முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » மீண்டும் வந்து விட்டது Pulsar 220F..! 2023 மாடல் ரூ.1.39 லட்சத்தில் அறிமுகம்...

மீண்டும் வந்து விட்டது Pulsar 220F..! 2023 மாடல் ரூ.1.39 லட்சத்தில் அறிமுகம்...

கடந்த ஏப்ரல் 2022-ல் இந்த மாடல் அமைதியாக நிறுத்தப்பட்ட நிலையில், சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பஜாஜ் பல்சர் 220F இப்போது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

  • 15

    மீண்டும் வந்து விட்டது Pulsar 220F..! 2023 மாடல் ரூ.1.39 லட்சத்தில் அறிமுகம்...

    வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக பிரபலமாக இருந்த பஜாஜ் பல்சர் 220எஃப் (Pulsar 220F) இப்போது மீண்டும் வந்துவிட்டது..! பஜாஜ் நிறுவனம் தனது மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான தயாரிப்பான Pulsar 220F பைக்கை ரூ.1,39,686 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. நம் நாட்டில் மிகவும் விரும்பப்படும் செயல்திறன் சார்ந்த பைக்குகளில் ஒன்றாக Pulsar 220F இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 25

    மீண்டும் வந்து விட்டது Pulsar 220F..! 2023 மாடல் ரூ.1.39 லட்சத்தில் அறிமுகம்...

    புதிய பல்சர் N250 மற்றும் F250 அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே , கடந்த ஆண்டு இந்த Pulsar 220F மாடல் சைலென்ட்டாக நிறுத்தப்பட்டது. பஜாஜ் நிறுவனத்தின் Pulsar 220F முதன்முதலில் கடந்த 2007-ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகமானது முதல் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த இந்த பைக் மாடல் அவ்வப்போது சிறு சிறு அப்டேட்ஸ்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்தது.

    MORE
    GALLERIES

  • 35

    மீண்டும் வந்து விட்டது Pulsar 220F..! 2023 மாடல் ரூ.1.39 லட்சத்தில் அறிமுகம்...

    எனினும் கடந்த ஏப்ரல் 2022-ல் இந்த மாடல் அமைதியாக நிறுத்தப்பட்ட நிலையில், சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பஜாஜ் பல்சர் 220F இப்போது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இதற்கான புக்கிங்ஸ் இப்போது ஓபன் செய்யப்பட்டுள்ளன. பஜாஜ் நிறுவனத்தின் Pulsar 220F பைக்கானது அதன் நேர்த்தியான வடிவமைப்பு, நீடித்துழைக்கும் தன்மை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை ஆகியவற்றின் காரணமாக மிக நன்றாக விற்பனையாகி வரும் பைக் மாடல் ஆகும்.

    MORE
    GALLERIES

  • 45

    மீண்டும் வந்து விட்டது Pulsar 220F..! 2023 மாடல் ரூ.1.39 லட்சத்தில் அறிமுகம்...

    2023 மாடல் பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கில் புதிதாக என்ன இருக்கிறது.? : நவீன ரைடர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்கின் டிசைனை பொறுத்தவரை இந்த 2023 Pulsar 220F இதற்கு முன் இருந்த டிசைனுக்கு ஒத்ததாகவே இருக்கும். இருப்பினும் திருத்தப்பட்ட கிராபிக்ஸ் மற்றும் கார்பன் எடிஷன் உட்பட புதிய கலர் ஸ்கீம்களில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என தெரிகிறது. இந்த மாடல் இப்போது OBD-2 compliant-ஆக இருக்கும் என தெரிகிறது. தற்போது மீண்டும் வெளியிடப்பட்டுள்ள 2023 Pulsar 220F பைக்கின் டெலிவரிகள் இம்மாத இறுதிக்குள் தொடங்கும் என்று டீலர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் டெயில்லைட்ஸ் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    மீண்டும் வந்து விட்டது Pulsar 220F..! 2023 மாடல் ரூ.1.39 லட்சத்தில் அறிமுகம்...

    இது டெலஸ்கோபிக் ஃப்ரன்ட் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் டூயல் ஸ்பிரிங்-லோடட் கேஸ்-சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்ஸ் உள்ளிட்ட அம்சங்களையும் பெறுகிறது. மீண்டும் வெளியிடப்பட்டிருக்கும் 2023 Pulsar 220F மாடலின் ஆன்ரோடு விலை ரூ.1.75 லட்சம் வரை உள்ளது. இந்த விலைகளுடன் ஒப்பிடுகையில், பல்சர் F250 (சிங்கிள் - சேனல் ஏபிஎஸ் வேரியன்ட்) தற்போது ரூ.1.4 லட்சம் விலையில் விற்கப்படுகிறது. கடந்த 2022-ல் விற்பனை செய்யப்பட்டதை விட Pulsar 220F தற்போது தோராயமாக ரூ.5,000- ரூ.7,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    MORE
    GALLERIES