கவாஸாகி மோட்டார்ஸ் (kawasaki Motors) தனது Versys 1000-ன் அப்டேட்டட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது அறிமுகப்படுத்தி உள்ள 2023 Versys 1000 மாடல் இதுவரை விற்கப்பட்டு வந்த வெர்ஷனை போலவே இருந்தாலும் சில சிறிய அப்டேட்ஸ்களை பெற்றுள்ளது. மேலும் பழைய மாடலோடு ஒப்பிடுகையில் சற்று விலை உயர்ந்ததாகவும் இருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள கவாஸாகி டீலர்ஷிப்களில் 2023 கவாஸாகி வெர்சிஸ் 1000-க்கான புக்கிங்ஸ்களை நிறுவனம் தொடங்கியுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய 2023 Kawasaki Versys 1000 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.19 லட்சம் ஆகும். இந்த பைக் இந்திய சந்தையில் சிங்கிள் வேரியன்ட் மற்றும் ஒரு புதிய டூயல்-டோன் கலர் ஆப்ஷனில் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கலர் ஆப்ஷனானது மெட்டாலிக் மேட் கிராபென் ஸ்டீல் கிரே வித் எபோனி பிளாக் ஆகும்.
டிசைன் மற்றும் அம்சங்கள் வடிவமைப்பின் அடிப்படையில் 2023 கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கானது டூயல் LED ஹெட் லேம்ப்ஸ் மற்றும் அட்ஜெஸ்ட் செய்ய கூடிய விண்ட்ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் ஒரு புதிய ஃபுல் டிஜிட்டல் LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெற்றுள்ளது, இதில் அனலாக் டேக்கோமீட்டர் (analogue tachometer) இடம் பெற்றுள்ளது. ப்டேட்டட் செய்யப்பட்ட Versys 1000 பைக்கில் பிரேக்கிங் அம்சத்திற்காக ரேடியல்-மவுண்ட் ஃப்ரன்ட் பிரேக் காலிப்பர்ஸ், ட்ராக்ஷன் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், ஏபிஎஸ், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு உள்ளன.
2023 Versys 1000-ன் ஸ்பெக்ஸ் : இயந்திர ரீதியாக, இந்த புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்குள் மாற்றங்கள் செய்யப்படவில்லை. இந்த பைக் 1043சிசி லிக்விட்-கூல்டு இன்லைன் ஃபோர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 9,000 rpm-ல் 118.2 பிஎச்பி பவரையும், 7,500 rpm-ல்-ல் அதிகபட்சமாக 102Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த எஞ்சின் 6-ஸ்பீட் டிரான்ஸ்மிஷன், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் சிஸ்டமுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எஞ்சின் ஸ்பெக்ஸ்களை போலவே ஹார்ட்வேர்ஸ் மாறாமல் உள்ளது.
ஆங்கரிங் செட்டப்பில் ( anchoring setup) டூயல் ரேடியல்-மவுண்ட், மோனோபிளாக், அப்போஸ்ட் 4-பிஸ்டன் காலிப்பர்ஸ் கொண்ட இரட்டை 310 மிமீ டிஸ்க்குகள் மற்றும் பின்புறத்தில் சிங்கிள்-பிஸ்டன் காலிபர் கொண்ட சிங்கிள் 250 மிமீ ரோட்டார் உள்ளிட்டவை அடங்கும். இதற்கிடையே கவாஸாகி இந்திய சந்தையில் 2023 ZH2 மற்றும் ZH2 SE ஆகிய பைக்குகள் முறையே ரூ.23 லட்சம் மற்றும் ரூ.27.22 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.