தவிர அதிக எரிபொருள் திறன் காரணமாக அலுவலகங்கள் மற்றும் தினசரி வேலைகளுக்கு பலரும் பைக் மற்றும் ஸ்கூட்டர்களையே பயன்படுத்துகின்றனர். பைக் வாங்க செய்வது புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். அதிக விலை கொண்ட ஃபேன்ஸியான பைக் அல்லது ஸ்கூட்டர்களை தேர்வு செய்வதை விட மைலேஜ் அதிகம் தரும் டூவீலர்களை தேர்வு செய்தால் பெருமளவு பணத்தை சேமிக்கலாம். அந்த வகையில் நீங்கள் ஒரு புதிய பைக்கை வாங்க விரும்பினால் அதிக மைலேஜ் தரும் டூவீலர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
பஜாஜ் பிளாட்டினா 100:இந்தியாவின் மிக சிறந்த மைலேஜ் பைக் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது பஜாஜ் பிளாட்டினா 100. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 72 கிமீ மைலேஜ் அளிக்கிறது இந்த பைக். பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்த பிளாட்டினா 100 பைக்கை புதிய கிராபிக்ஸ், அலாய் வீல்ஸ், எல்இடி டிஆர்எல் (டேடைம் ரன்னிங் லைட்) மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் அப்டேட் செய்துள்ளது. இந்த பைக்கின் எஞ்சின் திறன் 102சிசி ஆகும். இதன் பவர் 7.91 ஹார்ஸ்பவர், இதன் ஃப்யூயஸ் டேங்க் சைஸ் 11 லிட்டர், இந்த பைக்கின் விலை ரூ.63,130-லிருந்து தொடங்குகிறது.
டிவிஎஸ் ஸ்போர்ட்: இந்தியாவின் சிறந்த மைலேஜ் பைக்குகளில் ஒன்றாக இருக்கிறது TVS Sport பைக். இந்த அதிக மைலேஜ் தரும் பைக்கின் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட யூனிட்களை நிறுவனம் விற்றுள்ளது. டிவிஎஸ் ஸ்போர்ட் புத்தம் புதிய கிராபிக்ஸ் மற்றும் ஸ்போர்ட்டி தோற்றத்துடன் நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் DRL இல்லை ஆனால் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் அம்சம் உள்ளது. இது லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் கொடுக்கிறது. டிவிஎஸ் ஸ்போர்ட்டின் சிறப்பம்சங்கள் 109சிசி எஞ்சின், 8.18 ஹார்ஸ்பவர் மற்றும் 10 லிட்டர் ஃப்யூயஸ் டேங்கை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.63,950-லிருந்து துவங்குகிறது.
பஜாஜ் பிளாட்டினா 110:இந்த பிளாட்டினா 110 பைக்கானது இந்தியாவின் சிறந்த மைலேஜ் பைக்குகளில் ஒன்றாகும். பிளாட்டினா பைக் 110cc எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது, இது அதிகரித்த பவர் மற்றும் அழகான தோற்றம் மற்றும் கிராபிக்ஸ் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. இந்த பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கானது 11 லிட்டர் ஃப்யூயஸ் டேங் கெப்பாசிட்டி.115.45 சிசி எஞ்சின் டிஸ்பிளேஸ்மென்ட், லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் மற்றும் 8.49 ஹார்ஸ்பவருடன் வருகிறது. இந்த பைக்கின் விலை ரூ.69,216 முதல் தொடங்குகிறது.
பஜாஜ் சிடி 110:சிறப்பான மைலேஜ் வழங்கும் மற்றொரு பஜாஜ் ஆட்டோ டூ வீலராக இருக்கிறது Bajaj CT 110. இந்த பைக்கில் கவர்ச்சிகரமான கிராபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் சிறந்த செயல்திறனுக்காக சக்திவாய்ந்த எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பஜாஜ் பைக்கின் ஃப்யூயஸ் டேங் கெப்பாசிட்டி 11 லிட்டர் ஆகும். லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் தரும் இந்த பைக்கில் 115.45cc எஞ்சின் டிஸ்பிளேஸ்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 8.6 ஹார்ஸ்பவர் கொண்ட இந்த பைக்கின் விலை ரூ.66,298-லிருந்து துவங்குகிறது.
ஹோண்டா எஸ்பி 125: நாட்டின் சிறந்த 125சிசி எம்பிஜி பைக்ஸ்களில் ஒன்று ஹோண்டா SP 125. 125சிசி எஞ்சினுடன் வரும் இந்த பைக் லிட்டருக்கு 68 கிமீ மைலேஜ் வழங்குகிறது. இந்த பைக்கில் உயர்தர ஹோண்டா தொழில்நுட்பம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், டியூப்லெஸ் டயர்ஸ் மற்றும் நல்ல எரிபொருள் செயல்திறனை தருவதற்கான எஞ்சின் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த பைக்கில் 123.94சிசி எஞ்சின், 10.72 பிஎச்பி பவர், 11 லிட்டர் ஃப்யூயஸ் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 82,486.
டிவிஎஸ் ரேடியான்:எரிபொருள் சிக்கனத்தை மையமாக கொண்ட மோட்டார் சைக்கிளாக இருக்கிறது டிவிஎஸ் ரேடியான். மேலும், இந்த பைக் அலாய் வீல்ஸ், ரியல்டைம் மைலேஜ் டிஸ்ப்ளே கொண்ட கணினிமயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், ஸ்போர்ட்டி கிராபிக்ஸ் மற்றும் பலவற்றை கொண்டுள்ளது. நீளமான மற்றும் அகலமான சீட், யூ.எஸ்.பி சார்ஜர், பெரிய 18-இன்ச் சக்கரங்கள் போன்றவற்றை கொண்டிருப்பதால் இந்த பைக் மிகவும் வசதியானது. இந்த பைக்கின் ஃப்யூயஸ் டேங்க் கெப்பாசிட்டி 10லி ஆகும். 109.7சிசி எஞ்சின் கொண்டுள்ள இந்த பைக் லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ் தருகிறது. இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.59,925 ஆகும்.
ஹோண்டா சிடி 110 ட்ரீம்:இந்த பைக்கில் டியூப்லெஸ் டயர்கள், அலாய் வீல்ஸ், நீளமான மற்றும் வசதியான இருக்கை உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன, மேலும் ஹோண்டா 3+3 வருட வாரண்டியை இந்த பைக்கிற்கு வழங்குகிறது. ஹோண்டா சிடி 110 டிரீமின் சிறப்பம்சங்களில் லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ், 109.51சிசி எஞ்சின், 8.67 பிஎச்பி பவர் மற்றும் 9.1 ஃப்யூயஸ் டேங்க் ஆகியவை அடங்கும்.
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ்:இந்தியாவின் மிகவும் ஸ்டைலான மற்றும் என்ட்ரி-லெவல் கம்யூட்டர் பைக்காக இருக்கிறது TVS-ன் ஸ்டார் சிட்டி பிளஸ் ஆகும். இது LED DRL, சக்திவாய்ந்த எக்ஸாஸ்ட், டூயல்-டோன் மிரர்ஸ், மொபைலை சார்ஜ் செய்ய USB அவுட்லெட் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. 109.7சிசி இன்ஜின் கொண்டுள்ள இந்த பைக் லிட்டருக்கு 68 கிமீ மைலேஜ் அளிக்கிறது. 8.08 bhp பவர் மற்றும் 10 லிட்டர் ஃப்யூயஸ் டேங் கொண்டுள்ள இந்த பைக்கின் விலை ரூ.72,305 முதல் தொடங்குகிறது.
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ்:இந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் மோட்டார்சைக்கிளில் பெஸ்ட்-இன்-கிளாஸ் 130மிமீ ரீயர் பிரேக், ஹையர் கிரவுண்ட் கிளியரன்ஸ், அலாய் வீல்ஸ், ஸ்போர்ட்டி கிராபிக்ஸ் மற்றும் சிறந்த எரிபொருள் செயல்திறனுக்காக i3S போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த பைக் 97.2சிசி எஞ்சின், லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ், 7.91 ஹார்ஸ் பவர் மற்றும் 9.8லி ஃப்யூயஸ் டேங்க் கொண்டுள்ளது. இதன் ஆரம்பவிலை ரூ. 72,728.
டிவிஎஸ் ரைடர்:இது ஒரு தனித்துவமான ஸ்போர்ட்டி தோற்றம், அதிநவீன தொழில்நுட்பம், பெஸ்ட்-இன்-கிளாஸ் செயல்திறன், ஒரு குறிப்பிடத்தக்க LED ஹெட்லேம்ப், ஒரு வசதியான ரைடிங் பொஷிசன் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்ட இந்த TVS Raider பைக் லிட்டருக்கு 60கிமீ மைலேஜ் அளிக்கிறது. 124.8சிசி எஞ்சின், 10லி ஃப்யூயஸ் டேங்க் கெப்பாசிட்டி 11.22 ஹார்ஸ் பவரை கொண்டுள்ள இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.84,500 ஆகும்.