முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » மார்ச் 2023-ல் அதிக தள்ளுபடியுடன் கிடைக்கும் 7 சிறந்த எஸ்யூவி-க்களின் பட்டியல்..!

மார்ச் 2023-ல் அதிக தள்ளுபடியுடன் கிடைக்கும் 7 சிறந்த எஸ்யூவி-க்களின் பட்டியல்..!

Stage 2 BS6 விதிகள் ஏப்ரலில் நடைமுறைக்கு வருவதற்கு முன் உற்பத்தியாளர்கள் வாகன உற்பத்தியை அதிகரிக்க பார்க்கிறார்கள்.

  • 19

    மார்ச் 2023-ல் அதிக தள்ளுபடியுடன் கிடைக்கும் 7 சிறந்த எஸ்யூவி-க்களின் பட்டியல்..!

    2022-23ஆம் நிதியாண்டு விரைவில் முடிவடைய உள்ள நிலையில் வாகன உற்பத்தியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட SUV-க்களில் இந்த மார்ச் மாதம் ரூ.3 லட்சம் வரையிலும் தள்ளுபடி வழங்குகிறார்கள். இதற்கு நிதியாண்டு முடிவுக்கு வருகிறது என்பது காரணம் அல்ல, ஏப்ரல் 2023 முதல் Stage 2 BS6 விதிமுறைகளை அமலுக்கு வர உள்ளதே.

    MORE
    GALLERIES

  • 29

    மார்ச் 2023-ல் அதிக தள்ளுபடியுடன் கிடைக்கும் 7 சிறந்த எஸ்யூவி-க்களின் பட்டியல்..!

    Stage 2 BS6 விதிமுறைகளை அமலுக்கு வருவதால் இந்திய சந்தையில் உள்ள கார்களுக்கு கூடுதல் அம்சங்கள் கிடைக்கும் ஆனால் கூடுதல் செலவில். எனவே தான் Stage 2 BS6 விதிகள் ஏப்ரலில் நடைமுறைக்கு வருவதற்கு முன் உற்பத்தியாளர்கள் வாகன உற்பத்தியை அதிகரிக்க பார்க்கிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 39

    மார்ச் 2023-ல் அதிக தள்ளுபடியுடன் கிடைக்கும் 7 சிறந்த எஸ்யூவி-க்களின் பட்டியல்..!

    நீங்கள் ஏப்ரல் 2023-க்கு முன் நீங்கள் கார் வாங்க விரும்பினால் டாப் 7 SUV-க்களின் பட்டியலை கீழே பாருங்கள் : சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் (Citroen C5 Aircross) : Citroen நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அதன் ஃபிளாக்ஷிப் SUV C5 Aircross-ன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியது. எனினும் முந்தைய மாடலின் விற்க்கப்படாத Citroen C5 யூனிட்களை வாங்கினால் ரூ.3 லட்சம் வரை பலன்களை நிறுவனம் வழங்குகிறது. சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் எஸ்யூவி-யின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.37.17 லட்சம் ஆகும்.

    MORE
    GALLERIES

  • 49

    மார்ச் 2023-ல் அதிக தள்ளுபடியுடன் கிடைக்கும் 7 சிறந்த எஸ்யூவி-க்களின் பட்டியல்..!

    ஜீப் மெரிடியன் (Jeep Meridian) : ஜீப் மெரிடியன் ஒரு சிறந்த SUV ஆகும். இந்த SUV-யின் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்ஸ்களுக்கு ரூ. 2.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இந்திய சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோஎன் காருக்கு அடுத்தபடியாக மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு கீழே வாங்க கூடிய காராக இருக்கிறது ஜீப் மெரிடியன். அதாவது மஹிந்திரா ஸ்கார்பியோஎன் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகிய 2 கார்களுக்கு இடையே ஏதாவது எஸ்யூவி வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஜீப் மெரிடியன் சிறந்த தேர்வாக இருக்கிறது. ஜீப் மெரிடியன் எஸ்யூவி-யின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.30.10 லட்சமாக இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 59

    மார்ச் 2023-ல் அதிக தள்ளுபடியுடன் கிடைக்கும் 7 சிறந்த எஸ்யூவி-க்களின் பட்டியல்..!

    வோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Tiguan) : இந்திய சந்தையில் Jeep Meridian மற்றும் Skoda Kodiaq கார்களுக்கு சிறந்த போட்டியாக இருக்கிறது Volkswagen Tiguan. இந்த காரை மார்ச் 2023-ல் வாங்குவோர் ரூ.1.85 லட்சம் வரை சேமிக்கும் வாய்பு பெறுகிறார்கள். VW Tiguan SUV-யின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.33.49 லட்சமாக இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 69

    மார்ச் 2023-ல் அதிக தள்ளுபடியுடன் கிடைக்கும் 7 சிறந்த எஸ்யூவி-க்களின் பட்டியல்..!

    ஜீப் காம்பஸ் (Jeep Compass) : வரும் ஏப்ரல் 2023-க்கு முன் இந்த ஜீப் காம்பஸ் எஸ்யூவி-யை வாங்கினால் ரூ. 1.5 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பை ஜீப் நிறுவனம் அதன் என்ட்ரி லெவல் எஸ்யூவி-யான காம்பஸை வழங்குகிறது. ஒரு சிறந்த SUV-யாக இருக்கும் காம்பஸ் மற்றும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது, பல ஆர்வலர்கள் இந்த SUV-யை விரும்புகிறார்கள். ஜீப் காம்பஸ் எஸ்யூவி-யின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.20.99 லட்சமாக இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 79

    மார்ச் 2023-ல் அதிக தள்ளுபடியுடன் கிடைக்கும் 7 சிறந்த எஸ்யூவி-க்களின் பட்டியல்..!

    எம்ஜி ஆஸ்டர் (MG Astor) : இந்த கார் அதன் விலை வரம்பில் ஒரு சிறந்த பேக்கேஜ் ஆகும். இந்த செக்மென்ட்டில் பல முன்னணி போட்டி நிறுவனங்களிடமிருந்து கடும் சவாலை எதிர்கொள்கிறது. MG Motor India இந்த SUV-யை இந்த மார்ச் மாதத்தில் வாங்கினால் ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடியை வழங்குகிறது. MG Astor SUV-யின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.10.51 லட்சம் ஆகும்.

    MORE
    GALLERIES

  • 89

    மார்ச் 2023-ல் அதிக தள்ளுபடியுடன் கிடைக்கும் 7 சிறந்த எஸ்யூவி-க்களின் பட்டியல்..!

    ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) : ஸ்கோடா நிறுவனம் ஏப்ரல் 2023-க்கு முன் Kushaq எஸ்யூவி-யை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1.25 லட்சம் வரை சேமிப்பை வழங்குகிறது. Skoda Kushaq எஸ்யூவி-யின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.11.59 லட்சம் ஆகும்.

    MORE
    GALLERIES

  • 99

    மார்ச் 2023-ல் அதிக தள்ளுபடியுடன் கிடைக்கும் 7 சிறந்த எஸ்யூவி-க்களின் பட்டியல்..!

    ஹூண்டாய் அல்காசர் (Hyundai Alcazar) : சமீபத்தில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட்டுடன் கூடிய அல்கசார் எஸ்யூவி-யை ஹூண்டாய் அறிமுகப்படுத்தியது. அதோடு இந்த எஸ்யூவி-யின் 2.0 L petrol வேரியன்ட்களை நிறுத்துவதாக அறிவித்தது. எனவே Alcazar SUV-யின் 2.0 L பெட்ரோல் யூனிட்களின் பழைய ஸ்டாக் வைத்திருக்கும் டீலர்கள் இந்த SUV-யை ரூ.1.25 லட்சம் வரையிலான தள்ளுபடியுடன் வழங்குகிறார்கள். இந்த Suv-யின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.16.70 லட்சம்.

    MORE
    GALLERIES