பஜாஜ் ஆட்டோ நிறுவனமானது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Dominar 400 மற்றும் Dominar 250 மோட்டார் சைக்கிள்களை, மலேசியாவில் 2023 மலேசியா ஆட்டோஷோ மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை மேட்-இன் இந்தியா மோட்டார் சைக்கிள்கள் என்றாலும், மலேசியாவில் டோமினார் ரேஞ்ச் வேறு பிராண்ட் பெயரில் விற்கப்படுகிறது. பஜாஜ் நிறுவனத்தின் dominar 400 மற்றும் Dominar 250 பைக்குகள் முறையே மலேசியாவில் Modenas Dominar 400 மற்றும் Modenas Dominar 250 என குறிப்பிடப்படுகின்றன.
மலேசியாவில் Bajaj Auto-வின் பார்ட்னராக modenas உள்ளது மற்றும் இந்த 2 நிறுவனங்களும் கடந்த 2 வருடங்களாக பார்ட்னர்ஷிப்பில் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு இரு நிறுவனங்களும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில், மலேசியாவில் மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தவும் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளவும் பஜாஜ் மற்றும் மொடெனாஸ் ஒப்பு கொண்டது இங்கே குறிப்பிடத்தக்கது.
Dominar 400 மற்றும் Dominar 250 மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் உள்ள அதன் ஆலையிலிருந்து மலேசியாவிற்கு Completely Knocked Down (CKD) கிட்ஸ்களாக பஜாஜ் நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது. பின்னர் அவை தென்கிழக்கு ஆசிய நாட்டில் உள்ள Modenas ஆலையில் லோக்கல்லில் அசெம்பிள் செய்யப்படுகின்றன. புதிய பிராண்ட் பெயரை தவிர்த்து விட்டு பார்த்தால் மலேசியாவிற்கான Dominar 400 மற்றும் 250 ஆகிய பைக்குகள் இந்தியாவில் விற்கப்படும் அதே மாடல்களை ஒத்ததாகவே இருக்கின்றன. அதாவது மலேசியா மற்றும் இந்தியாவில் விற்கப்படும் Dominar 400-க்கும் 250-க்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
அந்த வகையில் Modenas Dominar 400 பைக்கானது டால் வைசர், பில்லியன் பேக்ரஸ்ட், ஹேண்ட் கார்ட், யுஎஸ்பி சார்ஜிங் மற்றும் லக்கேஜ் கேரியர் உள்ளிட்ட சில ஃபேக்டரி- ஃபிட்டட் டூரிங் ஆக்சஸரீஸை பெறுகிறது. இதன் எஞ்சின் இன்டெக்ரேடட் மெட்டல் ஸ்கிட் பிளேட்டுடன் ஒரு பாஷ் பிளேட்டை பெறுகிறது. மலேசியாவில் விற்கப்படும் Dominar 400 பைக்கானது 373.3சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு எஞ்சினை பயன்படுத்துகிறது. இது 8,650 Rpm-ல் 39.42bhp மற்றும் 7,000 Rpm-ல் 35Nm பீக் டார்க்கை உருவாக்குகிறது.
இதற்கிடையில் Dominar 250 பைக்கானது 8,500 Rpm -ல் 27bhp மற்றும் 6,500 Rpm -ல் 23.5Nm பீக் டார்க்கை ட்யூன் செய்யும் 250 சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு எஞ்சினை கொண்டு உள்ளது.2 பைக்குகளும் டூயல்-சேனல் ஏபிஎஸ்-ஐ ஸ்டாண்டர்டாக பெறுகின்றன. மலேசியாவில் விற்கப்படும் Modenas Dominar 400 பைக்கானது சவன்னா கிரீன் மற்றும் சார்கோல் பிளாக் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.