முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » 20 ஆண்டுகளில் அடுத்தடுத்து மூடப்பட்ட கார் நிறுவனங்கள்.. காரணம் என்ன தெரியுமா?

20 ஆண்டுகளில் அடுத்தடுத்து மூடப்பட்ட கார் நிறுவனங்கள்.. காரணம் என்ன தெரியுமா?

Car companies close | சந்தை மாற்றத்திற்கேற்ப தங்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தாத நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வெளியேறி இருக்கின்றன.

 • 112

  20 ஆண்டுகளில் அடுத்தடுத்து மூடப்பட்ட கார் நிறுவனங்கள்.. காரணம் என்ன தெரியுமா?

  தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதன் காரணமாக பல்வேறு தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் அமையவிருக்கும் சூழலில் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து வெளியேறிய கார் நிறுவனங்களின் எண்ணிக்கையும் கவனிக்கத்தக்க வகையில் உள்ளது. அதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 212

  20 ஆண்டுகளில் அடுத்தடுத்து மூடப்பட்ட கார் நிறுவனங்கள்.. காரணம் என்ன தெரியுமா?

  கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் கார், பைக் தொழிற்சாலைகள் இந்தியாவில் மூடப்பட்டிருக்கின்றன. எந்தெந்த நிறுவனங்கள் அவ்வாறு மூடப்பட்டிருக்கின்றன என பார்ப்பதற்கு முன்பாக என்னென்ன காரணங்கள் என அறியலாம்.

  MORE
  GALLERIES

 • 312

  20 ஆண்டுகளில் அடுத்தடுத்து மூடப்பட்ட கார் நிறுவனங்கள்.. காரணம் என்ன தெரியுமா?

  தயாரிப்பு மேற்பார்வையில் கவனக்குறைவு, சந்தை மாற்றத்திற்கேற்ப தங்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தாத நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வெளியேறி இருக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 412

  20 ஆண்டுகளில் அடுத்தடுத்து மூடப்பட்ட கார் நிறுவனங்கள்.. காரணம் என்ன தெரியுமா?

  மேலும் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உதிரிபாக விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வு, பதிவுத்துறை செலவு அதிகரிப்பு, வாகனங்கள் மீதான 28 சதவீத GST வரி விதிப்பு ஆகியவையும் முக்கிய காரணங்கள் என்கின்றனர் வாகனத் துறை வல்லுநர்கள்.

  MORE
  GALLERIES

 • 512

  20 ஆண்டுகளில் அடுத்தடுத்து மூடப்பட்ட கார் நிறுவனங்கள்.. காரணம் என்ன தெரியுமா?

  மூடப்பட்ட முக்கிய தொழிற்சாலைகளின் பட்டியலில் முதலில் இருப்பது தென்கொரிய நிறுவனமான Daewoo.இந்நிறுவனத்தின் cielo sedan, matiz hatcback கார்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சந்தைப் பங்கில் ஈடு கொடுக்க முடியாத காரணத்தால் 2003-2004ல் இந்நிறுவனம் இந்தியாவில் மூடப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 612

  20 ஆண்டுகளில் அடுத்தடுத்து மூடப்பட்ட கார் நிறுவனங்கள்.. காரணம் என்ன தெரியுமா?

  உலகளவில் வாகன கூட்டு உற்பத்தியில் முன்னணி நிறுவனமான Fiat இந்தியாவில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லாததாலும் கடுமையான BS6 என்ஜின் வாகன கட்டுப்பாடுகளாலும் 2019ல் இந்தியாவில் இருந்து வெளியேறியது.

  MORE
  GALLERIES

 • 712

  20 ஆண்டுகளில் அடுத்தடுத்து மூடப்பட்ட கார் நிறுவனங்கள்.. காரணம் என்ன தெரியுமா?

  Lancer Pajero மாடல் கார்களை போலவே Mitsubishi கார்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. ஆனால் புதிய கார் உற்பத்தியாளர்களுக்கு ஏற்ப சந்தையில் ஈடு தர முடியாத காரணங்களால் 2016ல் பாசஞ்சர் கார்களை நிறுத்தியது Mitsubishi நிறுவனம்.

  MORE
  GALLERIES

 • 812

  20 ஆண்டுகளில் அடுத்தடுத்து மூடப்பட்ட கார் நிறுவனங்கள்.. காரணம் என்ன தெரியுமா?

  இந்தியர்களிடம் மெச்சத்தகுந்த பெயர் பெற்ற Hindustan motors நிறுவனத்தின் Ambassador கார்கள் நன்கு அறியப்பட்டிருந்தாலும் வாடிக்கையாளர் சேவையில் அதிருப்தி, விற்பனை குறைவு, புதுமையின்மை காரணங்களால் 2014ல் இந்நிறுவனம் மூடப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 912

  20 ஆண்டுகளில் அடுத்தடுத்து மூடப்பட்ட கார் நிறுவனங்கள்.. காரணம் என்ன தெரியுமா?

  1990-களில் இந்தியாவில் கால்தடம் பதித்த Opel GM அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனம் astra, corsa, corse, swing போன்ற கார் வகைகளை அறிமுகப்படுத்தியது. எதிர்பார்த்த வரவேற்பு மக்களிடையே இல்லாததால் 2017-ல் இந்தியாவில் இருந்து வெளியேறியது.

  MORE
  GALLERIES

 • 1012

  20 ஆண்டுகளில் அடுத்தடுத்து மூடப்பட்ட கார் நிறுவனங்கள்.. காரணம் என்ன தெரியுமா?

  இதேபோல மற்றொரு அமெரிக்க நிறுவனமான Chevrolet கார்களான Tavera, Optra, Cruze வகைகளை ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவில் சந்தைபடுத்தியது. ஆரம்பத்தில் வரவேற்பு பெற்ற இக்கார் வகைகள் ஜெனரல் மோட்டார்ஸ் 2017-ல் மூடப்பட்ட போது தன் சந்தைப்படுத்துதலை இந்தியாவில் முடித்துக்கொண்டது.

  MORE
  GALLERIES

 • 1112

  20 ஆண்டுகளில் அடுத்தடுத்து மூடப்பட்ட கார் நிறுவனங்கள்.. காரணம் என்ன தெரியுமா?

  இந்த வரிசையில் San motors, Datsun, Ford ஆகிய கார் நிறுவனங்களும் இந்தியாவில் தங்கள் உற்பத்தியையும் விற்பனையையும் நிறுத்திக் கொண்டன. சரியான உட்கட்டமைப்பு இல்லாததால் 2014-ல் nissan நிறுவனத்தால் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட datsun hatchback வகை கார்கள் 2021-ல் இந்தியாவில் இருந்து வெளியேறின.

  MORE
  GALLERIES

 • 1212

  20 ஆண்டுகளில் அடுத்தடுத்து மூடப்பட்ட கார் நிறுவனங்கள்.. காரணம் என்ன தெரியுமா?

  நல்ல வரவேற்பும், விற்பனை நன்கு இருந்தும் நிலையான வளர்ச்சி இல்லாத காரணத்தால் Ford நிறுவனத்தின் Figo, Ecosport, Endeavour ஆகிய கார்களின் உற்பத்தியை நிறுத்திக்கொண்டு Ford 2021-ல் வெளியேறியது.

  MORE
  GALLERIES