உலகம் முழுவதும் கொரோனாவிற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது நம்மை பல வழிகளில் சோம்பலாக்கிவிட்டது. பெருந்தொற்றின் காரணமாக நம்மில் பலர் வீட்டில் இருந்தே வேலைப் பார்ப்பதால் அதிக உடல் உழைப்பு இல்லாமல் போய்விட்டது. இதனால் பல உடல்நலப் பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடுவதால், சரியான உடல் தோரணையை அதாவது உடல் அமைப்பை நாம் பராமரிப்பது முக்கியம். இல்லாவிடில் உங்களுக்குப் பலவீனமாக தசைகள், மூட்டு வலி, மன அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே நீங்கள் உங்களது உடலைக் கட்டுக்கோப்பாக அதாவது சீராக வைத்துக்கொள்வது அவசியம். இதனால் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது. இதோ என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்… நல்ல உடல் அமைப்பினால் ஏற்படும் 5 ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகளின் லிஸ்ட்..
ஒவ்வொருவரின் வாழ்விலும் நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். இதற்கு உடல் அமைப்பும் ஒரு காரணமாக அமைகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் இதுக்குறித்து நடத்திய ஆய்வின் படி, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நபர்களுக்கு, சுய மரியாதை பாதிக்கப்படாமல் இருப்பதோடு, தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. இதனால் எந்த பிரச்சனையும் இன்றி வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.
நமது உடல் தோரணையாக இருப்பது நமக்கு ஒருபுறம் ஆற்றல்களை அளிப்பதோடு எதையும் பாசிட்டிவ் எனர்ஜியுடன் எதிர்க்கொள்ளும் சூழலை ஏற்படுத்தும். இதனால் மனச்சோர்வின்றி உங்களது பணிகளை நீங்கள் சிறப்பாக பார்க்க முடியும். இதனால் உங்களின் சுயமரியாதையும் அதிகரிக்கும்.
உடல் பருமனாக இருக்கும் போது நம்மால் எந்த வேலையையும் ஒழுங்காக செய்யமுடியாது. சில மணி நேரம் வேலைப்பார்த்தாலே உடலில் உள்ள ஆற்றல் இழந்து சோர்வை ஏற்படுத்தும். அதே சமயம் உங்களது உடல் கட்டுக்கோப்பாக இருக்கும் பட்சத்தில் உடலுக்குத் தேவையான ஆற்றலை அதிகரிப்பதோடு, அதிக நேரம் எந்த வேலையையும் உங்களால் செய்ய முடியும்.
உடல் பருமனாக இருக்கும் ஒருவருக்கு மூச்சுத்திணறல் போன்ற சுவாச பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது உங்களது வேலையைச் சிறப்பாக செய்து முடிக்கும் திறனைக் குறைக்கிறது. உடல் எடையை சரியாக வைத்துக்கொண்டால் மட்டுமே மூச்சுத்திணறல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் இன்டஸ்ட்ரியல் எர்கோனாமிக்ஸ் படி ,உடல் தோரணை அதாவது உடல் பருமன் உங்களது உற்பத்தித்திறனைப் பாதிக்கிறது. ஒருவேளை உங்களுக்கு உடலில் வலி, காயம், உடல் சோர்வு அல்லது நம்பிக்கையில்லாமல் இருந்தால், வேலையில் கவனம் செலுத்துவதற்கும், உற்பத்தி செய்வதற்கும் நீங்கள் போராட வேண்டும். எனவே நீங்கள் ஒரு சிறந்த உடல் அமைப்பை அதாவது உடல் தோரணையை நீங்கள் சரியாக பின்பற்ற முயற்சித்தாலே உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். மேலும் இது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.எனவே உங்களது வாழ்க்கையில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றால், உடல் அமைப்பையும் சீராக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.