பிரபல ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் துவங்கி நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ 2023-யில் தனது புதிய லேண்ட் க்ரூஸர் 300 எஸ்யூவி-யை (Land Cruiser 300 SUV) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய Toyota Land Cruiser 300 ஃபுல்-சைஸ்டு SUV காரானது ரூ. 2.17 கோடி (எக்ஸ்-ஷோரூம் விலை) ஆரம்ப விலையில் கிடைக்கிறது மற்றும் இந்த SUV-யின் ஆன்-ரோட் விலை சுமார் ரூ. 2.5 கோடி ஆகும். இது Lexus LX மற்றும் Range Rover போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
Toyota Land Cruiser 300 கார் கடந்த 2021-ஆம் ஆண்டில் உலகளவில் அறிமுகமானது என்றாலும் இந்த காருக்கு ஏற்பட்ட டிமாண்ட் மற்றும் செமிகண்டக்டர் சிப்ஸ்-களில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக, இந்த புதிய LC300-க்கான காத்திருப்பு காலம் சில மார்க்கெட்களில் 3 - 4 வருடங்கள் வரை இருக்கிறது. தற்போது சப்ளை-செயின் லிமிட்டேஷன்ஸ் மேம்படுவதால் இந்த காத்திருப்பு காலம் சீராக குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய Toyota Land Cruiser 300 காருக்கான புக்கிங்ஸ் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களில் கடந்த ஆகஸ்ட் 2022-ல் ரூ.10 லட்சம் டோக்கன் தொகையில் ஓபன் செய்யப்பட்டன. புதிய LC300 காரின் முதல் பேட்சிற்கான புக்கிங்ஸ் முழுவதும் முடிந்ததை அடுத்து டொயோட்டா இந்த SUV-க்கான புதிய புக்கிங்ஸ்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. டொயோட்டா நிறுவனம் LC300 எஸ்யூவி-க்கு 3 வருட /1 லட்சம் கிமீ வாரண்டியை வழங்குகிறது.
புதிய லேண்ட் க்ரூஸர் 300 குறிப்பிடத்தக்க வகையில் திருத்தப்பட்ட ஸ்டைலிங்குடன் வருகிறது, என்றாலும் இதன் ஒரிஜினல் ஷேப் மற்றும் ஃபீல் பழைய LC200-ஐ போலவே உள்ளது. 2023 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் LC300-ல் புதிதாக உருவாக்கப்பட்ட 3.3 லிட்டர் V6 டீசல் எஞ்சினானது, 10-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த SUV டொயோட்டாவின் TNGA பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தோற்றத்தை பொறுத்தவரை இந்த புதிய SUV-யானது , ஸ்கொயர் எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் வீல் ஆர்ச்சஸ், 20-இன்ச் அலாய் வீல்ஸ் மற்றும் A- மற்றும் D-பில்லர்களில் குறிப்பிடத்தக்க கின்க்ஸுடன் கூடிய லார்ஜ் ஃப்ரன்ட் கிரில் உள்ளிட்டவற்றை கொண்டு ஒரு மறுசீரமைப்பை பெற்றுள்ளது.
அம்சங்களை பொறுத்தவரை புதிய LC 300 கார் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே சப்போர்ட், டாப்-நாட்ச் ஆடியோ சிஸ்டமாக 14-ஸ்பீக்கர் கேபிஎல் ஆடியோ சிஸ்டம், ஹெட்-அப் டிஸ்ப்ளே மற்றும் ஃபிங்கர்பிரின்ட் ஆத்தன்டிகேஷன் சிஸ்டமுடன் வருகிறது. டொயோட்டா இந்த SUV-யை 5 எக்ஸ்டீரியர் கலர் ஆப்ஷன்களில் வழங்குவதோடு பிளாக், பீஜ் மற்றும் டூயல்-டோன் ரெட் மற்றும் பிளாக் உட்பட 3 வெவ்வேறு அப்ஹோல்ஸ்டரி ஆப்ஷன்களில் வழங்குகிறது.
இந்த கார் இது 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 305bhp, 3.3-லிட்டர் டர்போ V6 டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த எஞ்சின் மூலம் 0-100 கிமீ வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் எட்டிவிடும் என்று நிறுவனம் கூறுகிறது. இது 230 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 4×4 டிரைவ் டிரெய்ன் சிஸ்டம் ஸ்டாண்டர்டுடன் வருகிறது.