பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை டாக்டர் ஜெர்கார்டு லெஸ்ஜோ-ன் உதவியுடன் தயாரித்துள்ளது. இவர் முனிச் பல்கலைக்கழகத்தின் ஆப்தல்மாலஜி துறையின் தலைவராக இருக்கிறார். இவர் தான் மனிதர்கள் கண்களை வைத்து ஒவ்வொரு தனி மனிதனையும் அடையாளம் காணும் தொழிற்நுட்பத்தை உருவாக்கியவர். இந்த பேஸ் ரெகனனேஷன் தொழில்நுட்பம் புதிய 3டி டெக்னாலஜியில் இயங்குகிறது. இது பைக்குகளின் டிஎஃப்டி டிஎஸ்பிளேவில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த சிஸ்டம் எங்கு பொருத்தப்பட்டுள்ளது என்பதை வெளியிலிருந்து பார்க்க முடியாது. இது கிளஸ்டருக்கு கீழே பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் ஸ்டிரைப் புரோஜெக்ஷன் டெக்னாலஜியை கொண்டு இயங்குகிறது. இது கொஞ்சம் பழமையான டெக்னாலஜி தான். ரிவர்ஸ் இன்ஜினியரிங் துறையில் இந்த டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. பைக்கில் அமர்ந்த படி ரைடர் ஹெல்மெட் இல்லாமல் இருக்கும் போது இந்த சிஸ்டம் அவரது முகத்தை 3டியாகவும், பயோமெட்ரிக் ஆகவும் கிரகித்து இந்த சிஸ்டத்தை இயக்கும்.
ரைடர் அமர்ந்திருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட 3டி இமேஜை ஏற்கனவே இந்த சிஸ்டத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இமேஜ் உடன் ஒப்பிட்டு பார்க்கும். இரண்டும் ஒத்துப் போனால், இக்னீஷியன், ஹேண்டில்பார் லாக், மற்றும் மற்ற அம்சங்கள் எல்லாம் அன்லாக் ஆகும். அதன் பின் ரைடர் ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கை ஸ்டார்ட் செய்து ஓட்டிச்செல்ல முடியும். இந்த 3டி ஸ்கேனிங்கிற்காக இன்ஃப்ராரெட் தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பகல் நேரம் மட்டுமல்ல இரவு நேரத்தில் வெளிச்சமே இல்லாத இடத்தில் கூட துல்லியமாக்கக் கண்டறிந்து கண்களை ஸ்கேன் செய்து விட முடியும்.
இந்த பாதுகாப்பை டபுளாக்க ஐரீஸ் கார்னியா ஸ்கேனிங் முறையும் இதில் இருக்கிறது. இது ஒருவர் ஹெல்மெட் போட்டிருந்தாலும் அவரை அடையாளம் காணப் பயன்படுத்தும் முறை. அதன்படி பைக்கில் அமர்ந்திருக்கும் ரைடரின் கண்களை இந்த தொழிற்நுட்பம் ஸ்கேன் செய்து ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கும் கண்கள் குறித்த தகவல்களுடன் ஒப்பிடும். அதன் மூலம் பைக்கை அன்லாக் செய்யும். இதற்கும் இன்ஃப்ராரெட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வேலை இந்த பைக்கை அடையாளம் சரியாகத் தெரியாத நபர் திருட முயற்சி செய்தால் இந்த சிஸ்டம் உடனடியாக எமர்ஜென்ஸி தொடர்பு எண்ணிற்குத் தானாக போன் செய்துவிடும்.
அதன் மூலம் பைக் திருடப்பட்ட தகவல் பைக்கின் உரிமையாளருக்கு உடனடியாக தெரிவிக்கப்படும். இது போக பிஎம்டபிள்யூ கால் சென்டருக்கும் இந்த தகவல் போய்விடும். இது போக பைக்கின் உரிமையாளரின் முகம், கண் குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள், மற்றும் பைக் தற்போது இருக்கும் இடத்தின் தகவல் எல்லாம் அருகில் உள்ள போலீசாருக்கும் தானாக அனுப்பி வைத்துவிடும். இதனால் பைக் திருட்டை மிக எளிதாகத் தடுக்க முடியும். இனி வரும் காலங்களில் பைக் திருடுபோகும் என்ற கவலையே நமக்கு வேண்டாம் …