கோவிட்-19 தொற்றின் தீவிர அலை அபாயம் காரணமாக ஆட்டோ ஷோ இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஆட்டோ எக்ஸ்போ 2023 எடிஷனானது இரு வெவ்வேறு முக்கிய இடங்களில் நடைபெற உள்ளது. புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஆட்டோ எக்ஸ்போ காம்போனென்ட் ஷோ-வும், கிரேட்டர் நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போ மோட்டார் ஷோ-வும் நடைபெறுகிறது.
ஆட்டோ எக்ஸ்போ 2023 எடிஷன் நடைபெறும் நாட்கள் மற்றும் நேரம் : உண்மையில் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வு ஜனவரி 11 - ஜனவரி 18 வரை ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் இரண்டு நாட்கள் அதாவது ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மீடியாக்கள் மட்டுமே பங்கேற்கும். ஜனவரி 13-ஆம் தேதி காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை வணிகங்களுக்காக திறந்திருக்கும். அதே நேரம் பொதுமக்களுக்கு இந்த ஆட்டோ எக்ஸ்போ ஷோ வரும் ஜனவரி 14 - 18 வரை ஓபன் செய்யப்படும். தினமும் காலை காலை 11 மணிக்கு ஆட்டோ எக்ஸ்போ தொடங்கும் என்றாலும் ஜனவரி 14 & 15 ஆகிய இரு நாட்களில் இரவு 8 மணியுடனும், ஜனவரி 16 & 17 இரவு 7 மணியுடனும், இறுதி நாளான ஜனவரி 18-ஆம் தேதி மாலை 6 மணியுடனும் ஆட்டோ எக்ஸ்போ ஷோ க்ளோஸ் செய்யப்படும்.
ஆட்டோ எக்ஸ்போ 2023 ஷோவிற்கான டிக்கெட் விலை விவரங்கள் : ஜனவரி 13-ஆம் தேதிக்கான ஆட்டோ எக்ஸ்போ 2023 ஷோவிற்கான டிக்கெட் விலை ரூ.750-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் ஆட்டோ எக்ஸ்போ டிக்கெட் விலை ரூ.475 ஆகும். ஜனவரி 16 - ஜனவரி 18 ஆகிய கடைசி 3 நாட்கள் ஆட்டோ எக்ஸ்போ ஷோவிற்கான டிக்கெட் விலை ரூ.350 ஆகும்.
என்ன எதிர்பார்க்கலாம் ? : இந்த ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் 114-க்கும் மேற்பட்ட தொழில்துறை பங்குதாரர்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது. சமீபத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கைகளின்படி, இந்த எக்ஸ்போவில் பல முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் தரப்பிலிருந்து சுமார் 48 புதிய வாகன அறிமுகங்கள் இருக்க கூடும். அதே போல அனைத்து முக்கிய பிராண்டுகளும் தங்கள் லேட்டஸ்ட் கார்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை இந்த எக்ஸ்போவில் காட்சிப்படுத்துகின்றன. Maruti Suzuki நிறுவனம் ஆல்-ப்ராடக்ட் ஷோகேஸ் மற்றும் Metaverse போன்ற புதுமையான விரிச்சுவல் ஜோனை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் எக்ஸ்போவர்ஸ் லாபி, அட்வென்ச்சர் ஜோன், டெக்னலாஜி ஜோன், ஸ்டுடியோ ஜோன், லாஞ்ச் ஜோன், என்டெர்டெயின்மென்ட் ஜோன் உள்ளிட்டவை அடங்கும்.
ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் வாகன உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் கான்செப்ட் எஸ்யூவி மற்றும் 2 புதிய எஸ்யூவி-க்கள் மற்றும் கிராண்ட் விட்டாரா, எக்ஸ்எல்6, சியாஸ், எர்டிகா, பிரெஸ்ஸா, பலேனோ மற்றும் ஸ்விஃப்ட் போன்ற கஸ்டமைஸ்டு ரேஞ்ச் உள்ளிட்ட பல வாகன வரிசைகளை காட்சிப்படுத்துவார்கள். ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஆல்-எலெக்ட்ரிக் எஸ்யூவியான Hyundai IONIQ5-வை இந்த நிகழ்வில் வெளியிடும். தவிர டிவிஎஸ் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் யமஹா உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்தும் புதிய அறிமுகங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.