் லேலாண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய அசோக் லேலாண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது, கலிபோர்னியாவில் அமைந்துள்ள டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பு நிறுவனத்தைப் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


டெஸ்லா-வின் சி.இ.ஒ எலான் மஸ்க், 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 'எங்களின் அடுத்த இலக்கு இந்தியா என்றும் ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்திய அரசின் நிபந்தனைகள் இந்தியாவில் கால் பதிக்கத் தடையாக இருக்கிறது' என்று ட்வீட் செய்திருந்தார்.


இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் டெஸ்லா நிறுவனத்துடன் சேர்ந்து இவ்வகை எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க திட்டமிட்டது.


டெஸ்லா-வின் சி.இ.ஒ எலான் மஸ்க்கின் ட்வீட்டுக்கு 10 மாதங்களுக்குப் பிறகு, அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் முக்கிய அதிகாரியிடமிருந்து பதில் கிடைத்துள்ளது.


ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து தயாரிப்பு நிறுவனமாகும், உலகில் 4வது பெரிய ட்ரக் தயாரிப்பு நிறுவனமாகவும் உள்ளது.


அமெரிக்காவுக்கு அடுத்தபடியாகத் தற்போது, உலகில் எலக்ட்ரிக் கார்கள் அதிகம் தயாரிக்கப்படும் நகரம் ஷாங்காய்.