முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » இந்தியாவின் சிறந்த 7 சீட்டர் கார்கள் என்னென்ன? அவற்றின் சிறப்பம்சங்கள் இதோ!

இந்தியாவின் சிறந்த 7 சீட்டர் கார்கள் என்னென்ன? அவற்றின் சிறப்பம்சங்கள் இதோ!

Best Car For Family : குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இருக்க கூடிய வீடுகளில் 7 சீட்டர் கொண்ட கார்கள் தான் மிக வசதியான ஒன்றாக இருக்கும். பலருக்கும் 7 சீட்களுடன், அழகிய தோற்றத்துடன் கார் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

 • 16

  இந்தியாவின் சிறந்த 7 சீட்டர் கார்கள் என்னென்ன? அவற்றின் சிறப்பம்சங்கள் இதோ!

  இந்தியாவில் ஒருவர் கார் வாங்க வேண்டும் என்றால், எத்தனை சீட்கள் அதில் உள்ளது என்பதை மிக முக்கியமாக கவனித்து பார்ப்பார்கள். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இருக்க கூடிய வீடுகளில் 7 சீட்டர் கொண்ட கார்கள் தான் மிக வசதியான ஒன்றாக இருக்கும். பலரும் 7 சீட்களுடன், அழகிய தோற்றத்துடன் கார் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த பதிவில் இந்தியாவில் உள்ள சிறந்த 7 சீட்டர் கார்கள் பற்றிய விரிவான தகவல்களை பார்ப்போம்.

  MORE
  GALLERIES

 • 26

  இந்தியாவின் சிறந்த 7 சீட்டர் கார்கள் என்னென்ன? அவற்றின் சிறப்பம்சங்கள் இதோ!

  மாருதி சுசுகி எர்டிகா :
  நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளர்களில் ஒன்றான மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா மிகவும் பிரபலமான கார் ஆகும். மாருதி சுசூகியின் இந்த 7-சீட்டர் காரில், நல்ல மைலேஜூம் கிடைக்கிறது. இந்த காரில் 4 சிலிண்டர்கள், 1.4 லிட்டர் K15C ஸ்மார்ட் ஹைப்ரிட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. எரிபொருளைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு வசதிகளையும் பயன்படுத்தி கொள்ளலாம். மாருதி சுசூகி எர்டிகாவின் விலை ரூ.8.35 லட்சம் முதல் 12.79 லட்சம் வரை உள்ளது.

  MORE
  GALLERIES

 • 36

  இந்தியாவின் சிறந்த 7 சீட்டர் கார்கள் என்னென்ன? அவற்றின் சிறப்பம்சங்கள் இதோ!

  மஹிந்திரா XUV700 :
  நீண்ட காலத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட XUV700 மாடல், இந்தியாவில் கார் வாங்குவோர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். 7 இருக்கைகள் மட்டுமன்றி, 5 இருக்கைகள் கொண்ட செக்மென்ட்டிலும் இந்த கார் வழங்கப்படுகிறது. இந்த காரானது mHawk மற்றும் mStallion ஆகிய இரண்டு எஞ்சின் வசதியுடன் வருகிறது. மஹிந்திரா XUV700 காரின் விலை ரூ.13.18 லட்சத்தில் தொடங்கி ரூ.24.58 லட்சம் வரை இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 46

  இந்தியாவின் சிறந்த 7 சீட்டர் கார்கள் என்னென்ன? அவற்றின் சிறப்பம்சங்கள் இதோ!

  டொயோட்டா இன்னோவா :
  ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டாவின் சிறந்த தயாரிப்புகளில், இன்னோவா கிரிஸ்டா காரும் ஒன்றாக உள்ளது. இந்திய கார் ஆர்வலர்கள் மத்தியில் இதற்கென்று தனி இடத்தை பிடித்து வெற்றி நடைபோடுகிறது. டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆகிய இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. மேலும் இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ.17.86 லட்சம் முதல் ரூ.25.68 லட்சம் வரை உள்ளது. கார்னெட் ரெட் மற்றும் அவன்ட்-கார்ட் வெண்கலம் உள்ளிட்ட சில புதுமையான வண்ணங்களுடன் இந்த கார் வருகிறது.

  MORE
  GALLERIES

 • 56

  இந்தியாவின் சிறந்த 7 சீட்டர் கார்கள் என்னென்ன? அவற்றின் சிறப்பம்சங்கள் இதோ!

  டாடா சஃபாரி :
  7 சீட்டர் வகை கார்களில் டாடா சஃபாரி சிறந்த ஒன்றாகும். குளோபல் NCAP'இன் பாதுகாப்பு மதிப்பீட்டில் முழு மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது. எனவே, டாடா சஃபாரி பயணிகளுக்கு ஒரு சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. கியோடெக் 2-லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் மூலம் 350Nm உச்ச முறுக்குவிசையை கொண்டுள்ளது. இந்த கார் சமீபத்தில் மேக்ஓவர் செய்யப்பட்டு, குறைந்தபட்ச விலையாக ரூ.15.02 லட்சத்தில் இருந்து விற்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 66

  இந்தியாவின் சிறந்த 7 சீட்டர் கார்கள் என்னென்ன? அவற்றின் சிறப்பம்சங்கள் இதோ!

  கியா கேரன்ஸ் :
  தென் கொரியாவை தளமாகக் கொண்ட கியா கார் தயாரிப்பு நிறுவனம் அதன் தொழில்நுட்பம் நிறைந்த வாகனங்களால் இந்திய வாடிக்கையாளர்களை திகைக்க வைத்துள்ளது. கியா கேரன்ஸ் என்பது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கார் ஆகும், இது மிக விரைவான திறனை கொண்டதாக உள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு எரிபொருள் ஆப்ஷன்களுடன் வருகிறது.  மேலும் இதில் மேனுவல், ஆட்டோமேட்டிக் மற்றும் தானியங்கி (இரட்டை கிளட்ச்) ஆகிய மூன்று வசதிகளும் உள்ளன. கியா கேரன்ஸ் காரின் விலை ரூ.9.59 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

  MORE
  GALLERIES