முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » 2023-ஆம் ஆண்டு டார்க்கெட்..! நாடு முழுவதும் 2,500 இபைக் சார்ஜிங் ஸ்டேஷன்கள்... அசத்தும் பிரபல நிறுவனம்..!

2023-ஆம் ஆண்டு டார்க்கெட்..! நாடு முழுவதும் 2,500 இபைக் சார்ஜிங் ஸ்டேஷன்கள்... அசத்தும் பிரபல நிறுவனம்..!

தனது சிறந்த மாதாந்திர மொத்த விற்பனையை கடந்த 2023 ஜனவரியில் 12,419 யூனிட்களை டெலிவரி செய்து பதிவு செய்துள்ளது ஏதர் எனர்ஜி நிறுவனம். அதே போல வரும் மார்ச் 2023-க்குள் 100 நகரங்களில் 150 சென்டர்களாக தனது ரீடெயில் ஃபுட் பிரின்ட்டை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 • 16

  2023-ஆம் ஆண்டு டார்க்கெட்..! நாடு முழுவதும் 2,500 இபைக் சார்ஜிங் ஸ்டேஷன்கள்... அசத்தும் பிரபல நிறுவனம்..!

  450 பிளஸ் மற்றும் 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் டூவீலர் தயாரிப்பு நிறுவனமான ஏதர் எனர்ஜி (Ather Energy) நடப்பாண்டு அதாவது 2023-ம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் சுமார் 2,500 சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக கூறி இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 26

  2023-ஆம் ஆண்டு டார்க்கெட்..! நாடு முழுவதும் 2,500 இபைக் சார்ஜிங் ஸ்டேஷன்கள்... அசத்தும் பிரபல நிறுவனம்..!

  சம்பத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஏதர் எனர்ஜி நிறுவனம் தற்போது வரை ஏற்கனவே நாட்டிலுள்ள 80 முக்கிய நகரங்களில் சுமார் 1,000 ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை இன்ஸ்டால் செய்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. ஆயிரமாக இருக்கும் இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை இந்த ஆண்டு இறுதிக்குள் 2,500-ஆக மாற்ற தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறியிருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 36

  2023-ஆம் ஆண்டு டார்க்கெட்..! நாடு முழுவதும் 2,500 இபைக் சார்ஜிங் ஸ்டேஷன்கள்... அசத்தும் பிரபல நிறுவனம்..!

  பெங்களூருவை தளமாக கொண்ட இந்த நிறுவனம், இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட தங்களது சார்ஜிங் ஸ்டேஷன்களான Ather Grids தற்போது நாட்டின் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கான மிகப்பெரிய ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்காக இருப்பதாக அத அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தற்போது இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள Ather Grids-களில் சுமார் 60 சதவீதம் நாட்டின் Tier-II மற்றும் Tier-III நகரங்களில் உள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 46

  2023-ஆம் ஆண்டு டார்க்கெட்..! நாடு முழுவதும் 2,500 இபைக் சார்ஜிங் ஸ்டேஷன்கள்... அசத்தும் பிரபல நிறுவனம்..!

  ஏதர் எனர்ஜியின் தலைமை வணிக அதிகாரியான ரவ்னீத் பேசுகையில், வலுவான சார்ஜிங் உள்கட்டமைப்பு என்பது மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை விரைவாக ஏற்று கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு காரணியாகும். அந்த வகையில் துடிப்பான பிராண்டாக செயல்பட்டு வரும் நாங்கள், இந்தியாவின் மிகப்பெரிய பப்ளிக் ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்கை உருவாக்குவதில் வலுவான முதலீடுகளை செய்துள்ளோம் என்றார். நிறுவனத்தின் கூற்றுப்படி, ஃபாஸ்ட் சார்ர்ஜிங் ஸ்டேஷன்கள் EV உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை 1.5 km/min என்ற வீதத்தில் 80% வரை சார்ஜ் செய்ய உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 56

  2023-ஆம் ஆண்டு டார்க்கெட்..! நாடு முழுவதும் 2,500 இபைக் சார்ஜிங் ஸ்டேஷன்கள்... அசத்தும் பிரபல நிறுவனம்..!

  நிறுவனத்தின் சார்ஜிங் நெட்வொர்க்கானது Ather Grid app-ஆல் சப்போர்ட் செய்யப்படுகிறது. இது அனைத்து EV உரிமையாளர்களையும் ரியல் டைமில் தங்களுக்கு அருகில் உள்ள சார்ஜிங் ஸ்டேஷன்களின் லொக்கேஷனை கண்டறிந்து பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கிறது. ஏதர் எனர்ஜியின் ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்கை அனைத்து எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்தலாம். மேலும் இந்த வசதி வரும் மார்ச் 2023 வரை இலவசமாக வழங்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 66

  2023-ஆம் ஆண்டு டார்க்கெட்..! நாடு முழுவதும் 2,500 இபைக் சார்ஜிங் ஸ்டேஷன்கள்... அசத்தும் பிரபல நிறுவனம்..!

  இது தவிர நிறுவனம் Neighbourhood Charging-ஐ சேர்த்துள்ளது. இந்த சார்ஜிங் சொல்யூஷன் அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகம், தொழில்நுட்ப பூங்காக்கள் போன்ற செமி-பிரைவேட் ஸ்பேஸ்களில் கவனம் செலுத்துகிறது. தனது சிறந்த மாதாந்திர மொத்த விற்பனையை கடந்த 2023 ஜனவரியில் 12,419 யூனிட்களை டெலிவரி செய்து பதிவு செய்துள்ளது ஏதர் எனர்ஜி நிறுவனம். அதே போல வரும் மார்ச் 2023-க்குள் 100 நகரங்களில் 150 சென்டர்களாக தனது ரீடெயில் ஃபுட் பிரின்ட்டை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு ஓசூரில் தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை துவக்கியது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES