ராயல் என்பீல்ட் புல்லட்களின் மூன்று மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புல்லட் 350 மாடல் விலை 2,754 ரூபாய் உயர்ந்து 1,60,000 ஆகியுள்ளது. கிளாசிக் 350யின் விலையும் அதே அளவு அதிகரித்து 1,24,000ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹிமாலயன் மாடலின் விலை 2,755 ரூபாயும் உயர்ந்துள்ளதால் அதன் விலை 1,90,000 ஆகியுள்ளது. புதிய மோட்டார் சைக்கிள் வாங்குவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை இலவசமாக வழங்கப்படும் என்றும் ராயல் என்பீல்ட் அறிவித்துள்ளது.