பியூஜியோட் : பிரான்ஸ் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான பியூஜியோட் நிறுவனம் 1882 ஆம் ஆண்டு கார் தயாரிப்பு பணியில் கால் பதித்தது. முதலில் பைக் தயாரிப்பு நிறுவனமாக தொடங்கப்பட்டு பின்பு கார் தயாரிப்பு நிறுவனமாக பரிணாமம் அடைந்துள்ளது. இந்த நிறுவனம் முதன் முதலில் நீராவியால் இயங்கும் இரண்டு சக்கர வாகனத்தை தயாரித்தது. அதன் பிறகு உலகின் நம்பர் 1 கார் தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து இன்றும் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
தத்ரா : 1850 ஆம் ஆண்டு செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த நிறுவனமான தத்ரா வாகன தயாரிப்பு தொழிலில் இறங்கியது. டாக்கர் ரேலி எனப்படும் பந்தயத்தில் கலந்து கொள்வதற்கான வாகனங்களை தயாரித்த இந்த நிறுவனத்தின் கார்கள் பிரபலங்கள் மத்தியில் மிகப் பிரசித்தம். கார் விரும்பியான அடால்ஃப் ஹிட்லர் செக்கோஸ்லாவியா சென்ற போது தானே விரும்பி தத்ரா காரில் பயணம் செய்தாராம். இன்று தத்ரா அவ்வளவு பிரபலமாக இல்லை.
ஸ்கோடா : இன்றைய காலத்திலும் தொழில்நுட்பம், ஸ்டைல் அன்ட் லுக் என கலக்கி வருகின்றன ஸ்கோடா கார்கள். இந்த நிறுவனம் 1896 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் மனிதர்கள் மிதிக்கும் வெலோசிபெட்ஸ் என்ற வாகனங்களை தயாரித்தது ஸ்கோடா நிறுவனம். இது மனிதர்கள் மிதித்து பயணம் செய்யும் சைக்கிளைப் போன்றதொரு வாகனம். அதன் பிறகு டிரக்குகள் தயாரிக்க தொடங்கி மெல்ல கார் தயாரிப்பு நிறுவனமாக இப்போது வளர்ந்துள்ளது
மெர்சிடிஸ் பென்ஸ் : இன்று உலகின் நம்பர் 1 சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 1883 ஆம் ஆண்டு கியாஸ் எஞ்சின் தயாரிப்பு நிறுவனமாக தொடங்கப்பட்டது. நிறுவனம் தொடங்கப்பட்ட 3ஆண்டுகளில் பிரத்யேகமான மாடல்களில் கார்களை தயாரிக்கத் தொடங்கியது பெஸ் நிறுவனம். இன்று வரை உலகின் அசைக்க முடியாத சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக வலம் வருகிறது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்.
லேண்ட் ரோவர் : நீராவி மோட்டார் தயாரிப்பு கம்பெனியாக தொடங்கப்பட்டது தான் லேண்ட் ரோவர் நிறுவனம். பின்பு பலதரப்ப்பட்ட கார்களை, பல பெயர்களில் தயாரித்து சந்தைப்படுத்தி வந்தது இந்த நிறுவனம். 2008 ஆம் ஆண்டு லேண்ட் ரோவர் என்ற பெயரை இந்தியாவின் முன்னனி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா நிறுவனம் வாங்கி இன்று வரை பயன்படுத்தி வருகிறது.
ஃபோர்டு மோட்டார் கம்பெனி : உலகம் முழுவதும் இன்றுவரை வெற்றிகரமான கார் தயாரிப்பு நிறுவனமான திகழ்ந்து வருகிறது ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம். 1903 ஆம் ஆண்டு ஹென்றி ஃபோர்டு என்பவரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், பல நேரங்களில் பலதரப்பட்ட சிக்கல்களை சந்தித்தாலும் இன்று வரை பல கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது ஃபோர்டு நிறுவனம். .போர்டு நிறுவனம் இன்று வரை பல புதிய மாடல்களை அறிமுகம் செய்து கொண்டு தான் இருக்கிறது.