1926-ம் ஆண்டு முதல் 1933-ம் ஆண்டு வரையில் உற்பத்தியில் இருந்த கார் Studebaker President. அந்தக் காலத்தின் ஒரு காரின் பெருமை சில காலம் மட்டுமே நீடித்திருக்கும் வேளையில் உலகத் தலைவர்கள், பணக்காரர்களின் விருப்பப் பட்டியலில் Studebaker President இருந்தது. அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தைச் சேர்ந்த Studebaker கார்ப்ரேஷன் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டது. (Image source: Team BHP)