

புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்திலிங்கம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவு கேட்டு அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சரா ரெட்டி பிரசாரத்தில் ஈடுபட்டார். (படம்: புதுச்சேரி- இளவமுதன்)


பிரசாரத்தில் புதுச்சேரியின் முதலமைச்சர் நாராயணசாமியின் மகள் விஜயகுமாரி, மகிளா காங்கிரஸ் உறுப்பினர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர். (படம்: புதுச்சேரி- இளவமுதன்)


அப்போது பேசிய அப்சரா ரெட்டி, மோடி ஆட்சியால் இந்தியாவில் 8 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன.<br />பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை என கூறினார். (படம்: புதுச்சேரி- இளவமுதன்)


துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை என்பது முழுக்க அரசியல் சாயம் பூசப்பட்டது என்றும் அவரது மகன் தேர்தலில் தோல்வியுற வேண்டும் என்பதே நோக்கம் என்றும் அப்சரா ரெட்டி தெரிவித்தார். (படம்: புதுச்சேரி- இளவமுதன்)