ஹோம் » போடோகல்லெரி » ஆட்டோமொபைல் » சும்மா நச்சுனு இருக்கே.. ஆட்டோ எக்ஸ்போவை கலக்கிய டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்..!

சும்மா நச்சுனு இருக்கே.. ஆட்டோ எக்ஸ்போவை கலக்கிய டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்..!

2023 ஆம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையாக எலெக்ட்ரிக் வாகனங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. செய்தியாளார் : ரொசாரியோ ராய்

 • 16

  சும்மா நச்சுனு இருக்கே.. ஆட்டோ எக்ஸ்போவை கலக்கிய டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்..!

  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பதினோறாம் தேதி நொய்டாவில் தொடங்கியது 2023 ஆம் ஆண்டிற்கான வாகன கண்காட்சி. கண்காட்சி தொடங்கியது முதலே பல முன்னனி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வாகனங்களை அறிமுகம் செய்தன. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையாக எலக்ட்ரிக் வாகனங்களும் இந்தக் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டன. அந்தட வகையில் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகியிருக்கும் டாமப் 5 எலக்ட்ரிக் கார்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்..

  MORE
  GALLERIES

 • 26

  சும்மா நச்சுனு இருக்கே.. ஆட்டோ எக்ஸ்போவை கலக்கிய டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்..!

  மாருதி சுசுகி : மாருதி சுசுகி தனது முதல் எஸ்யுவி எலக்ட்ரிக் காரை அறி்முகம் செய்துள்ளது. இந்தக் கார் 60 KW திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் தூரம் செல்லும் இந்தக் கார். முக்கோண வடிவ முன்புற லைட், ஏரோ வீல்ஸ், கிரே ஷேடோ என அசத்தலான வடிவமைப்புடன் உருவாகியுள்ளது மாருதி சுசுகியின் எலக்ட்ரிக் எஸ்யுவி கார்.

  MORE
  GALLERIES

 • 36

  சும்மா நச்சுனு இருக்கே.. ஆட்டோ எக்ஸ்போவை கலக்கிய டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்..!

  டாடா அவின்யா : வாகன கண்காட்சி தொடங்கிய முதல் நாளே டாடா நிறுவனம் தனது அவின்யா எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது. வருங்கால கார்களின் வடிவமைப்பின் முன்னோடியாக இந்த அவின்யா கார் அமைந்துள்ளது. பின்புறத்தில் எல்இடி லைட்டுகளுடன் கூடிய ஹரிசான்  விங், பட்டர்ஃபிளை டோர்ஸ், ரிவால்விங் சீட் என அட்வான்ஸ்ட் அம்சங்களுடன் அசத்தலாக உருவாக்கப்பட்டுள்ளது அவின்யா கார். சீட் ஹெட்ரெஸ்ட்டில் ஸபீக்கர்கள் அமைக்கப்பட்டுள்ளது இந்தக் காரின் மற்றொரு சிறப்பம்சம்.

  MORE
  GALLERIES

 • 46

  சும்மா நச்சுனு இருக்கே.. ஆட்டோ எக்ஸ்போவை கலக்கிய டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்..!

  லெக்சஸ் LF-30 : ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான லெக்சசும் தனது புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. ஓட்டுநருக்கு அதிக வசதி மற்றும் டெக்னாலஜி அப்டேட்டுகளை வழங்கும் Tazuna concept – தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது லெக்சஸ் LF-30. இரண்டு புறமும் மேல்நோக்கி திறக்கும் Gulwing Doors இந்தக் காரின் சிறப்பம்சம். இந்தக் காரின் மேற்புறம் கண்ணாடியுன் கூடிய கிளாஸ் ரூஃப் கொண்டுள்ளது. இந்தக் காரின் ஒவ்வொரு சக்கரத்திலும் தலா 544 hp சக்தியை உருவாக்கும் எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்தக் காரில் 110 KWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 56

  சும்மா நச்சுனு இருக்கே.. ஆட்டோ எக்ஸ்போவை கலக்கிய டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்..!

  லெக்சஸ் LF-Z : லெக்சஸ் அநிறுவனம் இதே வாகன கண்காட்சியில் மற்றொரு அசத்தலான எலக்ட்ரிக் காரையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ட்ரைவ் மோட், நேவிகேசன் உள்ளிட்டவற்றை தன்னால அறிந்து கொள்ளும் ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் டெக்னாலஜியுடன் உருவாக்கப்பட்டுள்ளது தான் லெக்சஸ் LF-Z. 90 KWh திறன் கொண்ட பேட்டரி இந்தக் காரில் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 200 கிலோமீட்டர் வேகம் செல்லும் வகையில் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர் தூரம் வரை இந்தக் கார் செல்லும்.

  MORE
  GALLERIES

 • 66

  சும்மா நச்சுனு இருக்கே.. ஆட்டோ எக்ஸ்போவை கலக்கிய டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்..!

  டாடா சியரா : இந்தியாவில் முதன் முதலாக அறிமுகமான எஸ்யுவி கார் என்றே சொல்லலாம் டாடா சியராவை. பெரிய கிளாஸ் ஸ்கிரீன் விண்டோக்களுடன் டாடா சியாரா இந்தியர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்தது. தயாரிப்பே நிறுத்தப்பட்ட அந்த சியாராவை தற்போது எலக்ட்ரிக் காராக அறிமுகம் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். பழைய மாடலைப் போலவே மிகப்பெரிய விண்டோக்களுடன், 5 கதவுகள் கொண்ட காராக உருவாக்கப்பட்டுள்ளது சியாரா இவி. கிளாசிக் டைப் காரான டாடா சியரா எலக்ட்ரிக் கட்டாயம் வாடிக்கையளர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை.

  MORE
  GALLERIES