முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » எலெக்ட்ரிக் கார் வாங்கும் ஐடியா உங்களுக்கு இருக்கா? அப்படி என்றால் நீங்கள் பெற போகும் நன்மைகளை பாருங்கள்!

எலெக்ட்ரிக் கார் வாங்கும் ஐடியா உங்களுக்கு இருக்கா? அப்படி என்றால் நீங்கள் பெற போகும் நன்மைகளை பாருங்கள்!

Electric Car |நீங்கள் எலெக்ட்ரிக் கார் வாங்க திட்டமிட்டு உள்ளீர்களா.? எலெக்ட்ரிக் கார் வாங்கினால் கிடைக்கும் சில லாபம் மற்றும் நன்மைகளை இங்கே பார்க்கலாம்...

  • 18

    எலெக்ட்ரிக் கார் வாங்கும் ஐடியா உங்களுக்கு இருக்கா? அப்படி என்றால் நீங்கள் பெற போகும் நன்மைகளை பாருங்கள்!

    பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளதால் புதிதாக டூவீலர் மற்றும் ஃபோர்வீலர் வாங்கும் மக்களின் கவனம் எலெக்ட்ரிக் வெஹிகிள் செக்மென்ட்டின் பக்கம் திரும்பி இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 28

    எலெக்ட்ரிக் கார் வாங்கும் ஐடியா உங்களுக்கு இருக்கா? அப்படி என்றால் நீங்கள் பெற போகும் நன்மைகளை பாருங்கள்!

    இதனை நாட்டில் முன்பைவிட சமீபத்திய மாதங்களில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் உள் எரிப்பு எஞ்சினை (ICE -internal combustion engine) பயன்படுத்துகின்றன. அதே நேரம் பேட்டரிகளில் சேமிக்கப்பட்ட எனர்ஜியை பயன்படுத்தி பகுதி அல்லது முழுமையாக மின்சாரத்தில் இயங்குகின்றன எலெக்ட்ரிக் கார்கள். எரிபொருள் கார்களுடன் ஒப்பிடுகையில் EV செக்மென்ட்டில் பல சவால்கள் இருந்தாலும் எலெக்ட்ரிக் கார் வாங்குவது சுற்றுச்சூழலுக்கும் உகந்தது மற்றும் எரிபொருள் செலவுகளையும் மிச்சப்படுத்துகிறது

    MORE
    GALLERIES

  • 38

    எலெக்ட்ரிக் கார் வாங்கும் ஐடியா உங்களுக்கு இருக்கா? அப்படி என்றால் நீங்கள் பெற போகும் நன்மைகளை பாருங்கள்!

    இயங்கும் செலவு குறைவு: எலெக்ட்ரிக் வாகனங்கள் பேட்டரிகளை சார்ஜ் செய்ய மின்சாரத்தை பயன்படுத்துவதால், அதன் மாதாந்திர இயக்க செலவு (running cost) பெட்ரோல் அல்லது டீசலுக்கு ஆகும் செலவில் ஒரு பகுதியே ஆகும். உதாரணமாக உங்கள் தினசரி பயண தூரம் 30 கிமீ என்றால், நீங்கள் ஒரு மாதத்திற்கு பெட்ரோலுக்கு ரூ.5,375 செலவழிப்பீர்கள். அதே சமயம் 30.2 கிலோவாட் பேட்டரி கெப்பாசிட்டி மற்றும் 312 கிமீ ரேஞ்ச் கொண்ட EV-யை வீட்டில் சார்ஜ் செய்வதற்கான செலவு ரூ.697 மட்டுமே. அதுவே பப்ளிக் சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ்செய்தால் ரூ.392 மட்டுமே செலவாகும். மாநிலங்களுக்கு மாநிலம் மின்சார விகிதம் மாறுபடலாம். ஆனால் எப்படி பார்த்தாலும் பெட்ரோல் அல்லது டீசலை ஒப்பிடும் போது விலை குறைவே.

    MORE
    GALLERIES

  • 48

    எலெக்ட்ரிக் கார் வாங்கும் ஐடியா உங்களுக்கு இருக்கா? அப்படி என்றால் நீங்கள் பெற போகும் நன்மைகளை பாருங்கள்!

    பராமரிப்பு செலவு குறைவு: ஒரு எலெக்ட்ரிக் கார் சர்விஸ் மற்றும் மெயின்டன்ஸிற்கு குறைந்த செலவில் முடிவடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் எலெக்ட்ரிக் கார்கள் குறைவான நகரும் பாகங்களையே (moving parts) கொண்டிருக்கின்றன. எனவே சர்விஸ் செய்ய அதிக புதிய திரவங்கள் அல்லது ஃபில்டர்கள் தேவையில்லை. EV-க்களுடன் ஒப்பிடும் போது பெட்ரோல் அல்லது டீசல் வேரியன்ட்களில் ஒருவர் ஆண்டுக்கு 7,000-10,000 ரூபாய் வரை எளிதில் செலவழிப்பார்.

    MORE
    GALLERIES

  • 58

    எலெக்ட்ரிக் கார் வாங்கும் ஐடியா உங்களுக்கு இருக்கா? அப்படி என்றால் நீங்கள் பெற போகும் நன்மைகளை பாருங்கள்!

    சுற்று சூழலுக்கு இணக்கமானது: மாசு அதிகரிப்பு போன்ற சுற்றுச்சூழல் சீர்கேடு நிலை கவலையளிப்பதாக உள்ளது. சாலைகளில் செல்லும் வாகனங்கள் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதன் மூலம் காற்று மாசுபாட்டின் அதிகரிப்புக்கு பங்களிக்கிறது. இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால் எலெக்ட்ரிக் வாகனங்களும் கார்பனை வெளியிடுகின்றன. ஆம், உண்மையில் EV-க்களுக்கான கார்பன் உமிழ்வு பூஜ்ஜியமாக இல்லை. எனினும் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை விட EV-க்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது.

    MORE
    GALLERIES

  • 68

    எலெக்ட்ரிக் கார் வாங்கும் ஐடியா உங்களுக்கு இருக்கா? அப்படி என்றால் நீங்கள் பெற போகும் நன்மைகளை பாருங்கள்!

    நல்ல டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸ்: எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் 17-21% ஆற்றலை வாகன இயக்கமாக மாற்றும் அதே நேரத்தில், அனைத்து EV பேட்டரிகளும் 59-62% ஆற்றலை வாகன இயக்கமாக மாற்றுகின்றன. இதனால் EV-க்கள் மிகவும் திறமையானவை. தவிர எக்ஸாஸ்ட் சிஸ்டம் (exhaus system) இல்லாததால் EV-க்கள் டிரைவிங்கின் போது அமைதியான மற்றும் மென்மையான் அனுபவத்தை தருகின்றன

    MORE
    GALLERIES

  • 78

    எலெக்ட்ரிக் கார் வாங்கும் ஐடியா உங்களுக்கு இருக்கா? அப்படி என்றால் நீங்கள் பெற போகும் நன்மைகளை பாருங்கள்!

    நல்ல வேகம்: எலெக்ட்ரிக் கார்களின் இயக்கத்தை நினைத்த மாத்திரத்தில் உடனடியாக வேகப்படுத்தலாம். இவற்றின் ஆக்ஸலரேட்டர்கள் நல்ல torque உடன் அவற்றை துரிதப்படுத் உதவுகின்றன.

    MORE
    GALLERIES

  • 88

    எலெக்ட்ரிக் கார் வாங்கும் ஐடியா உங்களுக்கு இருக்கா? அப்படி என்றால் நீங்கள் பெற போகும் நன்மைகளை பாருங்கள்!

    வரி சலுகை: எலக்ட்ரிக் கார் வாங்கினால் வரிச் சலுகையும் கிடைக்கும். 2020-21 மதிப்பீட்டு ஆண்டு முதல் EV-க்களை வாங்குவதற்காக எடுக்கப்பட்ட கடனுக்கான வட்டிக்கு ரூ.1.5 லட்சம் கழிக்க செக்ஷன் 80 EEB இன் கீழ் அனுமதிக்கப்படுகிறது. ஏப்ரல் 1, 2019 மற்றும் மார்ச் 31, 2023-க்குள் இந்த கடன் அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் தனிப்பட்ட வரி செலுத்துவோர் அல்லது வணிகத்தை நடத்தும் தனிநபர்களுக்கு மட்டுமே இது அனுமதிக்கப்படும். . மேலும், 15 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பட்ட வாகனங்களுக்கு கிரீன் டேக்ஸ் விதிக்கப்படும், அதே நேரத்தில் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

    MORE
    GALLERIES