விரைவில் டெலிவரி ஆரம்பம் : ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வந்தன. ரூ.1 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்களுக்கு வெகு விரைவில் கார்கள் டெலிவரி செய்யப்படும் என்று ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூடுதல் வசதிகள் : ஹூண்டாய் ஐயோனிக் 5 காரில் நீடித்து உழைக்கத்தக்க மற்றும் மறுசுழற்சி செய்யக் கூடிய உயர் தரமான பொருட்களை கொண்டு இண்டீரியர் டிசைன் செய்யப்பட்டுள்ளது. 12.3 இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர், டச் ஸ்க்ரீன் வசதி கொண்ட இண்ஃபோடெயின்மெண்ட், ஆண்டிராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே போன்ற வசதிகள் உள்ளன.
விபத்தில் இருந்து பயணிகளை காக்க 6 ஏர்பேக்குகள், என்ஜின் பார்கிங் பிரேக், டிஸ்க் பிரேக், 2 ஏடிஎஸ் மற்றும் 72.6 கிலோ வாட் பேட்டரி பேக்கேஜ் போன்றவை இந்த காரில் இடம்பெற்றிருக்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 631 கி.மீ. தூரத்திற்கு பயணிக்கலாம். பேட்டரியை சார்ஜ் செய்ய 350 கிலோவாட் கொண்ட டிசி சார்ஜர் இடம்பெற்றிருக்கும். இதை வைத்து 18 நிமிடங்களில் 10 சதவீதம் முதல் 80 சதவீத சார்ஜ் செய்து கொள்ள முடியும். எலெக்ட்ரிக் காரில் தொலைதூரம் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.