முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » பஜாஜ் வாகன விற்பனை 21 சதவீதம் குறைவு..!

பஜாஜ் வாகன விற்பனை 21 சதவீதம் குறைவு..!

பஜாஜ் ஆட்டோ இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் உலகின் நான்காவது மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், இந்தியாவின் இரண்டவாது மிகப்பெரிய இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராகவும் இந்நிறுவனம் உள்ளது.

  • 16

    பஜாஜ் வாகன விற்பனை 21 சதவீதம் குறைவு..!

    இந்தியாவின் முன்னணி வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 2,85,995 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2022 ஜனவரி மாதத்தை காட்டிலும் 21 சதவீதம் குறைவாகும். கடந்த மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஏற்றுமதியும் 47 சதவீதம் குறைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    பஜாஜ் வாகன விற்பனை 21 சதவீதம் குறைவு..!

    பஜாஜ் ஆட்டோ இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனம் ஆகும். இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் உலகின் நான்காவது மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், இந்தியாவின் இரண்டவாது மிகப்பெரிய இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராகவும் இந்நிறுவனம் உள்ளது. பஜாஜ் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் கார்களை உற்பத்தி செய்துள்ளது. XCD, பிளாட்டினா, டிஸ்கவர், பல்சர் மற்றும் அவெஞ்சர் ஆகியவை தற்போது தயாரிப்பில் இருக்கும் மோட்டார் சைக்கிள்களாகும். பஜாஜ் ULC என்ற மிகவும் விலைமலிவான காரையும் பஜாஜ் தயாரிக்கிறது. இந்த நிலையில், பஜாஜின் கடந்த கால விற்பனை எப்படி இருந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 36

    பஜாஜ் வாகன விற்பனை 21 சதவீதம் குறைவு..!

    பஜாஜின் கடந்த கால விற்பனை : 2023 ஜனவரியில் மொத்த இரு சக்கர வாகன விற்பனை 25 சதவீதம் சரிந்து 2,41,107 ஆக இருந்தது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 3,23,430 வாகனங்களுடன் ஒப்பிடுகையில், உள்நாட்டில் விற்பனை 4 சதவீதம் உயர்ந்து 1,40,428 யூனிட்டுகளாக இருந்தது மற்றும் ஏற்றுமதி 46 சதவீதம் சரிந்துள்ளது. அறிக்கையின்படி, 2022 இல் மதிப்பாய்வு செய்யப்பட்ட காலத்தில் 1,00,679 ஆகும்.

    MORE
    GALLERIES

  • 46

    பஜாஜ் வாகன விற்பனை 21 சதவீதம் குறைவு..!

    இந்த நிலையில் பஜாஜ் ஆட்டோ லிமிடெட்டின் மொத்த வாகன விற்பனை கடந்த ஜனவரி மாதத்தில் 21 சதவீதம் சரிந்து 2,85,995 ஆக இருந்தது. இந்நிறுவனத்தின் வாகன விற்பனை முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 3,63,443 ஆக இருந்தது. 2022 ஜனவரியில் 1,49,656 யூனிட்களாக இருந்த மொத்த உள்நாட்டு விற்பனை முந்தைய மாதத்தில் 16 சதவீதம் அதிகரித்து 1,73,270 யூனிட்களாக இருந்தது. ஏற்றுமதிகள் ஆண்டுக்கு ஆண்டு 47 சதவீதம் குறைந்து 1,12,725 யூனிட்டுகளாக உள்ளது என்று நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 56

    பஜாஜ் வாகன விற்பனை 21 சதவீதம் குறைவு..!

    பஜாஜ் நிறுவனம் கடந்த டிசம்பர் 2022 ஆம் ஆண்டு மொத்தமாக 247,024 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதே நிறுவனம் கடந்த 2021 ஆண்டு 318,769 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது 23% விற்பனை சரிவு ஆகும். பஜாஜ் ஆட்டோ 2022 ஜனவரியில் மொத்தம் 2,13,787 வாகனங்களை பல்வேறு வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    பஜாஜ் வாகன விற்பனை 21 சதவீதம் குறைவு..!

    கடந்த ஜனவரி மாதத்தில் பஜாஜின் போட்டி நிறுவனங்களான மாருதி சுசுகி, கியா ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை சிறப்பாக இருந்தது. கியா இந்தியா நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 28,634 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2023 ஜனவரி மாதத்தில் கியா இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை 48 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் பஜாஜ் ஆட்டோ விற்பனை சரிவு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES