இந்திய கார் சந்தையில் தனக்கான தனி இடத்தை பிடித்துள்ளது ஹோண்டா சிட்டி கார். இப்போ டிசைன், லுக் மற்றும் வசதிகளில் அடுத்த நிலைக்கு இந்த கார் கொண்டு செல்லப்பட்டுள்ளது. புதிய ஹோண்டா சிட்டி கார் ஐந்தாம் தலைமுறை மாடலாக வந்துள்ளது. தோற்றத்திலும் பிரம்மாண்டம் கூடியுள்ளது. டைமண்ட் கட் க்ரில், எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், கார்பனட ரேப்ட் பம்பர்கள், செவ்வக வடிவிலான ஃபோக் லேம்புகள் மற்றும் க்ளஸ்ட்டர்கள் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரின் முகப்பை முற்றிலுமாக புதிதாக மாற்றி இருக்கிறது.
புதிய ஹோண்டா சிட்டி காரின் உட்புறமும் மிகவும் பிரிமீயமாக உள்ளது. கருப்பு மற்றும் பீச் என இரட்டை வண்ண பாகங்களுடன் வசீகரிக்கிறது. 506 லிட்டர் பூட் ஸ்பேஸ் இதன் மற்றொரு சிறப்பம்சம். அசத்தலான உட்புற வடிவமைப்பு கண்டிப்பாக வாடிக்கையாளர்களை மெய் மறக்க செய்யும். பின்னால் அமர்பவர்களின் வசதிக்காக ரியர் ஏசி வெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஹோண்டா சிட்டி கார் பிஎஸ்-6 மாசு விதிகளுக்கு ஏற்ற புதிய பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 119 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
புதிய ஹோண்டா சிட்டி கார் சிறப்பான மைலேஜ் தரும் மிட்சைஸ் செடான் கார் மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பெட்ரோல் கார் லிட்டருக்கு 17 கிலோ மீட்டருக்கு மேல் மைலேஜ் வழங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஹோண்டா சிட்டி காரில் எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ரியர் வியூ மிரர்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவை உள்ளன.
மேலும், 20.3 cm டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல டிஎஃப்டி எம்ஐடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகள் உள்ளன. புதிய ஹோண்டா சிட்டி காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எமெர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல் லைட், பிரேக் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் காரில் ராடார் சென்சார் வசதி இல்லை என்றாலும் இதில் பொருத்தப்பட்ருக்கும் வைட்ரேஞ்ச் கேமரா ஓட்டுநருக்கு சிறப்பான ஒன்றாக இருக்கும். இத்தனை சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ள புதிய ஹோண்டா சிட்டி கார்களின் விலை குறித்த விபரங்களை இப்போது பார்க்கலாம். புதிய ஹோண்டா சிட்டி கார்கள் 11.45 லட்சத்திலிருந்து 15.97 லட்சம் ரூபாய் வரை விலையாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இது எக்ஸ் ஷோ ரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.