முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » டாடா ஏஸ்-க்கு போட்டியாக மாருதி சுசுகியின் சூப்பர் கேரி மினி டிரக்...1

டாடா ஏஸ்-க்கு போட்டியாக மாருதி சுசுகியின் சூப்பர் கேரி மினி டிரக்...1

மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் சூப்பர் கேரி மினி டிரக்கை களமிறக்கியுள்ளது மாருதி சுசுகி நிறுவனம் 5.16 லட்சம் ரூபாய் விலையில் களமிறக்கியுள்ளது.

 • 16

  டாடா ஏஸ்-க்கு போட்டியாக மாருதி சுசுகியின் சூப்பர் கேரி மினி டிரக்...1

  மாருதி சுசுகி நிறுவனம் மக்களுக்கு தேவைப்படும் அனைத்து வகையான வாகனங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. பயணிகள் வாகனம் மட்டுமல்ல வர்த்தக வாகனப் பிரிவிலும் வாகனங்களை வழங்கி வருகிறது மாருதி சுசுகி நிறுவனம். கடந்த 2016ஆம் ஆண்டு சூப்பர் கேரி டிரக் என்ற பெயரில் சுமை தூக்கும் வாகனங்களை அறிமுகம் செய்தது. கடந்த ஏழு ஆண்டுகளில் 1.58 லட்சம் சூப்பர் கேரி டிரக்குகள் விற்பனையாகியுள்ளன. தற்போது அந்த சூப்பர் கேரி டிரக்குகளை மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது மாருதி சுசுகி நிறுவனம்.

  MORE
  GALLERIES

 • 26

  டாடா ஏஸ்-க்கு போட்டியாக மாருதி சுசுகியின் சூப்பர் கேரி மினி டிரக்...1

  புதிய சூப்பர் கேரி மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு கூடுதலாக கேப் உடன் கூடிய சேஸ் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. சூப்பர் கேரி டிரக்கில் பொருத்தப்பட்டுள்ள புதிய 1.2-லிட்டர், 4-சிலிண்டர், K-சீரிஸ் டூயல் ஜெட், டூயல் VVT என்ஜின் அதிகபட்சமாக 6000RPM-ல் 80.7 PS பவர் மற்றும் 2900RPM-ல் 104.4 Nm டார்க் திறனை வெளிப்படுத்துகிறது

  MORE
  GALLERIES

 • 36

  டாடா ஏஸ்-க்கு போட்டியாக மாருதி சுசுகியின் சூப்பர் கேரி மினி டிரக்...1

  இது பெட்ரோல் எஞ்சின் ஆகும். அதே போல் சிஎன்ஜி எஞ்சினிலும் கிடைக்கிறது. சிஎன்ஜி எஞ்சின் 6000rpm-ல் 71.6 ps பவர் மற்றும் 2800rpm-ல் 95 Nm டார்க் திறனை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இந்த என்ஜின் பயணிகள் கார்களான வேகன் ஆர் மற்றும் இக்னிஸில் உள்ள எஞ்சின் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 46

  டாடா ஏஸ்-க்கு போட்டியாக மாருதி சுசுகியின் சூப்பர் கேரி மினி டிரக்...1

  சூப்பர் கேரி மினி டிரக் 3,800 மிமீ நீளம், 1,562 மிமீ அகலம், 1,883 மிமீ உயரம் மற்றும் 2,110 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்டுகளின் அதிகபட்ச சுமை தாங்கும் திறன் முறையே 740 கிலோ மற்றும் 625 கிலோ என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேப் சேஸிஸ் உள்ளதால் வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்ப பாடி கட்டுமானத்தை மேற்கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 56

  டாடா ஏஸ்-க்கு போட்டியாக மாருதி சுசுகியின் சூப்பர் கேரி மினி டிரக்...1

  முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் இன்ஜின் இம்மொபைலைசர் உள்ளிட்டவையுடன். சிஎன்ஜி மாடலில் 5 லிட்டர் கொள்ளளவு பெற்ற அவசர தேவைகளுக்கான பெட்ரோல் டேங்க் சேர்க்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 66

  டாடா ஏஸ்-க்கு போட்டியாக மாருதி சுசுகியின் சூப்பர் கேரி மினி டிரக்...1

  இந்த சூப்பர் கேரி மினி டிரக்கின் பெட்ரோல் மாடல் இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கின்றன.கேசோலின் கேப் சேசிஸ் மாடல் ரூ.5.16 லட்சம் விலையிலும், கேசோலின் டெக் மாடல் 5.31 லட்சம் ரூபாய்க்கும் கிடைக்கிறது. அதே போல் சிஎன்ஜி மாடலில் கேப் சேசிஸ் மாடல் 6.16 லட்சத்திற்கும், டெக் மாடல் 6.31லட்சம் ரூபாய்க்கும் கிடைக்கிறது. இந்த சூப்பர் கேரி மினி டிரக் டாடா ஏஸ்-க்கு நிச்சயம் போட்டியை ஏற்படுத்தும்.

  MORE
  GALLERIES