முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி  அறிமுகம்.! எம்.ஜி மார்வெல் ஆர் எஸ்.யு.வி சூப்பர் கார்..! வண்டி சும்மா புயல்வேகத்தில் பறக்கும்...

ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி  அறிமுகம்.! எம்.ஜி மார்வெல் ஆர் எஸ்.யு.வி சூப்பர் கார்..! வண்டி சும்மா புயல்வேகத்தில் பறக்கும்...

இந்த மார்வல் ஆர் மாடல்கார்களில் ரெண்டு ரியர் மோட்டர்களிலும் 2 கியர் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது . இதனால் இந்த வண்டி சும்மா புயல்வேகத்தில் பறக்கும் .

 • 16

  ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி  அறிமுகம்.! எம்.ஜி மார்வெல் ஆர் எஸ்.யு.வி சூப்பர் கார்..! வண்டி சும்மா புயல்வேகத்தில் பறக்கும்...

  வந்துவிட்டது கார் உலகத்தின் அடுத்தக்கட்ட புரட்சி , ஒருமுறை பேட்டரி சார்ஜ் செய்தாலே 402 கிலோமீட்டர்கள் தூரம் வரை பறக்கும் புதுவகை காரை அறிமுகப்படுத்தி விட்டது பிரிட்டிஷின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மோரிஸ் காரேஜ் (எம்.ஜி). பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆல்-எலெக்ட்ரிக் எம்.ஜி மார்வெல் ஆர் எஸ்.யு.வி சூப்பர் கார் , இதை ஆட்டோ எக்ஸ்போ 2023ல் இந்த காரின் சிறப்பு அம்சங்களை விவரித்து அறிமுகப்படுத்தியது எம்.ஜி நிறுவனம்.

  MORE
  GALLERIES

 • 26

  ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி  அறிமுகம்.! எம்.ஜி மார்வெல் ஆர் எஸ்.யு.வி சூப்பர் கார்..! வண்டி சும்மா புயல்வேகத்தில் பறக்கும்...

  இந்த சூப்பர் கார்கள் கம்போர்ட், லக்சரி மற்றும் பர்பார்மன்ஸ் என்கிற மூன்று வகையான வேரியண்ட்களில் வருகிறது. கூடிய விரைவில் இந்தியாவின் ஆட்டோ மொபைல் மார்க்கெட்டிலும் புகுந்து விளையாட இருக்கிறது இந்த சூப்பர் கார். ஒரே முறை பேட்டரி சார்ஜ் செய்தால் 402 கிலோ மீட்டர்கள் வரை செல்லக்கூடிய அபார திறமை கொண்டது இந்தசூப்பர் கார்.

  MORE
  GALLERIES

 • 36

  ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி  அறிமுகம்.! எம்.ஜி மார்வெல் ஆர் எஸ்.யு.வி சூப்பர் கார்..! வண்டி சும்மா புயல்வேகத்தில் பறக்கும்...

  இந்த கார்கள் பல்வேறு உயரக தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகளால் நிறைந்துள்ளது. பொதுவாக எஸ்.யு.வி கார்களின் வீல் பேஸ் 2804 மிமி தான் இருக்கும். ஆனால் இதில் 4674 மிமி நீளம், 1919மிமி அகலம் உள்ளது . ( மூன்று வேரியண்ட்களிலும் இதே அளவுதான் ) . பவர் டெலிவரியை பொறுத்தவரை ஏ.டபள்யூ.டி எனப்படும் அதிநவீன ஆல் டிரைவ் மோட்டார்கள் பொருத்திய வீல் உள்ளது . இதனால் எளிதில் 284 பி.ஹச்,பி,யுடன் 665 என்.எம் டார்க்கை அடைய வழிவகை செய்கிறது .

  MORE
  GALLERIES

 • 46

  ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி  அறிமுகம்.! எம்.ஜி மார்வெல் ஆர் எஸ்.யு.வி சூப்பர் கார்..! வண்டி சும்மா புயல்வேகத்தில் பறக்கும்...

  0 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 1.8 நொடிகளில் அடைந்துவிட முடியும் . 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.9 நொடிகளிலேயே அடைய முடியும். அதாவது 5 நொடிகளுக்கு குறைவான நேரத்தில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டிவிட முடியும். சாதாரண மோதல்களில் ஒரே சார்ஜில் 370 கிலோமீட்டர் தூரம் வரை போகும் இந்த கார் , கம்போர்ட் , லக்சரி போன்ற மோதல்களில் டார்க் சற்று குறைந்து 410 என்.எம் ஆக இருக்கும் . இதனால் இந்த வகை கார்களில் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்ட 7.9 நொடிகள் தேவைப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 56

  ஆட்டோ எக்ஸ்போவில் அதிரடி  அறிமுகம்.! எம்.ஜி மார்வெல் ஆர் எஸ்.யு.வி சூப்பர் கார்..! வண்டி சும்மா புயல்வேகத்தில் பறக்கும்...

  கம்போர்ட் , லக்சரி மற்றும் பர்பார்மன்ஸ் ஆகிய மூன்று வகையான வேரியண்ட்களிலும் அதிகப்படியான வேகம் 200 கிலோமீட்டர் பர் ஹவர் தான் .அசத்தலான போஸ் ஆடியோ சிஸ்டம் இந்த கார்களின் இன்டிரியர்களில் உள்ளது. ஸ்லிம்மான ஏர் வென்ட் , சூப்பரான லைட்டிங் , கர்வான சன் ரூப் , சிறப்பான வென்டிலேட்டட் சீட்கள் என அசத்தல் அம்சங்கள் நிறைந்து உள்ளது . ஒயர்லஸ் சார்ஜர் , 19.3 இன்ச் டச் திரை , 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்ட்டர் இதில் உள்ளது .

  MORE
  GALLERIES

 • 66